தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27-ஆம் தேதியில் விக்ரவாண்டியில்நடந்து முடிந்ததில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், அதன் தலைவர் நடிகர் விஜய்யின் உரையும்
ஒரு வார காலமாகவே தமிழ்நாடு அரசியலில் விவாதமாக அமைந்த நிலையில், த வெ கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் கட்சி தலைமை அலுவலகம் பனையூர் இல்லத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த், வெங்கட்ராமன் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மாவட்டச் செயலாளர்கள். மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அதில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தீர்மானங்கள் விபரம்:-
தவெக கொள்கைத் திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்,
மதசார்ப்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்கத் தீர்மானம்
ஜனநாயகக் கொள்கைத் தீர்மானம்,
பெண்கள் பாதுகாப்புக் கொள்கைத் தீர்மானம்,
சமூக நீதிக் கொள்கை தீர்மானம். மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கைத் தீர்மானம்,
விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கைத் தீர்மானம்,
கோயமுத்தூர் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து துவங்கக் கோரும் தீர்மானம்,
ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம்,
தமிழ் மொழிக் கொள்கைத் தீர்மானம்,
மக்கள் மீது நிதிச் சுமை திணிப்பு சார்ந்த தீர்மானம்,
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்,
தமிழ்நாடு அரசு மின்சாரக் கட்டணத்தை மாதம் தோறும் கணக்கெடுக்க வலியுறுத்தி மாற்றியமைக்கத் தீர்மானம்,
மதுக்கடைகளை மூட வலியுறுத்தல் கொள்கைத் தீர்மானம்,
உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழ்நாட்டில் அமைக்க வலியுறுத்தும் தீர்மானம்,
தமிழ்நாட்டின் தொன்மப் பெருமைப் பாதுகாப்புத் தீர்மானம், விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம்
கண்ணயமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தும் தீர்மானம்,
முதியோர் நல்வாழ்வை உறுதி செய்யத் தீர்மானம்
இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கைத் தீர்மானம்,
இஸ்லாமியர் வக்ஃபு வாரியம் குறித்து உரிமைத் தீர்மானம்,
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம்,
தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம், ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம், மற்றும் கட்சி நிர்வாகிகள் உயிரிழப்பிற்கு இரங்கல் தீர்மானம்,
நிர்வாகச் சீர்திருத்தம்:-
1.அரசு மற்றும் தனியார் துறை எதுவாகினும், அதில் அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும் எவ்வடிவிலும் இருக்கவே கூடாது. அந்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்தி இலஞ்சம் லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்கப்படும்.
ஜாதி, மதம் மற்றும் பாலினச் சார்பின்மை, அரசு நிர்வாகத்தின் வழிகாட்டும் வழிமுறைகளாகக் கடைப்பிடிக்கப்படும்.
அரசு நிர்வாகம் எப்பொழுதும் முற்போக்குச் சிந்தனையுடனும் அறிவியல் சார்ந்ததாகவும் பன்முகத்தன்மையுடனும் விளங்கும். 2. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான 'நடத்தை விதிமுறைகள்' (con- duct rules) வகுக்கப்பட்டு நெறிமுறைப்படுத்தப்படும்.
3.அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிக்காக உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டது போல. மதுரையில் தலைமைச் செயலகக் கிளை அமைக்கப்படும்.
சமூக நீதி:-
4.சமூக நீதி, மதச்சார்பின்மைக் கோட்பாடுகள் செயல்படுத்தப்படும். சமதர்ம சமத்துவக் கோட்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரான வர்ணாஸ்ரமக் கோட்பாடுகள் எவ்வகையிலிருந்தாலும் அவற்றுக்கு முழு எதிர்ப்புத் தெரிவிக்கப்படும்.
5.ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, அனைவருக்கும் சமமான விகிதாச்சார இடப் பங்கீடு அளிக்கப்படும். ஜாதி, மதம் மற்றும் மொழிவழிச் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவச் சூழலை வழங்குவதுடன் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்துடன், இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களின் முன்னேற்றத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
மொழிக் கொள்கை:-
6.தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஏற்ற கொள்கை.
தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி. வழிபாட்டு மொழி என்பது உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க, உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். 7. தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிக் கல்வி வரை கற்கலாம் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும்.
8.கீழடி மற்றும் கொந்தகை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள, போதுமான நிதி ஒதுக்கப்பட்டு, பழந்தமிழரின் வைகை நதி நாகரிகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை வழங்கப்படும்.
9.விடுதலை நாள் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, தமிழ் மண்ணில் இருந்து ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி. விடுதலைக்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் 'பொதுப் புகழஞ்சலி' செலுத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படும். எனத் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் தற்போது சில மாற்றங்கள் நோக்கி பயணம் படுகிறது, புதுச்சேரியில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் என்.ஆர்.காங்., - த.வெ.க., கூட்டணி அமைப்பதற்கான அச்சாரம் போடப்பட்டு வருகிறது. இதற்கு பின்னணியில் புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாஜி அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்., முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் லாட்டரி சீட்டு மொத்த விற்பனை அதிபர் ஆகிய மூவரும் அரசியல் நகர்வில் பங்கு வகித்து வருகின்றனர். காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்திக்கு நெருங்கிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜாதி வாரிக் கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது" என ஒற்றை வரியில் பதிவிட்டுள்ளார்.
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்காலத் தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் விஜய். அவருக்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார். அந்த கட்சியில் ரவிக்குமார் மற்றும் வன்னியரசு திமுக சார்பு நிலை எடுக்க ஆதவ் அர்ஜுன் நிலை இந்தப் பக்கம் திரும்பியுள்ளது .' எல்லோருக்கும் எல்லாம்' என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல் என்றும் தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என்றும் அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் கட்சியில் மக்கள் பாதை அமைப்பை நடத்திய விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் உ.சகாயம் முன்னாள் அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன், பிரபல சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத், வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் அறிந்த சிலரும் தற்போது வழிகாட்டிகள். இதோடு புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி பிண்ணனியில் ஆதரவு மற்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் இரண்டும் பிளவுகள் ஏற்பட்டு அதில் ஒரு பிரிவு இணைந்து செயல்பட உள்ளது தற்போது தெளிவான நிலை. இனி அரசியல் கட்சிகள் காட்சி மாற்றம் துவங்கும்
போது எடப்பாடி கே பழனிச்சாமி வழக்கு
மீது தீர்ப்பு வராமல் நிலுவையில் உள்ள கோடநாடு கொலை வழக்கு
உள்ளிட்ட சில அதிரடிகள் துவங்கும். பாமக திமுக பக்கம் திருப்பும். அரசியல் மாற்றங்கள் சில எதிர்பார்க்கலாம். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் உடைப்பு ஒரு பக்கம், அதிமுக மற்றும் நாம் தமிழர் வாக்கு வங்கித் தொண்டர்கள் இணைப்பு இனிமேல் படிப்படியாகத் துவங்கும், இதுவே பாஜகவின் எதிர்பார்ப்பு
கருத்துகள்