முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வலியே வந்து சிக்கிய ஜெயலலிதாவின் வாரிசுகள், வரியும், அபராதமும் செலுத்த நிர்பந்தம் வரலாம்

முன்னால் முதல்வர் அஇஅதிமுக பொதுச்செயலாளர் காலஞ்சென்ற செல்வி ஜெ. ஜெயலலிதாவின் வருமான வரித்துறை பாக்கியை வட்டியுடன் சேர்த்து ரூபாய்.9.17 கோடியாக உள்ளதை இதுவரை செலுத்தப்படாமலேயே உள்ளது.


அதேபோல் அவருக்கு ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது  அவர் காலமானதால் அவரது 100 கோடி ரூபாய் அபராதத் தொகை மட்டும் இதுதுவரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது, (நகைகள் ஏல விற்பனை செய்து வந்தது போக) ஊழல் வழக்கில் சிறை செல்லாமல் காலமான செல்வி 
ஜெ.ஜெயலலிதாவின்

இரண்டாம் தரப்பு வாரிசாக போராடி நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற அவரது அண்ணன் காலஞ்சென்ற ஜெ.ஜெயக்குமாரின் மகனும், மகளும் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் மற்றும் தீபா ஆகியோர் தற்போது ரூபாய்.1.12 கோடியை வெள்ளையாகவே செலுத்தி உள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரியைச் செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் அதை வைத்து வருமான வரித்துறை கணக்குகளின் பாக்கி வரித் தொகை நேர்செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.



சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வருமான வரித்துறை அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளதில், காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் மற்றும் தீபா தரப்பில் ரூபாய்.1.12 கோடியை செலுத்தி உள்ளார். வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூபாய்.9.17 கோடியாக உள்ளது என்றது.



ரூபாய்.13 கோடி வரிப் பாக்கியை செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து  காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா, இரண்டாம் தரப்பு வாரிசுகள் தீபக் மற்றும் தீபா ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



மேலும், வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த வரிப்பாக்கியை இருவரும் வாரிசு எனச் செலுத்தும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் ஜெ. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூபாய் 100 கோடி அபராதம் முழுவதும் செலுத்த வேண்டிய நிலையும் அவர்களுக்கு வரலாம் என்பதால் தான் இந்த வரிப் பாக்கியை இருவரும் செலுத்தத் தயங்குகிற்கள் என பலரும் பேசுவதை அவர்களும் அறிவர்.இதற்கு முன் ஜெ.ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அலுவலரை நியமிக்கக்கோரி அதிமுக நிர்வாகி பெங்களூரு புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கில் எதிர்தரப்பினராக தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

 உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு,  செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெ.ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்தது. அதன்பின் மேலும் அந்தத் தீர்ப்பில் திருத்தம் செய்து, அவர்கள் இருவரும் நேரடி வாரிசுகள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.                      எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்த கடந்த ஆட்சியில்



செல்வி ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்ற  நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியதென்றும் தீபா மற்றும் தீபக் அங்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தும் என அரசு தரப்பு அப்போது தெரிவித்தது. இதனை அடுத்து, தீபா மற்றும் தீபக் ஆகியோர் அங்கு செல்வதை விடுத்து, சட்டரீதியாக பிரச்சனையைக் கையாளவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.






காலமான பின் செல்வி ஜெ.ஜெயலலிதாவின்   வாரிசுதாரர்கள் என கடந்த ஆறாண்டுகளில் ஜந்து பேர் வந்து விட்டனர், அவரது உருவ ஒற்றுமையை வைத்து பலரை ஒரு கும்பல் தயார் செய்து வரிசையாக ஒவ்வொருவராக அனுப்பிவைத்து ஜெ.ஜெயலலிதாவின் புகழைக் கெடுக்க செய்து வரும் நிலையில் அந்த வாரிசு என வந்து செய்தியாளர் மத்தியில் பேசும் போலிகளை இந்த வருமானவரிப் பாக்கியையும் நீதிமன்றம் விதித்த அபராதத்தையும் செலுத்துமபடி கூறினால் மன்னர் சாலமன் அவையில் குழந்தைக்கு உரிமை கோரிய போலியான பெண் நிலை போல ஆகலாம்.



