2026-27 மத்திய பட்ஜெட்டை வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான செயல்திட்டம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா புகழாரம் சூட்டியுள்ளார்
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 மத்திய பட்ஜெட், 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கும் இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறிப்பதாக மத்திய பெருநிறுவன விவகாரங்கள் மற்றும் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்கோத்ரா குறிப்பிட்டுள்ளார்.
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்திட்டத்தில் இந்த பட்ஜெட் ஆழமாக வேரூன்றி இருப்பதுடன், நெகிழ்தன்மை வாய்ந்த, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பொருளாதாரத்திற்கு அடித்தளமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த பட்ஜெட், வளர்ச்சியை முன் வைப்பதுடன், பொதுமக்களை மையமாகக் கொண்டதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில், வெளிப்படை தன்மை மற்றும் எளிதான வாழ்க்கையை வலியுறுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது உண்மையிலேயே "140 கோடி இந்தியர்களுக்கான பட்ஜெட்" என்று கூறிய அமைச்சர், இது வளர்ச்சியுடன் நலனையும், லட்சியத்துடன் விவேகத்தையும், புதுமையையும் உள்ளடக்கிய தன்மையையும் சமநிலைப்படுத்தும் ஒன்றாகும் என்று தெரிவித்தார். லட்சியமிக்க துறைகளை வலுப்படுத்தி, உள்கட்டமைப்பை மேம்படுத்தி, குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட், உள்ளூர் தலைமையிலிருந்து உலகளாவிய தலைமைக்கான இந்தியாவின் பயணத்தை துரிதப்படுத்துகிறது.

கருத்துகள்