முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காப்பீட்டுத் தொகை பெறத் திட்டம் தீட்டி தந்தையை பாம்பால் கொலை செய்த மகன்கள் உளளிட்ட 6 நபர்கள் கைது

ரூபாய்.3 கோடி காப்பீட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பை பிடித்து கடிக்க வைத்து  கொலை செய்யப்பட்ட தந்தை பள்ளி ஆய்வக உதவியாளர் கணேசன்


இறந்த சந்தேக வழக்கில் திருப்பம் மகன்கள் இருவர் மற்றும் உடந்தையாக இருந்த 4 பேர் உள் 6 பேர் கைது


தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்துக் கொலை செய்த மகன்கள்  திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றினார். அவருக்கு மோகன்ராஜ் (வயநு 29), ஹரிஹரன் (வயது 26) எனும் மகன்கள். இருவருக்கும் திருமணம் முடித்த நிலையில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் ஓட்டுனராகவும் வேலை செய்கின்றனர்.



கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்ததாகக் கூறி அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்க கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து




பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். பாம்பு கடித்து இறந்த கணேசன் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது 11 காப்பீடுகள் செய்யப்பட்ட நிலையில் கணேசன் மீது மட்டும் கடந்த 6 மாதங்களில் ரூபாய்.3 கோடிக்கு காப்பீடு பாலிசி எடுக்கப்பட்டுள்ளது. அந்த பாலிசியை பணம் பெறக் கொடுத்த நிலையில் சந்தேகமடைந்த காப்பீட்டு நிறுவனம் சார்பில், வடக்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தனர், 
அதையடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவில் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, நடவடிக்கை எடுக்க காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ, ஆய்வாளர்கள் தங்கதுரை, கஸ்தூரி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் முரளி, மாரிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இந்த வழக்ககன் புலன் விசாரணையைத் துவங்கினர்  கணேசன் இறந்தால் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலை கிடைக்கும் என இரு மகன்களும் முடிவு செய்து, பாம்பைக் கடிக்க வைத்து தந்தையை கொன்றுள்ளனர் என்பது அவர்கள் விசாரணையில் தெரியவந்தது. இதற்காக இவர்களது நண்பர்கள் பாலாஜி,பிரசாந்த் என்ற இருவரும் உதவியுள்ளனர்.

பாம்பு கடித்து தங்களது தந்தை இறந்து விட்டதாகவும் அவருக்கு முறையாக வர வேண்டிய ரூபாய்.3 கோடி காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால், சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருபவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு ரூபாய்.3 கோடிக்கு 4 பாலிசிகள் எடுக்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த தனிப்படை, கணேசனின் இரு மகன்களின் செல்போன் உரையாடல்கள் அவர்களின் தொடர்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தன.

மோகன்ராஜ் அவர் தம்பி ஹரிஹரன் இருவரும் கடன் தொல்லையால் சிக்கித் தவித்ததால் உல்லாச வாழ்க்கை, அரசு வேலைக்கு ஆசைப்பட்டு யாரும் கண்டுபிடிக்காத வகையில் நூதன முறையில் தந்தையைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக சென்னையில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி வந்த மோகன் ராஜ் அவருடன் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாலாஜி என்பவரின் உதவியை நாடியுள்ளார். பாலாஜி மற்றும் அவரது உறவினர் நவீன் குமார் ஆகியோர் பாம்பு பிடித்த பழங்குடி இருளர் இனப் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை அனுப்பியுள்ளார்.

அவர் அவரது மனைவியின் தந்தை பாம்பு பிடிப்பவர் தினகரன் என்பவருக்கு பணத்தாசை காட்டி மணவூர் காட்டுப்பகுதிக்குச் சென்று கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பைப் பிடித்து சாக்கு பையில் அடைத்து 4 பேரும் காரில் பொதட்டூர்பேட்டையில் உள்ள கணேசன் வீட்டுக்கு எடுத்து வந்து பின் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கணேசன் கழுத்தில் 3 முறை பாம்பை கடிக்க வைத்ததில் விஷம் பரவியதால் தலைக்கேறி கணேசன் இறந்ததை உறுதி செய்த பின்னர் பாம்பை அதே இடத்தில் தினகரன் அடித்துப் போட்டுள்ளார். பிறகு நான்கு பேரும் காரில் சென்று விட்டனர்.

