முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏசுகிருஸ்துவிற்கு பெயர் சூட்டிய ஜனவரி முதல் நாளே ஆங்கிலப் புது வருடம் தேவாலயங்களில் கொண்டாட்டம்

ஜனவரி மாதம் கிருஸ்தவ மத தூதர் இயேசுநாதரின் பரிசுத்தப் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.



இயேசுவின் பெயர் சூட்டப்பட்ட நாள் அவர் பிறந்த 8-ஆம் நாள், யூத மரபின்படி ஜனவரி 1-ஆம் தேதியாக பழைய ரோமன் காலண்டரில் கொண்டாடப்பட்ட.

புத்தாண்டு: இந்த நாள், ஆண்டு சுழற்சியின் தொடக்கமாகிறது, மேலும் கிறிஸ்தவர்கள் இந்த நாளை கடவுள் கொடுத்த இன்னொரு வாய்ப்பாகக் கருதி, தங்கள் நாட்களை அவருக்கு அர்ப்பணிக்கிறார்கள். ஜூலியஸ் சீசர் கிமு 45-ல் ஜனவரி மாதம் 1-ஆம் தேதியை புத்தாண்டு தினமாக நிறுவினார். கிறிஸ்தவர்கள் இதை இயேசுவின் வாழ்வின் தொடக்கத்துடன் இணைத்துக்கொண்டனர்.ஜனவரி 1-ந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது நிலவும் இந்த நிலை, காலம் காலமாக இப்படியே இருந்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங் களாகத்தான். அதற்கு முன், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆண்டின் முதல் நாள் மாறியது.ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், பழைய மார்ச் 25 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாள் என்றனர்.

இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். இயேசு பிறப்பில் இருந்துதான் காலண்டர் முறை தொடங்கியது என்றால், அவர் பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியில்தானே புத்தாண்டு தொடங்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக , 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவின.

கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். அதில் அறிவியல் பூர்வமான உண்மைகள் இருப்பதாக அறிய வந்ததை அடுத்து, உலகம் முழுவதும் கிரிகோரி யன் காலண்டர் முறை பின்பற்றப்பட்டது.

இந்த முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 500 ஆண்டுகளாகத்தான் எந்த மாற்றமும் இல்லாமல் ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1-ந் தேதியாக விளங்குவதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தன. மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதிதான் ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தன. இதற்கு காரணம், இயேசுவின் தாய் மேரிக்கு, தான் கர்ப்பமுற்றிருந்தது தெரிய வந்தது என்ற காரணத்தால், மார்ச் 25-ந் தேதியை ஆண்டின் முதல் தேதியாக கருதினர் என்ற ஓரு கருத்தும் கூறப்படுகிறது.

புத்தாண்டு மார்ச் மாதம் 1-ந் தேதிதான்புத்தாண்டு மார்ச் மாதம் 1-ந் தேதிதான் பிறந்தது என்று கருதிய ரோமானியர்கள் அதையே ஆண்டின் முதல் நாளாகவும் கருதினர். ரோமானிய மன்னர்களில் கொஞ்சம் விவரமாக யோசித்த நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த ஆண்டில், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். அந்த முறைதான் இப்போதும் பின் பற்றப்படுகிறது. எனினும், ரோமானிய மன்னர்களிலேயே சிலர், பழையபடி ஆண்டுக்கு 10 மாதம்தான். அதுவும் மார்ச் மாதம்தான் முதல் மாதம் என்று கூறிவந்தனர். பின்னர் அதே ரோமர்கள், முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்களை இட்டனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், பழைய மார்ச் 25 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாள் என்றனர்.

இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். இயேசு பிறப்பில் இருந்துதான் காலண்டர் முறை தொடங்கியது என்றால், அவர் பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியில்தானே புத்தாண்டு தொடங்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக , 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவின.

கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். அதில் அறிவியல் பூர்வமான உண்மைகள் இருப்பதாக அறிய வந்ததை அடுத்து, உலகம் முழுவதும் கிரிகோரி யன் காலண்டர் முறை பின்பற்றப்பட்டது.

இந்த முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 500 ஆண்டுகளாகத்தான் எந்த மாற்றமும் இல்லாமல் ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1-ந் தேதியாக விளங்குவதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றனஆனால் ஹிந்து மதம் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாள் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது தான் நமது புத்திண்டு, இது சூரியன் மேஷ ராசியில் வரும்போது  இது தமிழ் சூரிய நாட்காட்டியின் தொடக்கமாகும், ஆனால் தை மாதத்தின் முதல் நாளை (பொங்கல்) புத்தாண்டு என அறியாமையால் சிலர் தற்போது அரசியல் காரணமாக வலியுறுத்துகின்றனர், ஏனெனில் இது விவசாயம் மற்றும் உழவுத் தொழிலின் தொடக்கத்துடன் தொடர்புடையது; இருப்பினும், அதிகாரப்பூர்வமாகவும், பரவலாகவும் காலகாலமாக பாரம்பரிய வழி சித்திரை மாதமே புத்தாண்டாகிறது. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் சித்திரை 1-ஆம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. வருடம் ஒரு முறை அது முத்திரை பதிக்கும் தமிழ் சித்திரை தான், நம்மை அடிமை கொணட ஆங்கிலேயர் புது வருடம் தான் ஜனவரி 1 இது கிருஸ்தவ மத வழிபட்டு ஏசு பிறப்பு அறிவித்த நாள் என்பதைத் தவிர வேறில்லை,  ஆனால் மாதச் சம்பளம் மற்றும் வார விடுமுறை நாள் நமது நாட்டில் மாறாத வரை கிருஸ்துவர்கள் மடடுமல்ல,   பலருக்கும் இதுவே புது வருடம். ஆகவே பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...