திருநெல்வேலி மாவட்டம் காவல் நிலையம் உள்ளிட்ட 2 இடங்களில் பெட்ரோல் குணடு வீச்சு
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இன்று மாலை நான்கு மணியளவில் தச்சநல்லூர் பகுதிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து நபர்கள் கொண்ட ஒரு கும்பல் தச்சநல்லூர் காவல் நிலையம் அருகில் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில் தொடர்ந்து தாழையூத்து வாகன சோதனைச் சாவடிக்குச் சென்ற அதே கும்பல் அங்கு குறிவைத்து பெட்ரோல் குண்டை வீசியதாகக் அறியப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தச்சநல்லூர் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பாகிறது.
அதேபகுதியில் நேற்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக மது அருந்திக் கொண்டிருந்த ஒரு கும்பலை காவல்துறையினர் கைது செய்ததாகவும் அதில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரின் தம்பி அவனது ஆதரவாளர்களுடன் வந்து காவல் நிலையத்தை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசியதாக முதற்கட்ட தகவலாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரௌடிகள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் தப்பியோடியவா்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தச்சநல்லூா் காவல் நிலையம் முன்பாகவும் அதையடுத்து தாழையூத்து சோதனைச் சாவடியைத்
இதனைத் தொடர்ந்து தென்கலம் சாலையிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருநெல்வேலி மாநகரக் காவல் துறை துணை ஆணையாளர் பிரசன்ன குமார், விசாரணையைத் தீவிரப்படுத்தி
மாநகா் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.
சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டறியும் நோக்கில் அந்த பகுதிகளிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.
அதில் ராஜவள்ளிபுரம் இந்திரா நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணபெருமாள் என்ற ஆப்பிள்( வயது19), கணேசன் மகன் அஜித்குமாா்(வயது 30), அதே பகுதியில் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தளவாய் மகன் பெருமாள்(வயது 27), நடராஜன் மகன் சரண்(வயது 19), வல்லவன்கோட்டையைச் சோ்ந்த அருண் (வயது 22) ஆகியோா் கூட்டாகச் சோ்ந்து இந்தச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில்
அவா்களைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தொடா்புடைய ராஜவள்ளிபுரத்தைச் சோ்ந்த சரண் என்பவனை கைது செய்தனா். மேலும் 4 பேரை தனிப்படை காவலதுறை தேடி வருகின்றனா்.ராஜவள்ளிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் ஊருடையான் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன், பிரபாகரன், ராம் சூர்யா, பாலாஜி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல், ஊருடையான் குடியிருப்பு காட்டுப் பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் நிரந்தர குற்றவாளியான கண்ணபிரான் என்பவரின் தீவிர ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது.
அப்போது, தச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திர குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர், அவர்களைக் கண்டதும் அந்தக் கும்பல் தப்பியோட முயன்ற நிலையில், காவல்துறையினர் அருண்குமார் மற்றும் ஹரிஹரசுதன் ஆகிய இருவரைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா மற்றும் ஒரு அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் மாலை 4 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த, கைது செய்யப்பட்ட அருண்குமார் சகோதரர் அஜித்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், தச்சநல்லூர் காவல் நிலையத்தின் முன்பும், தாழையூத்து வாகன சோதனைச் சாவடியிலும் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றனர்.
இதில், காவல் நிலையம் முன்பு வீசப்பட்ட ஒரு பெட்ரோல் குண்டு, காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள சிறிய கோயிலில் விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தால் திருநெல்வேலி மாநகரில் பெரும் அச்சம் மற்றும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.



கருத்துகள்