முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபலத் திரையுலக நடிகரும், பல்கலை வித்தகரும் நமது நட்பின் சகோதரர் நடிகர் ராஜேஷ் காலமானார்

பிரபலத் தென்னிந்தியத் திரையுலக நடிகரும்,  தமிழ்நாடு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவரும்     பல்கலை வித்தகரும்,  நமது நட்பின் சகோதரருமான  நடிகர் ராஜேஷ்


அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கிடைத்த நொடி முதல் மிகுந்த மனவேதனையளிக்கிறது.

சின்னத்திரை, டப்பிங் கலைஞர் என பன்முகத்தன்மையுடன் கடந்த 47 ஆண்டுகள் கலைப்பயணத்தில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ராஜேஷ் அவர்களுடன் பலமுறை சந்திப்பு இருந்தாலும்,


இறுதியில் சந்திப்பு சென்னையில் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் சந்தித்த சந்திப்பு நெஞ்சில் நிழலாட அண்ணன் நடிகர் ராஜேஷ் இன்று நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி கேட்டு மனம் கனத்தது.  



அவரது நினைவுகள் இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றன. எழுபதைத் தாண்டினாலும் உள்ளத்தில் ஓர் இளமை, இனிமை அதுவே அண்ணன் ராஜேஸ்.   அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மூலம் கதையின் நாயகனாக  அறிமுகமான 'கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தில் கிராமத்து முகமும் உடல்வாகும் கொண்ட நடிகராக  மன்னார்குடியில் பிறந்த, காரைக்குடியில் படித்து, சென்னை வாழ்க்கையைத் துவங்கிய  அண்ணன் ராஜேஷ்.

அடுத்து, இயக்குனர் இமயம் கே.பாலசந்தரின் 'அச்சமில்லை அச்சமில்லை' திரைப்படத்தில் எதிர்மறைக் கதாநாயகனாக புதிய திசை நோக்கி பயணித்த ராஜேஷின் திரையுலக வாழ்க்கையில் மற்றுமொரு எதிர்மறை திரைப்படம் மைல் கல்லாக அமைந்த , 'மக்கள் என் பக்கம்'. திரைப்படத்தில் வில்லன் ராஜேஷ். கதாநாயகன் சத்யராஜ்.


மார்க்ஸியக் கொள்கை  நேசித்த கம்யூனிஸ சிந்தனையாளர் என திரையுலகில் அடையாளப் படுத்தப்பட்டவர். ஆசிரியர் பணியிலிருந்து பின்னர் திரையுலகில் நுழைந்தவர், அண்ணன் ராஜேஷ். 

உலகளாவிய சிறந்த நூல்கள் சேமிப்பு காரணமாக அவருடைய நூலகத்தில் அழகழகாய் வரிசைப்படுத்த ப்பட்டிருக்கும், 

அத்தனை சிறந்த படிப்பாளி. மிகச்சிறந்த கட்டுரையாளரும் கூட. திரைப்படக் கல்லூரியில் சிலகாலம் தலைவர், அவருள் ஆகச் சிறந்த ஒரு எழுத்தாளரும் அவரிடம் ஒளிந்திருந்தார்.

 ஒரு கால கட்டத்தில் அஸ்ட்ராலஜி மற்றும் ஜோதிடம் குறித்த தீவிர நேசிப்பிலும்,  தனி வாசிப்பில் இறங்கியவர், அஸ்ட்ராலஜி- அறிவியல் இரண்டும் வேறுவேறல்ல என நிறுவும் முயற்சியில், 'அதற்கான ஆதாரங்கள் இவை'  எனப் பேசத் தொடங்கினார். 

திரைப்படத்துறையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டே யூ டியூப் சேனல் உலகில் சாதனையாளர்களாக திரு. சித்ரா லட்சுமணனும், மற்றும் திரு.ராஜேஷூம் ஒரே காலகட்டத்தில் இயங்கியவர்கள் எனலாம் 


ஒருபக்கம் சித்ரா லட்சுமணன், சொந்தமாக டியூப் சேனல் தொடங்கி, சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளை நேர்காணல் செய்தார். ஆன்மிகம், தியானம், யோகம், ஜோதிடம், மருத்துவம், முத்திரை தொடர்பான நேர்காணல்கள், அது தொடர்பான விழாக்களில் பங்கேற்பு என இன்னொரு பக்கம் திரு. ராஜேஷ் இயங்கி வந்தார். 

அவரது ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம்' சேனலில் பிரபல பத்திரிக்கையில் அண்ணன் ராஜேஷின் நேர்காணல்கள் அதிகளவில் வெளியானது.

சினிமாக்காரராக இருக்கும் போது பத்தோடு ஒன்றாக பார்வைக்கு இருந்தவர், தோழர் ராஜேஷாக தெரிந்த போது,  பல விவாதம் மூலம் நெருக்கமானார்.  ஒருநாள் பேசும்போது ' சென்னையில் காவல்துறை உதவி ஆணையராகப் பணியாற்றும் திரு. அசோக், என்னுடைய  சகோதரர் தான்' என்று கூறினார் . 

திரு. அசோக் (பணி ஓய்வு) திரு.ராஜேஷ் போலவே தோற்றமும் நிறமும் உள்ளவர்  திரு. ராஜேஷ் போலவே  அசோக்கின் குணமும், பேச்சும் மென்மையானது என்பதே வியப்பின் காரணமானாலும். அவர் மீசைதான் பெரிதாக இருக்கும்.

அதிர்ந்தே பேசாத திரு. அசோக், சென்னையின் முக்கியமான அபாயகரமான பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பிரிவில் ACP யாக பணியாற்றி பல வழக்குகள்  கையாண்டவர் 

90 ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடர்பான. செய்தியைத் தாண்டி ஒருநாளும் அவர் பேசியதே இல்லை, அதனால், 'தான் ராஜேஷின் சகோதரர்' என்று ஒருநாளும் அவர் கூறியதில்லை. என்னளவில் எப்போதும்அண்ணன் தான் நீங்கள்.1985-ஆம ஆண்டில் சென்னை கே. கே. நகர் அருகில் திரைப்படப் படப்பிடிப்பிற்காக ஒரு பங்களா கட்டிய முதல் தமிழ் நடிகர் ராஜேஷ் ஆவார். இது அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது. அந்த வீட்டில் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றன. பின்னர் 1993-ஆம் ஆண்டில் வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கிய போது தான் அதை விற்றார். 90 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், இவருடைய நண்பர் ஜேப்பியார் அறிவுறுத்தியபடி, வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கினார். பின்னர் ஒரு உணவகத்தையும், கட்டுமான வணிகத்தையும் தொடங்கினார். 1987 முதல் 1991 வரை வி.என். ஜானகியை ஆதரித்து அரசியலில் தீவிரமாகவே  செயல்பட்டார் காரல் மார்க்ஸின் ஆதரவாளராக இங்கிலாந்து சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.இராஜேஷ் வில்லியம்ஸ் எனும் அண்ணன் ராஜேஷ் மனைவி ஜோன் சிலிவியா

2012 ஆம் ஆண்டு காலமான நிலையில் 13 ஆண்டு கடந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.

அவரது ஆன்மாவுக்கு நல்ல அமைதி கிடைக்கட்டும். 


"காத்து பட்டாலே கறையாதோ கற்பூரம் கரையுது என் மனசு உன்னாலே...". பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...