முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் குடியரசுத் துணைத் தலைவரின் நிகழ்ச்சிகள

இளைஞர்கள் தங்களது அடிப்படை கடமைகளை நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் துணைத்தலைவர்


திருவனந்தபுரத்தில் உள்ள மர் இவானியோஸ் கல்லூரியின் 75-ம் ஆண்டு தின கொண்டாட்டத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய குடியரசுத் துணைத்தலைவர், மர் இவானியோஸ் கல்லூரி போன்ற நிறுவனங்கள் கல்வியின் மாற்றத்தக்க சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன என்று தெரிவித்தார். கல்வி என்பது அறிவை வழங்குவது மட்டுமின்றி, சமூகத்தை அறியாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அரசியல் சாசன மாண்புகளையொட்டி, கல்வி மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார்.

உலக நாடுகள் தலைமைத்துவம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்காக இந்தியாவை உற்றுநோக்கியுள்ள நிலையில், வரலாற்றில் இந்தியா ஒரு திருப்புமுனையான தருணத்தில் உள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். இளைஞர்கள் தங்களுடைய அரசியலமைப்பு உரிமைகளுக்காக மட்டுமின்றி, பன்முகத்தன்மையை மதித்தல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளல், நாட்டின் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பு உள்ளிட்ட தங்களுடைய அடிப்படைக் கடமைகளையும் உறுதி செய்ய வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். தேசிய கல்விக் கொள்கை 2020, நாட்டின் கற்றல் சூழலை மாற்றியமைப்பதாக குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார். மேலும்



ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் மூலம் இளைஞர்கள் உத்வேகம் பெறவேண்டும் – குடியரசுத் துணைத்தலைவர்

கேரள மாநிலம் வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் 93-வது சிவகிரி யாத்திரையை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சிவகிரியை வெறும் ஒரு புனித யாத்திரைத் தலமாக மட்டுமின்றி, ஸ்ரீ நாராயண குருவால் கற்பனை செய்யப்பட்ட ஒரு வாழும் தத்துவமாகவும், சமூக விழிப்புணர்வின் பயணமாகவும் திகழ்வதாக விவரித்தார்.

சிவகிரி, ஆன்மீகத் தேடலையும் சமூகப் பொறுப்பையும் இணக்கமாக ஒருங்கிணைப்பதன் அடையாளமாகத் திகழ்கிறது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

சிவகிரி யாத்திரை ஒரு சடங்கு சார்ந்த செயலாக மட்டுமின்றி, கல்வி, தூய்மை, அமைப்பு, உழைப்பு, சுயமரியாதை ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு இயக்கமாகவே கருத்தாக்கம் செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.



ஸ்ரீ நாராயண குருவால் எழுப்பப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கேள்வி சமூகத்தை மாற்றியமைத்தது என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விடத் தாழ்வாக ஏன் நடத்த வேண்டும்? என்ற அநீதிக்கும், பல நூற்றாண்டுகால பாகுபாட்டிற்கும் பதிலளிக்கும் விதமாக "மனித சமுதாயத்திற்கு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்." என்று அவர் குறிப்பிட்டதாக திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குருவின் புரட்சி அமைதி நிறைந்ததாகவும், கருணை மிக்கதாகவும், மாற்ற முடியாததாகவும், கண்ணியம், சமத்துவம் மற்றும் மனிதநேயத்தில் வேரூன்றியதாகவும் இருந்தது என்று அவர் கூறினார்.

ஆன்மீகம் மற்றும் பகுத்தறிவின் இந்த ஒருங்கிணைப்பு, குருவை ஒரு துறவியாக மட்டுமின்றி, எதிர்காலத்திற்கான ஒரு வழிகாட்டியாகவும் ஆக்கியது என்று அவர் கூறினார்.

