தமிழ்நாடு முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணண் காலமானார்! அவருக்கு வயது 92
ராதாகிருஷ்ணண் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். அவர் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராகவும் , உளவுப்பிரிவு டிஐஜியாகவும் பணியாற்றினார். மேலும், சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாக சிறப்பாக பணியாற்றி பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
நாமறிந்த நேர்மையான உயர் அதிகாரி எனப் பெயர் எடுத்த ராதாகிருஷ்ணனுக்கு எழுத்து மற்றும் சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் இந்த நிலையில் காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற இராதாகிருஷ்ணன், உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறுமென
தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் டிஜிபி ஓய்வு இராதாகிருஷ்ணன் மறைவையொட்டி, பல அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சிவில் சப்ளை சி.ஐ.டி.காவல்துறை டி.ஜி.பி. என பணியில் கலக்கியவர். ராதாகிருஷ்ணன் IPS- ADGP பணி ஓய்வு...
ஒரு வரலாற்றுப் பார்வை:- திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் வழியில் கரிசல்பட்டி கிராமத்தில் பிறந்தவர்.கல்லூரிப் படிப்புகளை முடித்து விட்டு சங்கரன்கோவில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக பணியில் சேர்ந்ததன் பின் நமக்கு பேராசிரியர் நமது குருநாதர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை தலைமைப் பேராசிரியர் டாக்டர் சர்வேஸ்வரன் அவர்கள் மூலம் நல்ல அறிமுகம் கொண்ட நாயுடு சமூகத்தில் அடையாளமாவார் வரலாற்று சந்தேகங்கள் வந்தால் தொடர்பு கொண்ட ஆசான் இவர், வங்கித் தேர்வுகள் எழுதி கரிவலம் வந்த நல்லூரிலுள்ள கனரா வங்கியில் பணியில் சேர்ந்து பணியிலிருந்த போது தான் யுபிஎஸ்சி தேர்வை எழுதினார்.
எழுதிய முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்வானார்.
நம்மிடம் முதல் சந்திப்பு 1991 ஆம் ஆண்டு கோடை விடுமுறை நாளில்
" தம்பி என்ன சப்ஜெக்ட் எடுக்கப் போறீங்க?" எனக் கேட்டார்.
"இன்னும் டிசைட் பண்ணல சார், ஹிஸ்ட்ரி எடுக்கலாம்ன்னு.." என்று நான் இழுக்கும் போது இடைமறித்து,
"நோ...நோ... ஹிஸ்ட்ரி ரொம்பப் பெரிய ஏரியா.நிறையப் படிக்கனும்.அதனால ஜியாகிரபியும்,பப்ளிக் அட்மினிஸ்டிரேஷனும் எடுத்துப் படி." என்றார்.
"நீங்க என்ன சார் எடுத்தீங்க?" என்றேன்.
"ஜியாகிரபி தான் தம்பி.." என்றார்.
ஒரே ஒரு முறை தேர்வு எழுதிப் பார்த்தேன்.அதன் பின் அந்த முயற்சிகளைத் தொடரவில்லை. நான் முயற்சிகளைத் தொடர்ந்து செய்யவில்லை என்பதை அறிந்து கொஞ்சம் கோபப்பட்டார். நாயக்கர் வழி வந்த நேர்மை சீற்றம் குறையாத இராதாகிருஷ்ணன். இன்னும் பசுமையான நினைவில்.
கரிசல்பட்டி என்ற வானம் பார்த்த கரிசல் பூமியில் பிறந்து,கல்லூரிப் பேராசிரியராக தன் வாழ்வைத் துவக்கி,யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான ADGP பதவி வரையிலும் வகித்து ஓய்வு பெற்ற இராதாகிருஷ்ணன் சார் இன்று காலை காலமானார். பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக அஞ்சலிகள். நீங்கள் வாழ்ந்த காலம் வரலாறு படித்தவர்களின் வசந்தகாலம், சென்றுவாருங்கள் நீங்கள் படித்த வரலாறு உங்களைப் பேசும் ஓம் சாந்தி.



கருத்துகள்