தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கட்சிப் பிரமுகர்கள்,
இன்று முதல் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொண்ட நிலையில்,
விருப்ப மனு பெற விரும்பும் கட்சியினர் , பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது
https://drive.google.com/file/d/1Y9PfGCXvzVTbJ6B6S128PKJZE7laWgiK
இந்த இணைப்பின் வாயிலாக விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை முன்பே குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி மாதம் 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர் அல்லது தபால் மூலமோ அனுப்பலாம் என தவெக தலைவர் நடிகர் விஜய் உத்தரவின்படி கேட்டுகொள்வதாக தமிழக வெற்றிக் கழகம்பொதுச் செயலாளர்
என்.ஆனந்த் எனும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்த நிலையில் இன்று 50,000 க்கும் அதிகமான மனுக்களை கட்சியினர் பெற்றதாகத் தகவல்
புலி திரைப்படத்திற்காக சம்பளம் பெற்ற ரூபாய்.15 கோடி பணத்தை வருமானவரி செலுத்தாமல் மறைத்ததாக நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறை ரூபாய்.1.5 கோடி அபராதம் விதித்தது சரிதான் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வருமான வரி தொடர்பாக நடிகர் விஜய் வழக்கு தள்ளுபடி ஆனாலும் அபராதத்தை செலுத்துமாறு உத்தரவு . அது ஒன்றும் ஊழல் செய்த பணம் இல்லை, உழைப்பு மூல வருவாய் தான்.
1.5 கோடி .விதி மீறல் வருவாய் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம். கருத்து


















கருத்துகள்