முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரயில்வே வாரிய (இயக்கம் மற்றும் வணிக மேம்பாடு) உறுப்பினராக திரு ஹரி சங்கர் வர்மா பொறுப்பேற்பு

இரயில்வே வாரிய (இயக்கம் மற்றும் வணிக மேம்பாடு) உறுப்பினராக திரு ஹரி சங்கர் வர்மா பொறுப்பேற்பு

1987 பிரிவு ஐஆர்டிஎஸ் அதிகாரியான திரு ஹரி சங்கர் வர்மா, ரயில்வே வாரியத்தின் (இயக்கம் மற்றும் வணிக மேம்பாட்டு) உறுப்பினராகவும்,  இந்திய அரசின் பதவியின் அடிப்படையிலான செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு, ரயில்வே வாரியத்தின் பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குநராக அவர் பதவி வகித்தார்.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர்; மும்பையின் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்; மும்பையின் தலைமைப் பயணிகள் போக்குவரத்து மேலாளர்; ஹூப்ளியின்  முதன்மைத் தலைமை இயக்க மேலாளர்; மற்றும் லக்னோவின் இந்திய ரயில்வே போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் என இந்திய ரயில்வேயின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை திரு வர்மா வகித்திருக்கிறார்.

திரு வர்மா இரண்டு முறை மாண்புமிகு ரயில் அமைச்சர் விருதையும், பொது மேலாளர் மட்டத்தில் பல்வேறு  விருதுகளையும் பெற்றுள்ளார். சிங்கப்பூர், மலேசியா மற்றும் இத்தாலியில் மேலாண்மை குறித்த பயிற்சியைப் பெற்றிருந்த திரு வர்மா, ரயில்வே போக்குவரத்து மற்றும் மேலாண்மையில் புகழ்பெற்ற நிபுணராக அறியப்பட்டுள்ளார்.

கருத்துகள்