ஸ்ரீ ராஜராஜன் நர்சிங் கல்லூரி திறப்பு விழா,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் அமராவதிபு தூரில் ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக் குழுமத்தில் புதிதாக இராஜராஜன் நர்சிங் கல்லூரி துவங்கப்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக குன்றக்குடி- பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தானம், திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிக ளார் தலைமை தாங்கி நர்சிங் கல்லூரியை துவக்கி வைத்தார்.
ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னால் வேந்தருமான முனைவர் சொ.சுப்பையா சிறப்புரையாற்றினார். அவரது உரையில் "கிராமப்புற மாணவர்க ளின் நலனுக்காகவும், வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் புதிய நர்சிங் கல்லூரி ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார். நிகழ்வில் நர்சிங் கல்லூரியின் முதல்வர் செந்தமிழ் செல்வி வரவேற்புரையாற்றினார். சிறப்புவிருந்தினர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் சிறப்புரையாற்றுகையில்
நியூயார்க் பல்கலைக்கழகத் தில் பயின்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த டாக்டர் ராஜு இங்கு நர்சிங் மாணவ மாணவிகளுக்கு வகுப்புகளெடுப்பது சிறப்புக்குரிய செயலாகும். உயர்ந்த நோக்கில் துவங்கப்பட்ட நர்சிங் கல்லூரி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் இந்தக் கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களும் செயல்பட வேண்டும்," என்றார். மேலும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புதுக்கோட்டை கவிஞர் தங்கம் மூர்த்தி பேசுகையில் இக்கல்லூரியில் மிகச்சிறந்த ஆய்வக வசதிகளும் திறமை யான பேராசிரியர்களும் உள்ளனர். இங்கு பயிலும் மாணவ மாணவிகள் திறன்களை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் பிரகாசிக்க வேண்டுமெனக் கூறினார். மேலும் உஞ்சனை இராமசாமி அம்பலம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கிப் பேசினார்கள்.
விழாவின் இறுதியில் முனைவர் மீனாதேவி நன்றி கூறினார். விழாவை பொறியியல் கல்லூரி டீன் முனைவர் சிவக்குமார் மற்றும் துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் சிறப்புடன் ஏற்பாடு செய்தனர். நிகழ்வில்முன்னால் அழகப்பா பல்கலைக்கழக சின்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் குணசேகரன், தேவகோட்டை நகராட்சித் தலைவர் கா.சுந்தரலிங்கம், காரைக்குடி மெடிக்கல் சென்டர் மருத்துவர் பாலாஜி, பேராசிரியர் அய்யாவு, கனராவங்கி முதன்மை மேலாளர், அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் முதல்வர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



கருத்துகள்