மதுராந்தகத்தில் நடக்கும் தே ஜ கூட்டணிக் கட்சிகள் பங்கு பெரும் பிரம்மாண்டப் பொதுக்கூடடத்தில்
பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொள்கிறார்.
பிற்பகல் 2.15 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர்
பிற்பகல் 2.50: மணிக்கு MI-17 உலங்கு வானூர்தி மூலம் புறப்பட்டு மதுராந்தகத்தில் தரை இறங்குகிறார்
பிற்பகல் 2.55: மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சாலை மார்க்கமாகச் செல்கிறார்
பிற்பகல் 3.00: மணிக்கு மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்;4.15 மணி வரை பொதுக்கூட்டம் நடக்கிறது
மாலை 4.20: மணிக்கு பொதுக்கூட்டத் திடலில் இருந்து சாலை மார்க்கமாகப் புறப்படுகிறார்
மாலை 4.25: மணிக்கு மதுராந்தகம் உலங்கு வானூர்திக்குச் செல்கிறார்
மாலை 5.00 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்
மாலை 5.05: மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்படுகிறார் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்குகள் நிலவரம் உத்தேசம்
எம்ஜிஆரும் ஜெயலலிதாவம் இல்லாத பழனிச்சாமி அதிமுக - 17 முதல் 22 சதவீதம் வரை அண்ணாமலை தலைமை இல்லாத
பாஜக - 7 முதல் 9 சதவீதம் மருத்துவர் ராமதாஸ் இலலாத ம
பாமக - 4 முதல் 5 சதவீதம் எடப்பாடி கே. பழனிசாமி எதிர்ப்பில் உருவான அதிமுக 2 தான் இப்போதய
அமமுக உள்ளிட்ட தேர்தல் சந்திக்காத கருப்பையா மூப்பனார் மகன் நடத்தும் தமாக (மூ) மற்றுமுள்ள சிறு கட்சிகள் மற்றவை இணைந்து - 4 சதவீதம் ஆக புதிய இளைய தலைமுறை வாக்குகள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் நடிகர் விஜய் துவங்கிய தவெக பக்கம் போகிறது, அதோடு மீனவர்கள் கிருஸ்தவ சிறுபான்மையினர் நடிகர் விஜய் பக்கம் செல்லும் நிலையில், நாம்தமிழர் 4 சதவீதம் (கடந்த தேர்தல் நிலை வேறு) தேமுதிக மற்றும் புதிய தமிழகம் 2 சதவீதம் SIR மூலம் இந்தியத் தேர்தல் ஆணையம் களைகளை நீக்கி எடுத்த 18 சதவீதம் (போலிகள் மற்றும் காலமான இல்லாதவர்கள் முகவரி மாறியவர்கள், மற்றும் இரட்டை வாக்குகள்)ஆகியவை நீக்கி சுத்தம் செய்த நிலையில்
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்குகள் நிலவரம்: கலைஞர் இல்லாத ஆட்சி அதிகாரத்தில் இருந்த தற்போது உள்ள ஊழல் காரணமாக மற்றும் தெர்தலில் எதிர்ப்பு அலைகளைச் சந்திக்கப் போகும்
திமுக -22 முதல் 25 சதவீதம் வரை எந்த வளர்ச்சியும் காணத
காங்கிரஸ் கட்சி -1 முதல் 2 சதவீதம்
விசிக பெறும் அது சார்ந்த பட்டியல் சமூக மக்கள் -2 சதவீதம்
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுக மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினர்களின் கட்சி உள்ளிட்ட மற்றவை -2 முதல் 3 சதவீதம்
கடந்த காலங்களில் தேர்தலைக் கணக்கிடும் போது
இது தான் உண்மையான வாக்குகள் நிலவரம். இதில் மீதமுள்ள வாக்குகள் எந்தக் கட்சியைச் சாராத மிதக்கும் வாக்குகள் இதனாலேயே ஆளும் திமுக இப்போது தனித்து நிற்காது. இதில் ஏற்கனவே அதிமுக+பாமக +பாஜக ஏன் முழுமையான வாக்குகளை வாங்க இயலவில்லை என்றால் எல்லாம் உட்கட்சிப் பிரச்சனைகள், உள்ளடி வேலைகள் தான்.
2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக 4 சதவிகிதம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்த நிலையில் அப்போது கூட்டணி வேறு பாஜகவின் தொடர் முயற்சிகளுக்கு நேற்று முன்தினம் பலன் கூட்டணியில் பிரிந்து சென்ற அமமுக தலைவர் டிடிவி தினகரன், மத்திய அமைச்சரும் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) மீண்டும் இணைந்தார்.
