காரைக்குடி வள்ளல் டாக்டர் அழகப்பர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில்
பவளவிழாக் கொண்டாட்டம்
கோட்டையூர் வாழ் லண்டன் பாரட்லா வள்ளல் டாக்டர் ஆர்.எம். அழகப்பச் செட்டியாரால் ஜூலை மாதம் 4 ஆம், தேதி 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நடந்த பள்ளி, முந்தைய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கான ஆய்வகமாகச் செயல்பட்டது. துவக்கத்திலிருந்தே, பத்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி வழங்கப்பட்டது.
மேல்நிலைக் (+2) கல்வி 1978 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்துடன் துவங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு கல்வி (NU2) துறை எண். 110481/NU2/85-15, தேதியிட்ட 25.மார்ச்.1988 அரசு உத்தரவின் படி , வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகத்தில் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியை அரசாங்கம் கையகப்படுத்தி.
அழகப்பா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட பின்னர், அரசு பள்ளியை அழகப்பா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்தது. இந்தியாவிலேயே பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரே அரசு பள்ளி அழகப்பா மாதிரிப் பள்ளி மட்டுமேயாகும்
அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியின் செயல்பாட்டைக் கவனிக்க எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளதன்படி, அழகப்பா பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியில் பி.எட் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆய்வகமாகச் செயல்பட்டு வருகிறது.
அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி, தமிழ்நாடு அரசின் ஆசிரியர்களுக்கு சம்பள மானியம் வழங்கும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
தற்போது, பள்ளியில் 38 ஆசிரியர்களும் ஒரு ஊழியரும் பணிபுரிகின்றனர்.
பள்ளியின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் செய்கிறது.
இந்தப் பள்ளியானது, அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரிக்கு (முன்னர் பயிற்சிக் கல்லூரி) எதிரே உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இந்த நிலையில் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியின் 75வது ஆண்டு பவள விழாக் கொண்டாடப்பட்டது. அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி தலைமை ஏற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
துணை வேந்தர் டாக்டர் இரவி, முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா, முன்னாள் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர் குணசேகரன் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டார். தொடர்ந்து டாக்டர் வள்ளல் அழகப்பர் சிலை, நவீன கணினி ஆய்வுக்கூடம் திறப்பு விழா நடந்தது. இரணடாவது நாளான நேற்று, மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பள்ளி நினைவு நுழைவு வாயிலில் உள்ள வளைவைத் திறந்து வைத்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன்,
திருவண்ணாமலை குன்றக்குடி ஆதின பிரான் மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாதிபதி பொன்னம்பல அடிகளார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி காரைக்குடி மாநகராட்சி மன்றத்தினர் உள்ளிட்ட பலருடன்
கடந்த காலத்தில் இதே பள்ளியில் படித்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல பணிகளில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ மாணவிகள் முன்னாள் பணி செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்யோது பணி செய்துவரும் ஆசியர்கள் கலந்து கொண்டனர்
மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.35 ஆண்டுகள் நிறைவு செய்யும் பவள விழா (Coral Jubilee) கண்ட பள்ளி 40 ஆண்டுகளில் ஒரு ரூபி விழா (Ruby Jubilee) 45 ஆண்டுகள் ஒரு சபையர் விழா (Sapphire Jubilee) 50 ஆண்டுகள் ஒரு பொன் விழா (Golden Jubilee) 55 ஆண்டுகள் ஒரு மரகத விழா (Emerald Jubilee) 60 ஆண்டுகள் ஒரு வைர விழா (Diamond Jubilee) 65 ஆண்டுகள் ஒரு நீல சபையர் விழா (blue sapphire Jubilee) 70 ஆண்டுகள் ஒரு பிளாட்டினம் விழா (Platinum Jubilee) 75 ஆண்டுகள் ஒரு பவள விழா (Diamond Jubilee) 80 ஆண்டுகள் ஒரு அமுத விழா (Oak Jubilee). 100 - நூற்றாண்டு விழா (Centenary) காணட்டும். என பலரும் வாழ்த்தினர்.
































கருத்துகள்