முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடகாவில் ரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் கைது.

 ரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் கைது.

கர்நாடகா மாநிலம் கதக் மாவட்ட லோக்ஆயுக்தா காவல்துறை சிஞ்சலி கிராபத்தில் ரூபாய் .5 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சந்துரு லமானியைக் கைது செய்தனர்.





தமிழ்நாடு போல் அல்லாமல் கர்நாடகாவில் லோக் ஆயுக்தா மிகவும் சிறப்பாகச் செயல்படும் நிலையில் ஊழல் லஞ்சத்தைத் தடுக்கத் தீவிரமாகப் பணி செய்து செயல்படுகின்றனர்.  இங்கு மட்டுமே லஞ்ச வழக்கு விசாரணைக்கே  லஞ்சம் என்ற நிலை உள்ளது, நாம் அதற்கு பல ஆதரங்களைக் கூறமுடியும் அதற்கு காரணம் ஊழல் ஆட்சியாளர்கள் மற்றும் கையறுநிலை மக்கள் இரண்டுமே, ஆனால் கர்நாடகாவில் அப்படி அல்ல கதக் மாவட்டம் ஷிரகட்டி தொகுதி பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சந்துரு லமானி, சிறிய நீர்ப் பாசனத்துறைக் கட்டுமான ஒப்பந்ததாரர் விஜய் பூஜார் என்பவரிடம் ரூபாய் .11 லட் சத்தை லஞ்சமாகத் தரும்படி கேட்டுள்ளார்.  டாக்டர் சந்துரு லமானி ரூபாய் .11 லட்சம் லஞ்சமாகத் தந்தால் அனுமதி தரப்படும். இல்லாவிட்டால் சங்கடல் பகுதி தடுப்புச்சுவர் அனுமதி கிடைக்காது என்று கூறியுள்ளார். ஆனால் காண்ட்ராக்டர் விஜய் பூஜார் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை.எ லட்சுமேஸ்வர் டவுனில் உள்ள சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனைக்குச் சென்றார். கிராமத்தில் சாலையோரத் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான செலவு சுமார் ரூபாய் 1 கோடி எனவும் ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணி தொடர் பாக 11 சதவீதம் கமிஷன் (லஞ்சம்) கேட்டதால் ஒப்பந்ததாரர் அதிர்ச்சியடைந்தார். (ஆனால் தமிழ்நாட்டில் 30 சதவீதம் வரை அல்லவா கமிஷன் எனும் லஞ்சம் வாங்குகிறார்கள் ஊழல் வாதிகள்!? )




இதுதொடர்பாக அவர் லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கவே, லோக்
ஆயுக்தாவின் காவல்துறை அறிவுறுத்தலின் படி, ரூபாய் 5 லட்சத்தை சட்டமன்ற உறுப்பினர் சந்துருலமானியிடம் ஒப்பந்ததாரர் நேரில் வழங்கிய போது, அதை உதவியாளர் பெற்றார் அதன் காரணமாக உதவியாளர் குரு நாயக் தனது கையில் வைத்திருந்த ரூபாய் .50 ஆயிரத்தை மருத்துவமனைக்கு பின்னால் உள்ள பள்ளி காம்பவுண்ட்டுக்குள் தூக்கி வீசினார். அதனால் பணத்தையும் பறிமுதல் செய்தனர். சந்துரு லமானியை லோக் ஆயுக்தா காவல் அலுவலர்கள் கைது செய்தனர். சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர்களான மஞ்சு நாத் வால்மீகி மற்றும் குரு நாயக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர் கள் மீது இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 7(ஏ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டு விசாரணை நடத் தப்படுகிறது.

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சந்துரு லமானிக்கு சொந்தமான மருத்துவமனையில் சோதனை நடைபெற்றது. 

ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் சந்துரு லமானி லோக்ஆயுக்தாவால் கைது செய் யப்பட்ட நிலையில், பாஜகவினர் இது காங்கிரஸ் அரசின் பழிவாஙகும் நடவடிக்கை என்றனர், ஆனால் பாஜக தலைவர்கள் குறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில் "பாஜக தலைவர்கள் மிகவும் நேர்மையானவர்கள். இந்த நாட்டின் ஊழலற்ற தலைவர்கள் பாஜக தலைவர்கள் தான். லோக்ஆயுக்தா விற்கு தவறான தகவல் கிடைத்திருக்கும். லோக்ஆயுக்தா என்ன சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பின்னர் நான் கருத்துக் கூறுகிறேன்" என்றார். இந்த விவகாரத்தில் உண்மை தெரிந்த பிறகு கருத்துக் கூறுவதாக பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.லஞ்ச வழக்கில் கைதான சந்துரு லமானி முண்டகிரி தாலுகா திண்டூர் தாண்டா கிராமத்தைச் சேர்ந்த டாக்டர். முதலில் ஷிரகட்டியில் தாலுகா மருத்துவாகப் பணியாற்றினார். கொரானா பரவலான சமயத்தில் அவரது சேவையை மக்கள் பாராட்டினர். மேலும் லட்சுமேஸ்வரா நகரில் சொந்தமாக மருத்துவமனையைக் கட்டினார். கடந்த 2023 சட்டசபை தேர்தலில் பாஜகவில்  தொகுதி வழங்கப்பட்டதையடுத்து அவர் தனது அரசு பணியை ராஜினாமா செய்யக் கடிதம் வழங்கினார். ஆனால் அந்க்த கடிதம் காங்கிரஸ் அரசால் ஏற்கப்படாமல் இருந்ததும். சர்ச்சையானது. அதன்பிறகு தேர்தலில் களமிறங்கிய சந்துஉ லமானி 28,520 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திடீரென்று மக்கள் செல்வாக்கு பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கோபம் இவர் பக்கம் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...