முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை

நீதிபதிகள் என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய மூன்று நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் மே மாதம் 26 ஆம் தேதி பரிந்துரை செய்தது. 


முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, பேலா திரிவேதி ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றதால் உச்ச நீதிமன்றத்தில் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் உள்ள நிலையில். இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமனம் செய்யப் பரிந்துரை செய்தது. குஜராத் மாநிலத்தின்  நீதிபதி என்.வி.அஞ்சாரியா  தற்போது கர்நாடக மாநிலத்தின் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி 
இராஜஸ்தானைச் சேர்ந்த நீதிபதி விஜய் பிஷ்னோய் தற்போது கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி அதுல் எஸ்.சந்துர்கர் தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி. அஞ்சாரியா ஆகஸ்ட் மாதம் 1988 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் எஸ்.என்.ஷெலட்டின் கீழ் வழக்கறிஞர் பயிற்சி செய்யத் தொடங்கினார். அவர் அரசியலமைப்பு, சிவில், தொழிலாளர் மற்றும் சேவை விவகாரங்களைக் கையாண்டார். உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் குஜராத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அமைப்புகளுக்கான நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார்.


நவம்பர் மாதம் 21 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில்  நீதிபதி அஞ்சாரியா குஜராத் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் செப்டம்பர் மாதம் 6, ஆம் தேதி 2013 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியானார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, 2024 ஆம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றார் நீதிபதி பிஷ்னோய் ஜூலை மாதம் 8, ஆம் தேதி 1989 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மற்றும் ஜோத்பூரில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் சிவில், மற்றும் குற்றவியல், அரசியலமைப்புச் சட்டத்தின், சேவை மற்றும் தேர்தல் வழக்குகள் உட்பட பல்வேறு விஷயங்களைக் கையாண்டார்.

அவர் கூடுதல் மத்திய அரசு நிலை ஆலோசகராக (2000–2004) பணியாற்றினார் மற்றும் கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், முத்திரைகள் மற்றும் பதிவு, கூட்டுறவு, தொழிலாளர், போக்குவரத்து மற்றும் கலால் வரி போன்ற ராஜஸ்தான் அரசின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.ஜனவரி 8, 2013 அன்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி பிஷ்னோய், அடுத்த இரண்டாடுகளில் நிரந்தர நீதிபதியானார். தொடர்ந்து கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பதவியேற்றார்.நீதிபதி சந்தூர்கர் ஜூலை 21, 1988 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்து, மும்பையில் உள்ள மூத்த வழக்கறிஞர் பி.என். நாயக்கின் அலுவலகத்தில் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். பின்னர் அவர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

நீதிபதி சந்தூர்கர் இதுவரை இரண்டு சட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஒன்று மகாராஷ்டிரா நகராட்சி மன்றம், நகர் பஞ்சாயத்துகள் மற்றும் தொழில்துறை டவுன்ஷிப்கள் சட்டம், 1965 மற்றும் மற்றொன்று மகாராஷ்டிரா வாடகை கட்டுப்பாட்டு சட்டம், 1999.

அவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கொலிஜீயத்தின் இந்த பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டால், நீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் செயல்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...