ஆர்ஜித நிலத்திற்கு சந்தை மதிப்பு வழங்க வேண்டி சின்ன உடைப்பு மக்கள் தாக்கல் செய்த மனுக்கள் ஆக்கிரமிப்பு அகற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை
விமான நிலையம் விரிவாக்கம் செய்ய நில ஆர்ஜித நடவடிக்கைகள் முடிந்த நிலையில் இழப்பீடு பெற்ற பின்னர் மாற்று இடம் கேட்டு வீடுகளைக் காலி செய்யாமல்
போராட்டம் நடத்திய சின்ன உடைப்பு கிராம மக்களை அப்புறப்படுத்த வருவாய் துறையினர், காவல்துறை உதவியுடன் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தியதால் முயற்சி ஒரு வாரம் கைவிடப்பட்டது. கிராம மக்கள் சார்பாக சுமார் 250 நபர்கள் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ரிட மனு தாக்கல் செய்த நிலையில் அவசர வழக்காக நீதிபதி மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அந்த மனுக்களில், நிலம் கையகப்படுத்தப்பட்டது ஆனால் எங்களுக்கு மாற்று இடங்கள் ஏதும் வழங்காமல் மிக குறைவான அரசு மதிப்பில் இழப்பீட்டுத் தொகையே வழங்கப்பட்டுள்ளது. சந்தை விலை தரவில்லை எனவே எங்களை இங்கிருந்து வெளியேற்று வதற்கு முன்னர் மாநகராட்சிப் பகுதிகளில் மாற்று இடம் வழங்க பரீசீலனை செய்ய வேண்டும். அதுவரை தங்களை வெளியேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவின் பேரில் நீதிபதி மஞ்சுளா விசாரணை செய்தபோது
இடைக்காலமாக இங்குள்ள மக்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்தார். அரசு அலுவலர்கள் உரிய சட்டவிதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக நிலம் ஆக்கிரமிப்பு செய்வதற்கான விதி எண்.4 உள்ளது.
அதனை முறையாக பயன்படுத்தி அவர்களுக்கு உரிய காலத்தில் நோட்டீஸ் வழங்க வேண்டும். அதன் பிறகு உரிய சட்டவிதிகளைப் பின்பற்றி நீங்கள் அக்கிரமிப்பாளர்களை காலி செய்ய நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதுவரை இவர்களை சின்ன உடைப்பு கிராமத்திலிருந்து வெளியேற்றக் கூடாது என இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை டிசம்பர் மதத்திற்கு தள்ளி வைத்தார்.
கருத்துகள்