மனையிட வரன்முறைக்கு அனுமதி வழங்க
ரூபாய்.10,000 லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர், சான்றுபெற்ற அளவையர் கைது
திருவேற்காட்டில் மனையிட வரன்முறை செய்து அனுமதி வழங்க ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர், சான்றுபெற்ற நில அளவர் ஆகியோரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமிக்குச் சொந்தமான திருவேற்காடு பகுதியில் உள்ள நிலத்திற்கான மனையிட வரன்முறை அனுமதி வாங்குவதற்காக திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு பிரிவில் பணம் செலுத்தி மனு அளித்திருந்தார்.
அந்த நிலத்திற்கு மனையிட வரன்முறை அனுமதி வழங்குவதற்கு ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என நகரமைப்பு அலுவலர் சாந்தி கேட்டதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி, லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால், அது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஜெயலெட்சுமி கொண்டு வந்த பணத்தை பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட் டுகளாக ஜெயலட்சுமியிடம் அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்தனுப்பினர். திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று முன்தினம் மாலை திருவேற்காடு நகராட்சி அலுவலகம் அருகில் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனைப்படி ரசு சாட்சி டன் கொடுத்தனுப்பிய இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நகரமைப்பு அலுவலர் சாந்தியிடம் ஜெயலெட்சுமி கொடுத்த போது, அவர்
அந்தப் பணத்தை வாங்காமல் அலுவல கத்திற்கு வெளியே இருந்த சான்று பெற்ற நில அளவர் சக்திவேல் என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமி கொடுத்த பணத்தை சக்திவேல் வாங்கிய போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சக்திவேலை பணம் பெற்ற கையுடன் பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது நகர அமைப்பு அலுவலர் சாந்தி கூறியதன் பேரிலேயே தான் பணத்தை வாங்கியதாகத் தெரிவித்தார்.
அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பினர்.

கருத்துகள்