முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்கேயின் ஜாதி அரசியலில் சிக்கிய காங்கிரஸ் மீட்க ராகுல் முயற்சி பலிக்குமா

திருப்பரங்குன்றம் காங்கிரஸ் . மாநாடு. அதிக சீட்டு, ஆட்சியில் பங்கு என தீர்மானம்.  அதோடு.

மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்பது மூடநம்பிக்கை!

நாட்டிலேயே காங்கிரசுக்கு மட்டும்தான் பாஜகவை எதிர்க்கும் தைரியம் இருக்கிறது!

நீங்கள் (திமுக) செய்த தவறுக்கு நாங்கள் பழியைஙச் சுமந்து திரிகிறோம் !

கருத்து சுதந்திரம் என, கூட்டணித் தலைமையை கழுவிலேற்றி இருக்கிறார்கள்.கூட்டணியை தூக்கிப்பிடித்து வெற்றியை நிலை நாட்டப் போவது உறுதி.ஒன்னு ஆட்சியில் பங்குன்னா தொகுதிகளை சரிபாதியா பிரிச்சாகணும்னு தைரியமாகச் சொல்ல வில்லை அது ரகசியப் பேச்சாக உள்ளது 

1980 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி திமுக தலைவர் மு.கருணாநிதியிடம்  அப்படித்தான் நிபந்தனை விதித்தது

அந்தத் தைரியம் இப்போது பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் மட்டுமே இல்லைன்னா  முடிஞ்ச வரை அதிகமான தொகுதிகளைக் கேட்டு வாங்கி நிற்கும் முயற்சி 

பெரும்பான்மை கிடைக்காமல் போனால்தான், ஆட்சியில் பங்கு கேட்கனும்..

ஆனா காங்கிரஸ் என்ன நிலை எனில் , 

பருத்திக்கு அப்பன் விதை போட்ட உடனேயே அப்பா எனக்கு நாலு சட்டை வேணும்னு கேட்டானாம் புள்ளைஎன்ற கணக்குல தமாஷ் செய்வதாக அவர்கள் கூட்டணியில் பேசும் நிலை 

தேர்தலில் யாருக்கு என்ன நடக்கும்னு தெரியாது. ஆனால் திமுக எதிர்ப்பு அலை உள்ளது இந்த நிலையில் வலுவான கூட்டணி மட்டுமே வெல்லும்.

ஆனா ஒன்று, குட்டியை விட்டு குரங்கு ஆழம் பாக்கற கதை நன்றாக நடக்கிறது.இந்தியா கூட்டணியில் நிலவும் அரசியல் சாணக்கியக் குளறுபடிகளுக்கிடையே தமிழ்நாடு வருகைத் தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் K.C.வேணுகோபால் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின் கேரளா திரும்புகிறார். கூட்டணி குறித்துப் பேச அறிவாலயம் செல்ல மாட்டார் எனத் தகவல்!தேர்தல் நேரத்தல் இடைவெளி இல்லாமல் அரசியல் நடவடிக்கை எப்படி எனப் பார்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாக்கூர்  கேசி வேணுகோபால் சென்னை வருகையில் உடனிருந்தார்




அடுத்த 36 மணி நேரத்துக்குள் முதல்வரைச் சந்திக்க நேரம் கிடைக்காத பட்சத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவது உறுதி. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்காதவரை நேரம் தர திமுக தரப்பு மறுப்பு. எனத் தகவல் ஆனால் காங்கிரஸ் தரப்பு அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்காத வரை நாங்கள் ஏன் எங்கள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் கேள்வி.

பட்சி தகவல்..தவெக நகர்வு சரியாகவே நடக்கிறது  இதில் காங்கிரஸ் கட்சியில் ராகுல் நடவடிக்கை மிஞ்சும் வகையில் கார்கேவின் ஜாதி அரசியல் மேலோங்கிய நிலையில் கடசி ராகுல் கடடுப்பாடடில் மீட்டு எடுககும் முயற்சி என்பதே இதில் உண்மை அது தமிழ்நாட்டில் இருந்து துவங்குகிறது.டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டி கூட்டத்தில் திமுகவை கடுமையாகத் தாக்கி வரும் காங்கிரஸ் தரவு மேலாண்மைப் பிரிவு நிர்வாகி  பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரோடு நெருக்கமாகவே கூட்டத்தில் கலந்து கொண்ட காட்சிகள் காணும் நிலையில் சொல்லும் செய்தி?எதுவானால் தமிழ்நாட்டில் ஆட்களே இல்லாத இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அதிமுக கூடடணியில் பத்து தொகுதி கட்டு ஆச்சரியம் தரும்போது 

இதுகுறித்து பேசிய  அந்துலே , "அதிமுக தலைமையிலான கூட்டணியில் எங்களுக்கு சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம். போட்டியிடாத தொகுதிகளில் NDA கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம்" என்று கூறுகிறார்.


ஆனால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் திமுகவிடம் 41 தொகுதி கேட்பதில் தவறில்லை தானோ? 

ஏற்கனவே திமுக தரப்பிடம் ரகசிய உடன்பாடாக 12 சீட்டை முடிவு செய்த சிதம்பரம் அணியா அல்லது ராகுல் அணியா என அரசியல் களம் காங்கிரஸ் கட்சியைச் சுற்றி வருகிறது.      
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாமென தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

“பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!” என்ற பாரதியின் வரிகளைப் பதிவிட்டு காங்கிரஸ் தலைமைக்கு சவால் விடும் எம்.பி. மாணிக்கம் தாகூர்?
தமிழாசிரியர் மகனல்லவா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...