பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூட்டிய சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம்
ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவித்த நிலையில் அதன் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி நாளை பாமக மாநில பொதுக்குழுக் கூட்டம் நாள் :
09.08.2025 சனிக்கிழமை நேரம் : முற்பகல் 11 மணி அளவில் இடம் : கான்ஃளுயன்ஸ் (கூட்டம்) அரங்கம், மாமல்லபுரத்தில் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இதையடுத்து பா.ம.க. பொதுக்குழுவை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூட்டுவதற்கு எதிராக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் WP Number 30170/2025 மற்றும் WMP/126898/2025 WMP/33841/2025. ன் படி மனுதாரர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் DR.K.ARUL, J.SATHIYA VIMAL, R.SANGEETHA, S.SIVA KUMAR, V.ARCHANA, DR.S.VIDYA, MAHAVEER SHIVAJI, VSGOPU. ஆகியோர் மூலம் தாக்கல் செய்து எதிர் தரப்பினராக 1) DR.R.ANBUMANI. 2) அரசாங்கத்தின் செயலாளர் 3) காவல்துறை இயக்குநர் ஜெனரல். 4) காவல்துறை கண்காணிப்பாளர். ஆகியோர் மீது மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், 'தன்னைத்தானே தலைவர் எனச் சொல்லிக் கொண்டு மருத்துவர் அன்புமணி செயல்படுகிறார். எனவும் மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி நடக்கும் பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டதன்படி இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மருத்துவர் ராமதாசும், மருத்துவர் அன்புமணி ராமதாசும் தனது சேம்பரில் இன்று மாலை 05.30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அனைவரின் நலனுக்காக இருவரிடமும் தனித்தனியாகப் பேச உள்ளேன். உடனடியாக மருத்துவர் ராமதாஸைக் கிளம்பி வரச் சொல்லுங்கள். இருவரையும் சந்திக்கும் போது கட்சிக்காரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் யாரும் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மருத்துவர் அன்புமணி இன்று ஆஜராவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் 'உடல்நலக்குறைவு காரணமாக வர முடியாததால் தான் காணொளியில் ஆஜராக விரும்புவதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோபு தெரிவித்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் மருத்துவர் 'ராமதாஸ் காணொளியில் ஆஜரானால் ஏற்கிறேன்' என ஒப்புதல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ் காணொளிக் காட்சியில் ஆஜரானார். இருவரிடமும் சுமார் ஒரு மணிநேரம் நீதிபதி விசாரணை நடத்தினார். மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி ஆகியோர் தன் தரப்பு கருத்துக்களை நீதிபதி முன்வைத்த நிலையில் விசாரணை முடிந்து மருத்துவர் அன்புமணி சென்றார் .
இருவரும் இந்த வழக்கில் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்திருக்கும் நிலையில் இன்று சற்று நேரத்தில் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கலாம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு பொதுக்குழுவிற்கு எதிராக தடை விதிக்க வில்லை ஆகவே நாளை பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிப்பது தொடர்பாக எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என தக
தடை உத்தரவு பிறப்பிக்கப்படாததால் நாளை பொதுக்குழு நடைபெறும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு தகவல்.பொதுக்குழுவை தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தார் - உயர்நிதி மன்ற நீதிபதி
தனது உத்தரவில் பாமக பொதுக்குழு நடத்தும் தலைவர் மருத்துவர்.அன்புமணிக்கு உரிமை உள்ளது... வழக்கு தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை, வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதிகாரமும் இல்லை, சரியான ஆவணங்களும் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை, மேலும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய வழக்கு இது இல்லை சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தார்.




















கருத்துகள்