இந்தியாவின் நாகரிகப் பண்புகளை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், இந்திய ஆன்மீகம் எப்போதும் அன்பையே மிக உயர்ந்த வழிபாட்டு வடிவமாக வைத்துள்ளது என்று தெரிவித்தார். ஸ்ரீ நாராயண குரு இந்தத் தத்துவத்தை செயல்கள் மூலம் வாழ்ந்து காட்டினார் என்றும், சமூகத்திற்குச் செய்யும் சேவையே சடங்குகளை விடச் சிறந்தது என்றும், சக மனிதர்கள் மீதான அன்பே பக்தியின் உண்மையான வடிவம் என்றும் அவர் நிரூபித்தார் என்றும் குறிப்பிட்டார்.


கேரளா உலகிற்கு அளித்த மாபெரும் பங்களிப்புகள் ஆதி சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ நாராயண குரு ஆவர் என்றும், அவர்களின் தத்துவங்கள் மனித சமூகத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

இந்தியாவில் யாத்திரை என்பது சுற்றுலா அல்ல, அது ஒரு மாற்றத்திற்கானது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சிவகிரி இந்த நாகரிக உண்மையை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளாகத் துறவிகள் பிராந்தியங்கள் மற்றும் மொழிகளைக் கடந்து சுதந்திரமாகப் பயணம் செய்து, மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தில் வேரூன்றிய இந்தியாவின் நீடித்த வலிமையை வலுப்படுத்தினர் என்று அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் மூலம் இளைஞர்கள் உத்வேகம் பெறவேண்டும் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தினார்.        காசியில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்றது.இதில், இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்வில் தலைமையுரையாற்றிய இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்," புனித பாரத அண்னையின் பாதத்தை தொட்டு தொடங்குகிறேன். அப்துல் காலம் பிறந்த மண்ணில் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாத உறவை கொண்டது. அதனால் தான் காசியில் தொடங்கிய காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.சி.பி.ராதாகிருஷ்ணன் உரை

நாம் நாட்டிற்கு இழுக்கு ஏற்படும் போது அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். பாரதி கண்ட கனவு பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் நிறைவேறி வருகிறது. தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி மேன்மையானது என கடைசி மனிதனின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். தமிழகத்தில் யார் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. என்றும் மக்களில் ஒருவராக உங்களில் ஒருவராக இருப்பேன்.இன்றைக்கும் என்றைக்கும் பாரத தேசத்தை யாராலும் பிளவு படுத்த முடியாது. இந்த தேசம் வாழ்க என்று சொல்லும் நாம் தமிழுக்கு எதிரானவர்களா? இல்லை. எப்படி தேசம் ஒரு கண் தேசன் என்று சொன்னால், இன்னொரு கண் தங்க தாய் மொழி நம் தமிழ் தான். அதனை யாராலும் மாற்ற முடியாது. மோடி அழகாக சொன்னார். தொன்மையான காசி நகரமும் உலகத்தின் தொன்மையான மொழியான தமிழும் இணைகிறது என்று சொன்னால் தான் அது காசி தமிழ் சங்கமம் என்று சொன்னார்கள்.அப்துல் கலாமை தந்த மண்ணில் இந்த விழாவை கொண்டாடுவது நம் அனைவருக்குமே பெருமை. ராமேசுவரம் மண்ணில் இந்த இரண்டு ஒளி விளக்குகள் காசியும், தமிழும் சங்கமிக்கும் விழாவாக இது நடைபெறுகிறது. தமிழகத்தின் வீதியில் இருந்து தேசியத்தை பற்றி யோசித்து பாடியவர் பாரதியார். எத்தனை மொழிகளை நாம் பேசிநாலும் தர்மத்தின் பிரகாரம் நாம் வாழ வேண்டும் என்கிற உயர்த தத்துவம் தான் இன்று இந்திய தேசத்தை ஒருங்கிணைந்த தேசியமாக மாற்றி இருக்கிறது. காசியும், ராமேசுவரமும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள். உலகில் பாரதம் உச்சம் தொடும்போது, பாரதத்தில் தமிழகம் உச்ச நிலையை தொட வேண்டும். வளமான தமிழகம், வளமான இந்தியா. பாரதத்தை எந்த தீய சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது." என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...