பாஜகவின பியூஷ் கோயல் தமிழ்நாடு கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக வழிநடத்த மீண்டும் வந்த நிலையில் NDA வேகமாக முன்னேற்றம் காண்கிறது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட அமமுக, பாமக அன்புமணி தரப்பு என எல்லோரையும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சீர்தூக்கி வருகிறார். மைலாப்பூர் ஆடிட்டர் வீட்டு கிச்சன் கேபினட் இயக்கம் அமைச்சர் பியூஸ் கோயல் வந்த 1 மாதத்தில் இது நடந்தது
இது போக தேமுதிகவும் உள்ளே வருவதாகவே தெரிகிறது. நடிகர் விஜய்க்கு கூட்டணி வைக்க காங்கிரஸ் தரப்பு மட்டுமே வருமா என்பது இனிமேல் தெரியும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர்
மத்திய அமைச்சர் பாஜகவின் இந்த அறிவிப்பு கடந்து போகக்கூடிய மற்றொரு நியமனம் கிடையாது. இந்த அறிவிப்பிற்கு பின் பாஜகவின் மிக முக்கியமான திட்டமிடல் இருக்கிறது. இவர் திமுகவை எதிர்க்க மாட்டார்.. மாறாக கூட்டணி விவகாரத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சியை வலுப்படுத்துவார்.. தவெக வை தனித்துப் போக வைப்பார் எனலாம் தமிழ்நாடு அரசியலை நன்றாக அறிந்தவர் என்பதால் தவெக நடிகர் விஜய்க்கு கூட்டணி வைக்க இடம் தராமல் செய்துள்ளார்,
கூட்டணி உறுதியான பின் நேற்று முன்தினம் என்.டி.ஏ.வின் முதல்வர் வேட்பாளர் குறித்து ஊடகங்கள் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலில் நிதானம் காட்டினார். குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக அவர் முன்னர் கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அவரது பதில் கவனிக்கப்பட்டது. தினகரன், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது," எனக் கூறினார். மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை எந்த விவாதமும் நடக்கவில்லை என்றும், அது குறித்த வதந்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், பாஜக வட்டாரங்கள் சற்றுக் குழப்பமானதாக, இக்கட்சிக்கு ஆறு முதல் பத்து சட்டமன்றத் தொகுதிகள் வரை கிடைக்கக்கூடும் எனக் குறிப்பிட்டன.
தமிழ்நாட்டில் என்.டி.ஏ.வின் தலைமைத்துவம், அதிமுக தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் (மூ)தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் ஏ. சி. சண்முகம், ஜான்பாணடியன், பூவை ஜெகன் மூர்த்தி, உள்ளிட்ட பிற சிறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஒருங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார். அமமுகவை மீண்டும் என்.டி.ஏ.வில் சேர்ப்பதற்கான இம்முடிவு, மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பிற மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. இதில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் பதவியையும், மகனுக்கு நடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பாஜக கொடுகக சம்மதம் என
தேசிய ஜனநாயக கூட்டணிகள் இணைய வைக்க பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில், அடுத்ததாக ஓ.பன்னீர் செல்லம் எந்த முடிவை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில்
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அறிவித்து களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. திமுகவோ தனது கூட்டணிக் கட்சிகளை இறுக்கிப்பிடித்து வைத்திருக்கும் நிலையில், ஆங்காங்கே பல துண்டாக உடைந்து சிதறிக்கிடக்கும் அதிமுக மெதுவாக தனது கூட்டணிகளை பலப்படுத்தி வருகிறது.
சசிகலா நடராஜன், தினகரன், ஓ. பன்னீர் செல்வம், தீபா என அதிமுக பிளவுபட்டுக் கிடந்த நிலையில், டிடிவி தினகரன் எண்டிஏ கூட்டணியில் இணைந்த நிலையில் தற்போது பாஜகவின் அடுத்த ஃபோகஸாக 0.பன்னீர் செல்வம் இருக்கிறார். தனிக்கட்சி தொடங்குவேன் என மும்முரமாக இருந்தவர் ஆதரவாளர்களை தக்கவைக்க முடியாமல் தற்போது பின்வங்கினார்.
இவரிடம் இருந்தால் எதிர்காலம் இல்லை என எண்ணி ஆட்சி முடியும் நிலையில் திமுகவில் தஞ்சமடைந்துள்ளார். ஆதரவாளர்களே கழட்டிவிட தற்போது தனிமரமாக நிற்கும் அவருக்கு
ஆளுநர் பதவியைத் தருகிறோம் ஆதரவு மட்டும் கொடுங்கள். போதும் என்கிறதாம் டெல்லி பாஜக தலைமை. மேலும் மகன்களின் அரசியல் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மகன் ரவீந்திரநாத்திற்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை வழங்குவதாகவும் வாக்கு கொடுத்துள்ளதாம் பாஜக. த.வெ.க., பக்கம் போனால் புரட்சி செய்யலாம். ஆனால் ஊழல் செய்து பாஜகவிடம் சிக்கிய பலர் அமலாக்கத்துறை போன்ற வருங்கால பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க எண்டிஏ தான் என முடிவு செய்த 0 பன்னீர் செல்வம் பாஜக அதிமுக கூட்டணிக்கு சம்மதம் கொடுத்துவிட்டதாகவே அவரது கொஞமுள்ள மிஞ்சிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரச்சார பொதுக்கூட்டத்திற்காக தமிழ்நாடு வரும் நிலையில், அதற்குள் கூட்டணிப் பணியை மடிவு செய்து மெகா கூட்டணியாக மேடையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கைக்கோர்த்து நிற்க வைப்பது தான் தற்போதைய திட்டம் என்கின்றனர். அத்ற்காக தான் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு தேர்தல் மேலிடப் பொறுப்பாளருமான பியுஷ் கோயலுடன் கூட்டணியை உறுதி செய்த முன்னாள் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் சந்தித்தார். ஆக
பாமக, அமமுக, தமாகா(மூ), புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை அதிமுக பாஜகவின் எண்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது, சிறு சட்சிகள் கூட பேரம் பேசி இணையப்போவதாக சொல்லப்பட. மேலும் சஸ்பென்ஸ் வைத்து வரும் தேமுதிகவும் கூடிய விரைவில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பாஜக உடைத்த கண்ணாடிகளை தற்போது ஒட்டவைக்கப் படுகிறது அது ஒட்டுமா ஒட்டாதா என்பதை தேர்தல் முடிவுகளே முகம் காட்டும் தீர்மானிக்ககும். அதுவே மக்கள் ஜனநாயகம்.






























கருத்துகள்