ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்; தமிழ்நாடு அரசு உத்தரவு தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம் அதில் , 3 காவல்துறை உதவி இயக்குனர்கள் , 7 காவல்துறை தலைவர் கள், 3 காவல்துறை துணைத் தலைவர்கள், 15 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள்உள்ளிட்ட 30 பேருக்கு தமிழ்நாடு அரசு பணியில் உயர்வு வழங்கி உத்தரவிட்டது. அதனடிப்படையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் செயலாளராக இருந்த ஐஏஎஸ் சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையர் பழனிசாமி கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத்துறை ஆணையர் கஜலட்சுமி, நில நிர்வாக ஆணையராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கிரண் குராலா, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத்துறை ஆணையராகவும், அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் தேவ் ராஜ் தேவ், தமிழ்நாடு உப்பு நிறுவன முதன்மைச் செயலாளராகவும், வ...
RNI:TNTAM/2013/50347