நில அளவை அத்துமால் ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய நில அளவை ஆய்வாளா் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தை அளந்து அத்துமால் செய்து தர அரசு கடடணம் போக ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய பறந்தூா் விமான நிலையப் பிரிவு நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு ஊழல் தடுப்புக் காணிகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவைச் சோ்ந்த ரஞ்சித் குமாருக்குச சொந்தமான நிலம் 64 சென்ட் பரந்தூா் விமான நிலையத்துக்கு நில ஆர்ஜித நடவடிக்கை மூலம் வழங்க முடிவு செய்து அதற்கான இழப்பீடு பெற விருப்ப மனுவினை அளித்தாா். அதனை சரிபாா்க்கும் நில எடுப்புப் பிரிவுக் குழுவில் இடம் பெற்றிருந்த காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சோ்ந்த நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு தனக்கு ரூபாய்.1 லட்சம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டுள்ளாா்.
இந்தத் தொகையை லஞ்சமாகத் தர விரும்பாத ரஞ்சித் குமாா் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிபபுத் துறை துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் புகாா் செய்த நிலையில் அவர்கள் ஆலோசனைப்படி ரஞ்சித் குமாரை காஞ்சிபுரம் செங்கழுநீரோடைத் தெருவுக்கு வருமாறு கூறிய சுந்தர வடிவேலு அங்கு முதல்கட்டமாக ரூபாய்.50 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றாா்.
அப்போது மறைந்திருந்த ஆய்வாளா் கீதா தலைமையிலான ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சுந்தரவடிவேலுவைக் பணம் பெற்ற கையடன் கைது செய்து அவரிடமிருந்த ரூபாய்.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்த பின்னர் விசாரணை நடத்தினா்.
ஆய்வாளர் தேவநாராயணன் மற்றும் குழுவினர், லஞ்சப் பணத்தை பெற்ற சுந்தர வடிவேலு மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தனர் பறந்தூர் நிலம் ஆர்ஜித நடவடிக்கை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் சுந்தரமூா்த்தி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி லஞ்சம் பெற்ற சுந்தரவடிவேலு சிறையிலடைக்கப்பட்டாா்.






கருத்துகள்