சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் அருகில் வசித்த திமுக பெண் நிர்வாகி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் கைது,
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த கஞ்சாவை காவல்துறை பறிமுதல் செய்திருப்பதாகச் செய்தி. ஏற்கனவே
அவர் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு கண்ணகி நகர் காவல் நிலையத்தின் எல்லையில் அப்பெண் மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடக் காரணமாக கண்காணிப்பு இல்லாத காரணம் என அமைந்தது.
தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சருடன், கஞ்சா விற்றதாகக் கைது செய்யப்பட்ட பெண் எடுத்த புகைப்படத்தோடு, அவர் திமுகவின் நிர்வாகி எனப் பரவும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, கஞ்சா விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்வோரை ஒடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழ்நாடு அரசையும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கஞ்சா வியாபாரி, 18 வது முறையாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன், இந்தப் பெண் கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருக்கிறார்.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடனான புகைப்படத்துக்கு பல காரணங்களைச் சொல்லி மழுப்பிய, அமைச்சர் மா. சுப்பிரமணியன், பல முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடனான புகைப்படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? எனத் தெரியவில்லை,
அந்தப் பெண் கஞ்சா வியாபாரி, 196 வது ‘அ’ வட்ட கண்ணகிநகர் திமுக துணைச் செயலாளர் எனக் கூறப்படுகிறது. அமைச்சர்கள் வரை நெருக்கமாக இருக்கும் .மதியழகன், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதிச் செயலாளர் ஆவர்.





கருத்துகள்