திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில்
மின் வணிக ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஜெயகுமார் (வயது 56). இவரிடம் தாராபுரம் தாலுகா இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சிவசுப்பிரமணியம் என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டிற்கு நிரந்தர மின் இணைப்பு வழங்ககோரி அளித்திருந்த விண்ணப்பத்தின் மீது
விசாரணை நடத்திய தாராபுரம் வடக்கு மின்வாரிய வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், நிரந்தர மின் இணைப்பு வழங்குவதற்கு ரூபாய். 3,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார்.மின் இணைப்புக்கு லஞ்சம் தர விரும்பாத சிவசுப்பிரமணியம் அதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார்.அவர்கள் ஆலோசனையின் பேரில் இரசாயனப் பொடி தடவி சாட்சி முன்னிலையில் சம்பவ இடத்துக்கு நேரில் வந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மறைந்திருந்த நிலையில் சிவசுப்பிரமணியனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவசுப்பிரமணியம் ஜெயக்குமாரிடம் நேரில் சென்று கொடுத்தபோது மறைந்திருந்த இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜெயக்குமாரை பனம் பெற்ற கையுடன் கைது செய்தனர். தொடர்ந்து அவரது அலுவலகத்தில் நடந்த சோதனை ஆய்வு செய்த போது கணக்கில் வராத ரூபாய்.13,000 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் கைப்பற்றினர். இந்த சம்பவத்தால் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் சேர்த்தனர். அடுத்த நிகழ்வு
கரூர் மாவட்டம் புகளூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் அங்குள்ள டி.என்.பி.எல். எனும் காகித ஆலையில் உதவி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அக்டோபர் மாதம் 3- ஆம் தேதி தனது மனைவி, மகன் பெயரில் புதிதாக வாங்கப்பட்ட வீட்டுமனைக்கு தனிப்பட்டா வாங்க நினைத்து. அதற்காக அவர் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் நில அளவைப் பிரிவிற்கு சென்றாராம். அங்கு தனது நிலத்தை உட்பிரிவு அளவீடு செய்து தனிப்பட்டா வழங்கக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பத்து அந்த நகலுடன்
சென்ற போது அப்போது, அங்கு பணியில் இருந்த நில அளவையரான 34 வயதாகும் அருண் என்பவர் ரூபாய்.24 ஆயிரம் லட்சமாகக் கேட்டாராம். அதற்கு மறுப்புத் தெரிவித்த ராஜேந்திரன், பின்னர் ரூபாய்.9 ஆயிரம் தருவதாக ஒப்புகொண்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இராஜேந்திரன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று நடந்த சம்பவங்களைக் கூறி புகார் அளித்தார்
இதையடுத்து ராஜேந்திரன் நேற்று திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனையின் பேரில் இரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய்.9 ஆயிரத்தை நில அளவையர் அருணிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் காவலதுறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து அருணை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.
விசாரணை நடத்தினர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக கோயமுத்தூர் தமிழ்நாடு கேரளா மாநில எல்லை வனச் சோதனைச் சாவடிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு லாரிகளை அனுமதித்ததாக 3 வனக்காவலர்களை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரளாவுக்கு கோழி எருவை எடுத்துச் செல்லும்போது மாங்கரை மற்றும் ஆனைகட்டி சோதனைச் சாவடிகளில் வனக்காப்பாளர்கள் லஞ்சம் பெறுவதாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகாரளித்தார்.
அதன் பேரில் பினாப்தலீன் ரசாயனம் தடவிய பணத் தாள்களைக் கொடுத்து, செல்வகுமார், சதீஷ்குமார், சுப்பிரமணியம் ஆகியோரை ஊழல் தடுப்புக் கண்காடணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். அடுத்ததாக ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம்: பரமக்குடி தாலுகா வேந்தோணி கிராம நிர்வாக அலுவலர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வேந்தோனி குரூப் கிராமத்தில் வசிக்கும் க. ராஜேந்திரன் என்பவரின் தந்தை பெயருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக கடந்த 30 வருடங்களுக்கு முன்பு 3 சென்ட் நிலத்திற்கு D நாமுனா பட்டா( Free land for poorest) வழங்கப்பட்டுள்ளது. இன்னிலையில் 30 வருடம் கடந்த நிலையில் வாரிசு அடிப்படையில்.க. ராஜேந்திரன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேந்தோணி குரூப் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாரை ( வயது 43) 8 நாள்களுக்கு முன்பு சந்தித்து விவரம் கேட்டபோது D நமுனா பட்டாவில் உள்ள விவரங்கள் அடங்கிய சான்றிதழ் வழங்க ரூபாய்.5000 தனக்கு லஞ்சமாக வழங்க வேண்டும் எனக் கரராகக் கேட்டுள்ளார். இன்னிலையில் புகார்தாரர் காலை கிராம நிர்வாக அலுவலர் செல்வக்குமாரை மீண்டும் தொடர்பு கொண்டு D நமுனா பட்டா அடங்கிய சான்றிதழ் வழங்கக் கேட்டபோது தான் கேட்ட ரூபாய். 5000/-ஐ கொடுத்துவிட்டு வாங்கிக்கொள்ளும் படி கூறியுள்ளார்.
எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில்
புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறையில் வழங்கிய அறிவுத்தலின் பேரில் பிரசாயனம் தடவிய பணம் ரூ.5000/-ஐ கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் அவரைக் பணம் பெற்ற கையுடன் பிடித்தனர்.
மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ரூபாய்.5000 லஞ்சம் வாங்கிய உரப்புளி தலையாரி கைது
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் லஞ்சம் வாங்கிய தலையாரியை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.முதுகுளத்துார் தாலுகா காக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்....... பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு உரப்புளி கிராம தலையாரி ராசையா (வயது 45), தனக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் ரூபாய்.5000 லஞ்சமாகத் தர வேண்டுமெனக் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத.............. இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனை படி பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்த புகார் தாரரிடம் கொடுத்து தலையாரியிடம் வழங்கும்படி கூறி அனுப்பினர்.பரமக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் தலையாரி இராசையாவிடம் புகார் தாரர் பணத்தைக் கொடுத்தார். அங்கிருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தலையாரியைக் கைது செய்தனர்.மேலும் கிராம நிர்வாக அலுவலருக்கு இதில் தொடர்புள்ளதா என விசாரிக்கின்றனர்.



















கருத்துகள்