பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முதல் குற்றவாளி ரௌடி நாகேந்திரன் மருத்துவமனையில் மரணம். ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் ஆயுல் தண்டனை பெற்ற குற்றவாளி ஆகும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சம்போ செந்தில் என்பவன் இதுவரை தலைமறைவாக உள்ளான். அதே சமயம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவன் விசாரணை முடியும் முன்பே காவல் லுறை என்கவுண்டரில் கொல்லப்பட்டான். அதோடு கைது செய்யப்பட்ட 27 குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்கில் முதல் குற்றவாளி ஆன ரௌடி நாகேந்திரன் கல்லீரல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில (A1) குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பல இடங்களில் நிலுவையில் உள்ளது முன்னதாக அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையிலிருந்து வந்த நபராகும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரௌடி நாகேந்திரன் தற்போது மரணம்
நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி சிறையில் இருந்த அவனது மகன் அஸ்வத்தாமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர முறையீட்டு மனு தாக்கல் செய்தது தொடர்பாக செம்பியம் உதவிக் காவல் ஆணையர் ஆஜராகி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் வழக்கு சிபிஐ விசாரணைக்கு
மாற்றிய நிலையில் தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்த நிலையில் இந்த மரணம் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது
இதுவும் சிபிஐ விசாரணைக்குள் வரும் என்று சட்ட வல்லுநர் கருத்து.
காலம் தன் வேலையை
கச்சிதமாகச் செய்யும்?சிபிஐ விசாரணை மான்றமாகுமா என்ற நிலையில் இந்த வழக்கில் A1 மரணம், ஆர்ம்ஸ்ட்ராங்கை யார் கொலை செய்தது?ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1குற்றவாளி நாகேந்திரன்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சையிலிருந்து.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரபல ரௌடி நாகேந்திரன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, கடந்தாண்டு ஜூலை மாதம் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்ததுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆற்காடு சுரேஷ் என்பவன் தம்பி பொன்னை பாலு, ரெளடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன்,அரசியல் சம்பந்தம் கொண்ட வக்கீல்கள் உள்பட 27 பேரைக் கைது செய்தது. ரெளடி திருவேங்கடம் என்பவன் காவல்துறை என்கவுன்டரில் கொல்லப்பட்டான்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்குவதற்காக, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்தபடியே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம்தீட்டியதாக ரெளடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்து
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை மோசமடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட நிலையில்
ஏற்கெனவே, அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது மீண்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைப் பலனளிக்காமல் வியாழக்கிழமை இன்று நாகேந்திரன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிகோரி அவரது மகன் அஸ்வத்தாமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர முறையீட்டு மனுவின் படி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாகேந்திரனுக்கு இறுதிச் சடங்குகளை செய்ய அஸ்வத்தாமனுக்கு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்தநிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாகேந்திரனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில் நாளை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்

கருத்துகள்