இலஞ்சம் வாங்கி திருச்சிராப்பள்ளி வட்டாட்சியர் சென்னையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர் உள்ளிட்டோர் கைது
ரூபாய்.2 லட்சம் லஞ்சம் வாங்கி திருச்சிராப்பள்ளி வட்டாட்சியர் கைது: சென்னையில் கிராம நிர்வாக அலுவலர் கைது
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு தவறாக மாற்றம் செய்யப்பட்ட நிலத்தை, மீண்டும் தங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டி விண்ணப்பித்த நபரிடம், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியரின் தனி உதவியாளர் (தாசில்தார்) கைது. தஞ்சாவூர் கோபிக்கு திருச்சிராப்பள்ளி கே.கே.நகரில், 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மனையிடம் உள்ளது. அதை தவறுதலாக மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அரசு கணிப்பொறி அடங்கலில் பதிவு செய்து விட்டனர். அதை மாற்றித்தர உரிய ஆவணங்களுடன், திருச்சிராப்பள்ளி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கோபி விண்ணப்பித்தார். அது தொடர்பாக விசாரணை குறித்து அவர் திருச்சிராப்பள்ளி கோட்டாட்சியரின் தனி உதவியாளரான வட்டாச்சியர் அண்ணாதுரையை அணுகிய போது அவரோ, ' மனையிடத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதால், இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சமாகத் தந்தால், கணிப்பொறி அ. பதிவேட்டிலும் சிட்டாவிலும் பெயரை திருத்தம் செய்து தருகிறேன்' எனக் கூறினார். ஆனால் லஞ்சம் கொடுத்து ஆவணம் பெற கோபி விருப்பமில்லாமல் , திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்கள் அறிவுறுத்தல்படி, மாலை, கோட்டாட்சியர், அலுவலகத்தில் வைத்து, பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் அண்ணாதுரையிடம் கோபி கொடுத்தார். அதை பெற்ற அண்ணாதுரையை மறைந்லிருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர் அதான் பின்னர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்
அதேபோல்
ரூபாய்.12,000 லஞ்சம் பெற்ற சென்னை திருநீருமலை கிராம நிர்வாக அலுவலர் கைது.
பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய, 12,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். சென்னை, தில்லை கங்கா நகர் வசிக்கும் மேகலா தேவி. என்பவர், பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஆவணம் அடிப்படையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு ஆனலைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம், 'ஆன்லைன்' மூலம் திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, (வயது 47), ஆய்வு செய்தார். அவரும், தலையாரியான (கிராம உதவியாளர்) அமுதாவும், லஞ்சம் வாங்கத் திட்டமிட்டு மேகலாதேவியைத் தொடர்பு கொண்டு, பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, லஞ்சமாக 15,000 ரூபாய் நீங்கள் தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர். பின்னர், பேரம் பேசி அதை 3,000 ரூபாயைக் குறைத்து இறுதியாக 12,000 ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுத்து வாங்க விரும்பாதவர் அது குறித்து, சென்னை ஆலந்துாரில் உள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில், மேகலாதேவி புகார் அளித்தார். அதை விசாரித்து அவர்கள் ஆலோசனைப் படி திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், மேகலாதேவியிடமிருந்து சங்கீதா, 12,000 ரூபாய் லஞ்சப்பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் வாங்கிய போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன், அவரைக் கைது செய்தனர். மேலும்
மானியத் தொகை விடுவிக்க லஞ்சம் பெற்ற அலுவலர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளியைச் சேர்ந்த கவுரிசங்கர்,(வயது 47); விவசாயி. அவரது மாமியார் மங்கம்மாள் பெயரில், மானாவாரி தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் கறவை மாடு வாங்கி, வேளாண்மைத் துறை வழங்கும் மானியத்துக்கு விண்ணப்பத்தார். மானியம், 32,000 ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, முதல் தவணையாக அவருக்கு, 20,000 ரூபாய் கிடைத்தது. மீதி, 12,000 ரூபாய் கிடைக்க, வேளாண்மை அலுவலரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதற்காக கௌரிசங்கர் அக்டோபர் மாதம்.15 ஆம் தேதியில், வேப்பனஹள்ளி வேளாண்மை அலுவலகம் சென்று, உதவி வேளாண்மை அலுவலர் முருகேசனைச் சந்தித்தார். அவர் வேலை அதிகம் உள்ளதால் தீபாவளிக்கு பின்னர் வருமாறு கூறிய நிலையில். தீபாவளி முடிந்து சென்று பார்த்த போது, '5,000 ரூபாய் கொடுத்தால் வங்கிக் கணக்கில் அடுத்த நாளே மானியம் கிடைக்கும்' எனக் கூறி அவரைத் திரும்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத கௌரிசங்கர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் நேரில் சென்று நேற்று புகாரளித்தார். வேப்பனஹள்ளியில் ஒரு ஹோட்டலில் மாலை சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளாண்மை அலுவலர் முருகேசனிடம் அரசு சாட்சி முன்னிலையில் லஞ்சப் பணத்தை கௌரிசங்கர் கொடுக்க, அதை முருகேசன் பெற்ற போது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் சேர்த்தனர்.


கருத்துகள்