ஆந்திரப் பிரதேச மாநிலம் புத்தூர் போஃன் செட்டிங் ஹாஸ்பிட்டல் என்பது பல
தலைமுறையாக புத்தூர், இராஜபாள்யம், சித்தூர் மாவட்டம், உள்ளது திருப்பதி செல்லும் சாலையில் நகரியை அடுத்து அமைந்துள்ள புத்தூர் Bone Setting மருத்துவமனை ஆகும், இதன் பெயர் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலம் இந்தியா முன்னால் ஜனாாதிபதி வரை இங்கு மருத்துவம் பார்த்தவர்கள் என அதிகம்.
அவ்வாறு இருக்க அந்த மருத்துவ மனை பெயரைப் பயன்படுத்தி அவர்கள் அனுமதி பெறாமல் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் கதைபோல ஒரு போலியான நபர் நுடவைத்திய சாலை நடத்திய நிலையில் சுகாதாரத்துறையின் அலுவலர்கள்
அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்ற நிலையில் சிங்கம்புணரியில் பாண்டி என்ற நெடுஞ்செழியன் போலி நாட்டு வைத்தியர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து தைலப் பாட்டில்கள் உள்ளிட்ட நுட வைத்தியம் பார்த்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புத்தூர் கட்டு பாண்டி என்ற பெயரில் நெடுஞ்செழியன் என்ற ஆ. தெக்கூர் பகுதி நபர் நுட வைத்தியம் பாரர்த்து வந்தார். முகநூல் வாயிலாக நேரலையில்
சிகிச்சை அளிப்பதாக ஜனங்களிடம் பிரபலமானார். இதனால், வெளிமாநிலம்,, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இவரைத் தேடி வந்தனர். ஒரு நாளைக்கு 60 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளித்ததாக கூறப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு 200 மில்லி அளவு கொண்ட தைலப் பாட்டிலை 600 ரூபாய்க்கும் உற்பத்தி லைசென்ஸ் இல்லாமல் விற்றுள்ளார்.அவரது சிகிச்சை மற்றும் அவர் கொடுக்கும் தைலம் குறித்து சந்தேகம் எழுந்ததால் தேவக்கோட்டை உதவி ஆட்சியர் வெங்கட் வட்ஸ், திருப்புத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செல்வக்குமார், தாசில்தார் நாகநாதன் ஆகியோர், பாண்டி என்ற நெடுஞ்செழியன் வீடு மற்றும் அவர் நடத்திய கிளினிக்கில் சோதனையும் நடத்தினர். அவர் பயன்படுத்திய தைலங்களையும் ஆய்வு செய்த பின்னர் பாண்டி என்ற நெடுஞ்செழியனைக் கைது செய்தனர்.
தைலப் பாட்டில்களையும், தைலம் தயாரிக்கப் பயன்படுத்திய எண்ணெய் வகைகளையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது மூன்று வழக்கு பதிவான நிலையில் இனி புத்தூர் அசல் போன் செட்டிங் மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் பிரபல டாக்டர் ராஜூக்கள் சர்ந்த நபர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அதுவும் பதிவாகும்
மேலும் MCI அனுமதி இல்லாமல் RMP சான்றிதழ் கூட இல்லாமல் போதிய கல்வி பயிலாத இவர் பார்தத மருத்துவ முறை தவறு என்பதை அவரைச் சார்ந்த பலரம் தவறு என இதுவரை உணரவில்லை என்பதே தற்போதய நிலை. இவர்போல இன்னும் பலரும் உள்ள நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆனால் இவர் பலருக்கு மாமூல் கொடுத்து இதுவரை நடத்தியது இன் அம்பலமாகலாம். இல்லை எனில் இவ்வளவு காலமாக நடக்க வாய்ப்பில்லை.






























கருத்துகள்