மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவில் நியோமேக்ஸ் வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக கையாளும் விதமாக மாற்றுப்பணியாக சென்னையிலிருந்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிஷா நியமிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘நியோமேக்ஸ் ’ வழக்குகளை விசாரிக்க சிறப்பு அறைகள் ஒதுக்கி, சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என, பணியாற்றினர். இதுவரையிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியோமேக்ஸ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் ரூபாய்.223 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இச்சூழலில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிஷா சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு நபர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் இறுதிகட்டத்தில் திடீரென மாற்றியது ஏன் என்ற கேள்வி மற்றும் சர்ச்சை எழுந்தது. வழக்கில் சிக்கிய முக்கிய நபர்களின் அழுத்தம் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட நபர்கள் க...
RNI:TNTAM/2013/50347