தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில்
மத்திய தணிக்கைத்துறைக்கு என்ன பிரச்சினை என நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி இருக்கிறார் மத்திய அரசின் வழக்குரைஞர்
படத்தில் இந்தியாவில் பாதுகாப்புத்துறை சம்மந்தமான சீருடை, இலட்சினை உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது தொடர்பான மேலதிக ஆலோசனைகளுக்கு ரிவ்யூ கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார்.
இது வழக்கமான நடைமுறைதான். இதை படக்குழு முன்கூட்டியே தவிர்த்திருக்க முடியும்.
உதாரணத்துக்கு -
இராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படத்தில் மிகத்துல்லியமாக இராணுவ அடையாளங்கள் இடம்பெற்றிருக்கும்.
படம் தயாரானதுமே பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்தத் தகவல்களை தெரிவித்து, அந்த அடையாளங்களை ஏன் பயன்படுத்தினோம் என்று விளக்கமளித்து சென்சாருக்கு முன்பாகவே தடையில்லாச் சான்று பெற்றிருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக இராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடல்களை நடத்தி, அவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபணையான காட்சிகள் உண்டா என அவர்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறார்கள்.
இப்படி தமிழ் திரையுலகிலேயே முன்னுதாரணம் இருந்தும், ‘ஜனநாயகன்’ படக்குழு இந்த விஷயத்தில் கோட்டை விட்டிருப்பது எப்படி என்பதுதான் ஆச்சரியம்.
மேஜர் ரவி என்றொரு இயக்குநர் இருக்கிறார். ராணுவத்தில் பணியாற்றி பின்னர் சினிமாத்துறைக்கு வந்தார். கமல்ஹாசன், மணிரத்னம் போன்றோர் படங்கள் எடுக்கும் போது இவரிடம் ஆலோசனை பெறுவார்கள். எடுத்த படத்தை இவரிடம் போட்டுக் காட்டி ஏதேனும் வில்லங்கம் வருமா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டே தணிக்கை சான்றிதழுக்கு அனுப்புவார்கள். தமிழ், மலையாளப் படங்கள் மட்டுமல்ல, இந்திய அளவில் ஏதேனும் படங்களில் ராணுவ சித்தரிப்புகள் இருந்தால், சம்மந்தப்பட்ட படக்குழுவினர் இவரைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறுவார்கள். ரவியே கூட பல படங்களை இயக்கியவர் தான்.
இவரைப் போன்ற ஆலோசகர் எவராவது ‘ஜனநாயகன்’ படக்குழுவில் இடம்பெற்றிருந்தால் இப்போது தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
500 கோடி ரூபாய் முதல் போட்டு படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. அதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். இந்த சின்ன விஷயத்தில் கூட கோட்டை விட்ட இயக்குநர், படத்தை எந்தளவுக்கு சிரத்தையாக எடுத்திருப்பார் என்பது தெரியவில்லை. மேலும் இது கதை விவாதம் நடக்கும் காலத்திலேயே முடிவு செய்ய வேண்டிய நிகழ்வாகம், எம் ஜி ஆர் அரசியலில் அதிமுக எனும் தனிக்கட்சி துவங்கிய 1972 ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாக சிக்கல் வந்த நிகழ்வு அரசியல் தான் தனிக்கட்சி துவங்கிய விஜய் நடித்த ஜனநாயகனின் அந்தக் காட்சி. மத்திய அரசு எதிர்க்கக் காரணமே அதுதான்! என நீதிமன்றத்தில் நடந்த வாதம்
நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி மாதம் 9, 2026 ஆம்பள கேஸ் சிக்கலாகுது.. ஜனநாயகனின் அந்த காட்சி.. மத்திய அரசு எதிர்க்க காரணமே இதுதான்! என நீதிமன்றத்தில் நடந்த வாதம்
நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியாகவிருந்தது. இந்தப் படத்தின் வெளியீடு தற்போது சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் நேற்று தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மறுபுறம், KVN புரொடக்ஷன்ஸ் LLP நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் பேரன் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் உதவியுடன் வாதாடினார். பட வெளியீட்டில் ஏற்படும் தாமதம் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
KVN புரொடக்ஷன்ஸ் LLP சுமார் ரூபாய் 500 கோடி முதலீடு செய்து, 5,000 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது. இந்த பெரிய முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்கள் தாமதத்தால் பெருமளவில் பாதிக்கப்படும் என வழக்கறிஞர் சதீஷ் பராசரன் நீதிபதியிடம் எடுத்துரைத்தார். மன உளைச்சல் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
நீதிபதி பி.டி. ஆஷா, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனுக்கு, திரைப்படம் குறித்த புகார் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை அன்று படம் வெளியாகவிருந்த அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆவணங்களை நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு நீதிபதி கோரினார்.
படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகள் டிசம்பர் 15, 2025 ஆம் தேதியன்று முழுமையாக முடிவடைந்து, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று CBFC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, CBFC-யின் பரிசீலனைக் குழு, சில குறிப்பிட்ட வெட்டுக்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டு U/A 16+ சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்தது. தயாரிப்பாளர்கள் இந்த பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு, அத்தனை மாற்றங்களையும் செய்து முடித்தனர்.
மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய பதிப்பு தணிக்கை வாரியத்திடம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் உடனடியாகவும் முழுமையாகவும் அனைத்துப் பரிந்துரைகளையும் பின்பற்றியபோதிலும், CBFC கிட்டத்தட்ட 10 நாட்களாக எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என சதீஷ் பராசரன் குறிப்பிட்டார். ஜனவரி மாதம் 9, 2026 ஆம் தேதியன்று படம் வெளியாகவிருந்ததை பலமுறை நினைவுபடுத்தியும் பதில் கிட்டவில்லை என அவர் தெரிவித்தார்.
ஜனவரி 5 ஆம் தேதியன்று, CBFC சென்னை மண்டல அலுவலரிடமிருந்து பெற்ற தகவலால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. திரைப்படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு ( மேல் முறையீட்டு அமைப்பு) அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆயுதப் படைகளைக் சித்தரிப்பது தொடர்பான ஒரு புகார் கிடைத்ததே இந்த முடிவுக்கு ஒரே காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், புகாரளித்த தனிநபரின் விவரங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என சதீஷ் பராசரன் சுட்டிக்காட்டினார். மேலும், தயாரிப்புக் குழுவினரும் பரிசீலனைக் குழு உறுப்பினர்களுமே படத்தைப் பார்த்ததால், அதன் உள்ளடக்கம் குறித்து வெளியாட்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக வாதிட்டார்.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சார்பில் ஆஜரான ASG அரு லெ.சுந்தரேசன் , பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், தான் திரைப்படம் பார்த்த பிறகு தனது ஆட்சேபனைகள் கூறி இருந்தாலும்.. அது பதிவு செய்யப்படவில்லை என்று புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் தேவை என்றும் அவர் கோரினார்.
U/A 16+ சான்றிதழ் வழங்குவதற்காக வாரியம் பரிந்துரைத்த வெட்டுக்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும், படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப CBFC எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த ASG, அரு லெ.சுந்தரேசன் CBFC தலைவர், பரிசீலனைக் குழு படம் பார்த்த பிறகும் கூட, ஒரு திரைப்படத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட முழுவதும் அதிகாரம் பெற்றவர் என வாதிட்டார்.
ஜன நாயகன் படத்தின் சிக்கலுக்கு முக்கிய காரணம்
'ஜன நாயகன்' திரைப்படம் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய காட்சிகளைக் கையாளும்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் அவர் கூறினார்.
ஒரு திரைப்படம் பரிசீலனைக் குழுவால் பார்க்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் வழங்கப்பட்ட பிறகும் கூட, அக்குறிப்பிட்ட பரிந்துரைகளில் CBFC தலைவர் திருப்தி அடையாத பட்சத்தில், மறுபரிசீலனை செய்வதற்காக அதை சீராய்வுக் குழு அல்லது மறுபரிசீலனைக் குழுவிற்கு அனுப்ப அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என ASG விளக்கினார். சினிமாட்டோகிராஃப் சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் இந்த நடைமுறைகளை தெளிவாக வரையறுக்கிறது.
பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது இறுதி முடிவு அல்ல. CBFC தலைவருக்கு படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்பும் அதிகாரம் இன்னும் உள்ளது. இந்தப் பரிசீலனைக் குழுவில் தணிக்கைக் குழுவில் ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள். ஒரு புதிய குழுவால் படம் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என ASG வலியுறுத்தினார்.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பாகவோ அல்லது மறுக்கப்படுவதற்கு முன்பாகவோ தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுக முடியாது என்றும் ASG வாதிட்டார். புகார் கிடைத்ததை அடுத்து, தணிக்கைச் சான்றிதழ் வழங்கல் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு சென்னை மண்டல அதிகாரிக்கு CBFC தலைவர் கடிதம் எழுதி இருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
இந்த சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், CBFC-யின் தலைவர் சட்டத்தின்படி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியே இந்த முடிவை எடுத்தார் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த சிக்கலான வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பே 'ஜன நாயகன்' படத்தின் வெளியீட்டுக்கான அடுத்த அடியை முடிவு செய்யும்.அன்று வெளியாகவிருந்தது. இந்தப் படத்தின் வெளியீடு தற்போது சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் நேற்று தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மறுபுறம், KVN புரொடக்ஷன்ஸ் LLP நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் உதவியுடன் வாதாடினார். பட வெளியீட்டில் ஏற்படும் தாமதம் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
KVN புரொடக்ஷன்ஸ் LLP சுமார் ₹500 கோடி முதலீடு செய்து, 5,000 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது. இந்த பெரிய முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்கள் தாமதத்தால் பெருமளவில் பாதிக்கப்படும் என வழக்கறிஞர் சதீஷ் பராசரன் நீதிபதியிடம் எடுத்துரைத்தார். மன உளைச்சல் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
நீதிபதி பி.டி. ஆஷா, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனுக்கு, திரைப்படம் குறித்த புகார் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை அன்று படம் வெளியாகவிருந்த அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆவணங்களை இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு நீதிபதி கோரினார்.
படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகள் டிசம்பர் 15, 2025 அன்று முழுமையாக முடிவடைந்து, டிசம்பர் 18 அன்று CBFC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, CBFC-யின் பரிசீலனைக் குழு, சில குறிப்பிட்ட வெட்டுக்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டு U/A 16+ சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்தது. தயாரிப்பாளர்கள் இந்த பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு, அத்தனை மாற்றங்களையும் செய்து முடித்தனர்.
மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய பதிப்பு வாரியத்திடம் டிசம்பர் 24 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் உடனடியாகவும் முழுமையாகவும் அனைத்துப் பரிந்துரைகளையும் பின்பற்றியபோதிலும், CBFC கிட்டத்தட்ட 10 நாட்களாக எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என பராசரன் குறிப்பிட்டார். ஜனவரி 9, 2026 அன்று படம் வெளியாகவிருந்ததை பலமுறை நினைவுபடுத்தியும் பதில் கிட்டவில்லை என அவர் தெரிவித்தார்.
ஜனவரி 5 அன்று, CBFC சென்னை மண்டல அதிகாரியிடமிருந்து பெற்ற தகவலால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. திரைப்படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு (ஒரு மேல்முறையீட்டு அமைப்பு) அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆயுதப் படைகளைக் சித்தரிப்பது தொடர்பான ஒரு புகார் கிடைத்ததே இந்த முடிவுக்கு ஒரே காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், புகாரளித்த தனிநபரின் விவரங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என பராசரன் சுட்டிக்காட்டினார். மேலும், தயாரிப்புக் குழுவினரும் பரிசீலனைக் குழு உறுப்பினர்களுமே படத்தைப் பார்த்ததால், அதன் உள்ளடக்கம் குறித்து வெளியாட்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக வாதிட்டார்.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சார்பில் ஆஜரான ASG, பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், தான் திரைப்படம் பார்த்த பிறகு தனது ஆட்சேபனைகள் கூறி இருந்தாலும்.. அது பதிவு செய்யப்படவில்லை என்று புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் தேவை என்றும் அவர் கோரினார்.
U/A 16+ சான்றிதழ் வழங்குவதற்காக வாரியம் பரிந்துரைத்த வெட்டுக்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும், படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப CBFC எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த ASG, CBFC தலைவர், பரிசீலனைக் குழு படம் பார்த்த பிறகும் கூட, ஒரு திரைப்படத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட முழுவதும் அதிகாரம் பெற்றவர் என வாதிட்டார்.
ஜன நாயகன் படத்தின் சிக்கலுக்கு முக்கிய காரணம்
'ஜன நாயகன்' திரைப்படம் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய காட்சிகளைக் கையாளும்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் அவர் கூறினார்.
ஒரு திரைப்படம் பரிசீலனைக் குழுவால் பார்க்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் வழங்கப்பட்ட பிறகும் கூட, அக்குறிப்பிட்ட பரிந்துரைகளில் CBFC தலைவர் திருப்தி அடையாத பட்சத்தில், மறுபரிசீலனை செய்வதற்காக அதை சீராய்வுக் குழு அல்லது மறுபரிசீலனைக் குழுவிற்கு அனுப்ப அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என ASG விளக்கினார். சினிமாட்டோகிராஃப் சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் இந்த நடைமுறைகளை தெளிவாக வரையறுக்கிறது.
பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது இறுதி முடிவு அல்ல. CBFC தலைவருக்கு படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்பும் அதிகாரம் இன்னும் உள்ளது. இந்தப் பரிசீலனைக் குழுவில் தணிக்கைக் குழுவில் ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள். ஒரு புதிய குழுவால் படம் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என ASG வலியுறுத்தினார்.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பாகவோ அல்லது மறுக்கப்படுவதற்கு முன்பாகவோ தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுக முடியாது என்றும் ASG வாதிட்டார். புகார் கிடைத்ததை அடுத்து, தணிக்கைச் சான்றிதழ் வழங்கல் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு சென்னை மண்டல அதிகாரிக்கு CBFC தலைவர் கடிதம் எழுதி இருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
இந்த சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், CBFC-யின் தலைவர் சட்டத்தின்படி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியே இந்த முடிவை எடுத்தார் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த சிக்கலான வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பே 'ஜன நாயகன்' படத்தின் வெளியீட்டுக்கான அடுத்த அடியை முடிவு செய்யும்.





.jpeg)



.jpeg)
.jpeg)
.jpeg)
~2.jpeg)
.jpeg)
.jpeg)
கருத்துகள்