திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும், நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு செல்லும்”. உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நமிழநாாடு அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியர், மாநக ரக்காவல்துறை ஆணையர் சார்பிலும் மேல் முறையீட்டு மனுக்கள் மதுரை கிளையில் தாக்கல் செய் யப்பட்டது.
இது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டதனிடையே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே. - கே. ராமகிருஷ்ணன் அமர்வில் ஒரு வாரம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள், இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணைகள் நடை பெற்ற போது, அரசுத் தரப்பு, கோயிலை நிர்வாகம் செய்யும் இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர், சிக்கந்தர் சமாதி அல்லது தர்ஹா, வக்ஃப் வாரியம், ஜமாத், மற்றும் மனுதாரர் இராம. ரவிக்குமார் ஆகி யோரும், இடையீட்டு மனுதாரர்கள் பலரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, தங்களது தரப்பின் கருத்துகளை வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். முடிவில், இந்த வழக்கு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, சந்தடி சாக்கில் திருப்பரங்குன் றம் மலையிலுள்ள தர்ஹாவில் கந்தூரி விழா நடத்த கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவை முன்னிட்டு, மலை உச்சியில் ஆடு, மாடு கள் கோழிகள் உள்ளிட்ட உயிர்பலியிடப்பட உள்ளதாகவும. அதற்குத் தடை விதிக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த மாணிக்கம் மூர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரம் முதல் உச்சி வரை பறவைகள் மற்றும் விலங்குகளைப் பலியிடுவதோ, அசைவ உணவுகளைப் பறிமாறுவதோ, இறைச்சிகளை எடுத் துச் செல்வதோ மற்றும் உன்பதோ கூடாது என தர்ஹா வாரிசுகள் நிர்வாகத்துக்கு 2025 டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹா தரப்பு வழக்குரைஞர்கள் கடந்த திங்கள்கிழமை முன்னிலையாகி, கந்தூரி விழா தொடர்பாக தனி நீதி பதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். கந்தூரி விழாவில் அதிகளவில் இஸ்லாமியர்களை அனுமதிக்க வேண்டும் என முறையிட்டனர்.
அப்போது, நீதிபதிகள்: திருப்பரங்குன்றம் மலை உச்சி யில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை ஜனவரி மாதம். 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனத் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று ”திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும், நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு செல்லும்”.எனவும் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ததும் நீதிமன்றம் உத்தரவிட்டது, அதில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது தீபத்தூண் தான். அது கோவிலுக்கு தான் சொந்தம்
தீபத்தூணில், மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் கோவில் தேவஸ்தானம் தீபமேற்ற வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பாதிப்பு என்பது கற்பனையான காரணம். இந்த விஷயம் சிக்கல் ஆனதற்கு மாநில அரசே காரணம்
அரசியல் காரணங்களை அடிப்படையாக வைத்து மாநில அரசு செயல்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது,தீபத் தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக முந்தைய வழக்குகளில் முடிவு செய்யப்படவில்லை எனவும் அதனால் தனி நீதிபதியின் உத்தரவை முன்னரே முடிக்கப்பட்ட வழக்கு என முடிவு செய்ய முடியாது எனவும்.
தர்காவுக்கு அருகிலுள்ள கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு ஆகம விதிகளில் இடமில்லை என்பதற்கான வலுவான ஆதாரங்களை மாநில அரசின் அலுவர்களும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹா தரப்பிலும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும்,
ஓராண்டில் குறிப்பிட்ட நாளில் கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு அனுமதித்தால் அது பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என மாநில அரசு அஞ்சுவது ஆபத்தானது எனவும் "நிச்சயமாக, இதுபோன்ற ஒரு குழப்பம் அந்த அரசாங்கத்தாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். தங்களின் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்தவொரு அரசாங்கமும் அந்த அளவுக்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டதாக லைவ் லா கூறுகிறது.
திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், எந்தவித நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும். மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் எனக்கூறிய நீதிபதிகள் எத்தனை பேரை அனுமதிக்கப்படலாம் என்பது குறித்து தொல்லியல் துறையுடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்கலாம் எனத் தீர்ப்பில் தெரிவித்திருப்பதால், ' மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டியது ஒரு கட்டாயம்' என்பதை நீதிபதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஹிந்து சமய அறநிலையத் துறையும் கோவில் நிர்வாகமும் தான் இதற்கு பொறுப்பு என உறுதிப்படுத்தியுள்ளனர். எந்த காலத்திலும் என்ன காரணத்திற்காகவும் தவிர்க்கக் கூடாது என உறுதிப்படுத்தியுள்ளனர்.".
நிர்வாகத்தின் 10 பேர் சேர்ந்து தீபம் ஏற்றுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறுவது, அரசின் திறமையின்மையைக காட்டுகிறது அல்லது அரசின் நிலைப்பாட்டைக் காட்டுகிறது என நீதிபதிகள் தெரிவித்த தீர்ப்பு
"திருப்பரங்குன்றம் மலையில் எந்த மதத்தைச் சேர்ந்த நிகழ்வாக இருந்தாலும் தொல்லியல் துறை மற்றும் காவல்துறையிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும்
ஆனால், கார்த்திகைத தீபத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டதால், அதற்கு இந்த நிபந்தனை பொருந்துமா?என தெரியவில்லை. முழுமையாக தீர்ப்பு படித்த பின் தான் அறியமுடியும்.. உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக மாநில சட்டம் நீதி அமைச்சர் ரகுபதி கூறிய நிலையில் இறுதி உத்தரவை நிச்சயம் அசுரனை வதைத்த அருள்மிகு சுப்பிரமணியசுவாமிக்கு கிடைத்த பின் நிறந்தரமான உத்தரவாக அது அமையும்












கருத்துகள்