இந்தியாவில் தற்போது இந்தோ-திபெத் எல்லைக் காவல் துறையின் (ஐடிபிபி) டிஜியாக பணியாற்றி வரும்
1993-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமாருக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) இயக்குநர் ஜெனரல் பதவிக்கான கூடுதல் பொறுப்பை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. வழக்கமான பதவியில் இருப்பவரை நியமிக்கும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முன்னதாகவோ அந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரவீன் குமார் 5 செப்டம்பர் 1970 ஆம் தேதி மேற்கு வங்காள மாநில கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி (1993 பேட்ச்). அவர் தற்போது 1 அக்டோபர் 2025 ஆம் தேதியிலிருந்து இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றி வருகிறார். இந்தோ திபெத்திய எல்லைப் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் பிரவீன் குமார், எல்லைப் பாதுகாப்புப் படையின் கூடுதல் பொறுப்பை வகிப்பார், தற்போதைய டிஜி பிஎஸ்எஃப் தல்ஜித் சிங் சவுத்ரி நவம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று ஓய்வு பெறுகிறார்.
இப்போது ITBP தலைவர் பிரவீன் குமார் BSF இன் கூடுதல் பொறுப்பை வகிக்கிறார்
1993 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான குமார், வழக்கமான பதவியில் இருப்பவர் பெயரிடப்படும் வரை கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.
இதற்கான முறையான உத்தரவை உள்துறை அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் பிரவீன் குமார், எல்லைப் பாதுகாப்புப் படையின் கூடுதல் பொறுப்பை வகிப்பார். தற்போதைய பிஎஸ்எஃப் டிஜி தல்ஜித் சிங் சவுத்ரி நவம்பர் 30 அன்று ஓய்வு பெறுகிறார்.
.அலுவலக குறிப்பில், டிஜி பிஎஸ்எஃப் பதவியை டிஜி ஐடிபிபி பிரவீன் குமாருக்கு வழக்கமான பதவியில் நியமிக்கும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை கூடுதல் பொறுப்பை வழங்குவதற்கான தகுதியான அதிகாரியின் ஒப்புதலை அரசாங்க துணை செயலாளர் சஞ்சீவ் குமார் தெரிவித்தார்.


கருத்துகள்