சிறிது நேரம் கடந்து தங்கள் தந்தை பாம்பு கடித்து விட்டதாக குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்து நடித்த ஹரிஹரன் மற்றும் மோகன்ராஜ் இருவரும் கணேசனை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு காலதாமதமாக எடுத்துச் சென்றனர். அவர் ஏற்கனவே இறந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பாம்பை வைத்து தந்தையை கடிக்க வைத்து மகன்களே கொன்ற சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் நிலையை தற்போது ஏற்படுத்தியது. ஏற்கனவே விபத்து காரணமாக ஓய்வில் இருந்த கணேசன்

நல்ல பாம்பு கடித்தும் உயிர் பிழைத்தவர் கண்டங்கருவளை எனம் கடடுவிரியன் பாம்பு மூலம்

தந்தையை கொலை செய்ய சதி திட்டத்தில் முதல்கட்டமாக அண்ணன், தம்பி இருவரும் கட்டுவிரியன் பாம்பை வைத்து கடிக்க வைப்பதற்கு ஒரு வாரம் முன்பாக அதே ஆட்களை வைத்து நல்லபாம்பைக் கொண்டு வர வைத்துக் கடிக்க வைத்துள்ளனர். ஆனாலும் அவர் பிழைத்துக் கொண்டதால் இந்த முறை கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியனைக் கொண்டு வர வைத்து கடிக்க வைத்து இறப்பதை உறுதி செய்ய வேண்டும் என சதித் திட்டம் போட்டனர். அதன்படி இரண்டாவது முறையாக கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை கொண்டு வந்து கழுத்துப் பகுதியில் கடிக்க வைத்து கணேசன் இறந்ததை உறுதி செய்துள்ளனர்.

 இந்த வழக்கில் துணைக் கண்காணிப்பாளர் ஜெய ஸ்ரீ தலைமையிலான தனிப்படைக் காவல்துறை 10 நாட்களில் குற்றவாளிகளை செல்போன் மூலம் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டதால், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், மற்றும் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா ஆகியோரைப் பாராட்டினார். மேலும் கணேசன் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய அவரது இரண்டு மகன்கள் உள்பட 6 பேர் தற்போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கார், பைக் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்ராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் திருவாலங்காடு அருகே மணவூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த குணசீலன் என்பவரின் மகன் பாலாஜி (வயது 28) என்பவருடன் நட்பாகி அவரது நண்பர் மணவூரைச் சேர்ந்த பூபாலன் என்பவர் மகன் பிரசாந்த் (வயது 35) என்பவரின் மனைவியின் தந்தை ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின நபரான தினகரன் (வயது 43) (பாம்பு பிடிப்பவர்) உதவியுடன் மணவூர் காட்டுப்பகுதியில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பைப் பிடித்துக் கொண்டு வந்து கடிக்க வைத்துள்ளனர்.

பாம்பை கடிக்க வைக்க கூலி  அவருக்கு ரூபாய்.1.50 லட்சம்

கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை காட்டில் பிடித்து கொண்டு வந்து கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்து கொலை செய்ய ரூபாய்.1.50 லட்சம் கூலியை மோகன்ராஜ் கொடுத்துள்ளார். இதற்காக மோகன்ராஜ் செல்போனில் இருந்து கூகுள் பே மூலம் நவீன்குமார் என்பவருக்கு ரூபாய்.90 ஆயிரம் அனுப்பியுள்ளார். மேலும் கையில் அறுபதாயிரம் கொடுத்துள்ளார். இப்பணத்தை பாம்பு பிடிப்பவர் தினகரன் மற்றும் அவருடன் செயல்பட்ட 3 பேரும் பிரித்துக் கொண்டுள்ளனர். பிரித்து க் கொண்ட அணைவரும் சிக்கிய நிலையில் சிறை சென்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...