இரயில்வே சிக்னல் செயலின்மை 58 சதவீதம் குறைவு: விபத்துகளைத் தடுக்க நவீன உள்கட்டமைப்பு
இந்திய ரயில்வேயின் சிக்னல் அமைப்பை நவீனப்படுத்த எடுத்த தொடர் நடவடிக்கைகளால், கடந்த 11 ஆண்டுகளில் சிக்னல் செயல்படாமை 58 சதவீதம் குறைந்துள்ளதோடு, ரயில் விபத்துகளும் கணிசமாகச் சரிந்துள்ளன.
டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, பழைய இயந்திர முறைக்கு மாற்றாக 6,660 நிலையங்களில் மின்ணுமுறை இன்டர்லாக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. லெவல் கிராசிங் கேட்களில் பாதுகாப்பை அதிகரிக்க 10,097 இடங்களில் இன்டர்லாக்கிங் வசதியும், 6,665 நிலையங்களில் மின்சார முறையில் தண்டவாள ஆக்கிரமிப்பைச் சரிபார்க்கும் ‘டிராக் சர்க்யூட்டிங்’ வசதியும் வழங்கப்பட்டுள்ளன.
ரயில்கள் முழுமையாக வந்து சேர்ந்ததை மனிதத் தலையீடின்றி உறுதி செய்ய 6,142 பகுதிகளில் ‘"தடப்பகுதி சரிபார்க்கும் அச்சு கணக்கிடும் கருவிகள் "பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் ரயில்களை இயக்க ஏதுவாக 6,625 கி.மீ நீளத்திற்குத் தானியங்கி சிக்னல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உதிரி மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் மூலம் சிக்னல் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, ஊழியர்களுக்குத் தொடர் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இத்தகைய தொழில்நுட்ப மேம்பாடுகள் ரயில் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளன.
இதனை மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.



கருத்துகள்