செல்வி ஜெ.ஜெயலலிதாவின் தாயார் காலமான நடிகை சந்தியா ஜெ.ஜெயலலிதாவுக்கு ஒரு உயில் எழுதி வைத்தார். ஆனால் செல்வி ஜெ.ஜெயலலிதா எந்த ஒரு உயிலும் எழுதவில்லை எனப் பலரும் கூறிவரும் நிலையில் தனக்கு வாரிசு இல்லை என்பதை வழக்கு மன்றங்களில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். பிற இடங்களிலும் அதை ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படியானால் இப்போது நான் செல்வி ஜெ.ஜெயலலிதா மகள் என வரும் நபர்களைத் தயாரித்து அனுப்பும் நபர் யார், எதற்கு இந்த முயற்சி என்பதை நாடறியத் தெரிய வைக்க வேண்டும், அப்போது தான் சில தலை காட்டாத மைலாப்பூர் தந்திரக் குள்ளநரிகள் சிக்கும். அதை அவரால் வளர்க்கப்பட்ட அதிமுக தானே செய்ய வேண்டும் இதுவரை செய்தார்களா? ஏன் அதைச் செய்யவில்லை என மற்றவர்கள் கேட்டார்களா இல்லையே!எல்லாம் சுயநலமிகளின் அரசியல்.






சாயம் விரைவில் வெளுக்கும். இரட்டை இலையும், அதிமுகவும் மற்றொரு நபருக்கு மாறும் போது அல்லது அது முடக்கப்படும் போது சில உண்மைகள் வெளியாகும்.  இனி நடிகர் விஜயின் தவெக கூட்டணியில் வி.கே.சசிகலா நடராஜன் ஆதரவாளர்கள் களம் காண்பார்கள். அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி சசிகலா நடராஜன் தரப்புக்கு துரோகம் செய்து அதிமுகவைக் கைப்பற்றிய நிலை மாறி தற்போது டி.டி.வி.தினகரன் நடத்தும் அமமுகவை சசிகலாவிடமிருந்து பிரிக்க நடக்கும் முயற்சிகள் சுவாரஸ்யமானது. அந்த வழிவழி மடாதிபதி சிறையில் இருந்ததை அவரது சிஷ்ய கோடிகள் மறக்கவில்லை அல்லது மன்னிக்கவுமில்லை, ஆனால் சத்திரியப் பெண்மணி வி. கே சசிகலா நடராஜன் நடத்தும் அரசியலை அவர்களால் இதுவரை வெல்லவும் முடியவில்லை, நாற்பது வருடம் பல குடும்ப நட்பும் உறவுமே உடைபடுவதைப் பல இடங்களில் காணும் நிலையில், இரு பெண்கள் ஆட்சி அதிகாரம் செலுத்தி தனி பலம் சேர்த்ததை அந்தக்கும்பலால் மறக்க முடியவில்லை, உறவுக்காக சிறை செல்லவே யோசிக்க வைக்கும் பலர் மத்தியில் நட்புக்கு சிறை சென்ற வி.கே.சசிகலா நடராஜன் செயல் அறியாத பலர் தூற்றலாம், அறிந்த நமக்கு அவரது தியாகம் பெரிது. உண்மை தியாகிகளுக்கு எப்போதும் வாழ்வு உண்டு துரோகிகள் என்றாவது வகையாக சிக்குவார்கள் ஆதரவற்று இதுவே இயற்கை நியதி. அரசியல் பிழைப்புக்கு ஜெயலலிதா ஜெயராமனை வணங்கியவர்களை விட வி. கே.சசிகலா நடராஜனை வணங்கியவர்களே அதிகம்,  வானில் பறந்த போதிலும் வழியில் விழுந்து வணங்கியவர்கள் அவர்கள் தான் என்பதை நாமும் நாடும் நன்கு அறிவோம்.




இதுவரை புதியபார்வை ஆசிரியர் முனைவர் ம.நடராஜனால் அமைச்சரான நாற்பத்து ஆறு நபர்கள் மற்றும் நடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியலுக்காக வந்தவர்கள் அவர்கள் அவரோடு புகைப்படம் எதுவும் எடுத்தார்களா இல்லையே? 

புதியபார்வை ஆசிரியருடன் பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர்
ஏன் பயம், அவரை இரகசியமாக வந்து சந்தித்து பதவி வாங்கிய பலரை அறிவோம். இதை நாமே பலமுறை கண்டுள்ள நிலையில் அரசியல் பலரை நிறம் மாற்றிவிடுகிறதே என்பது தான் காலம் கூறும் உண்மை. தற்போது நடிகர் விஜய் ரூபத்தில் தவெக வருகிறது, அதில் சிலர் அமைதிப்படை அமாவாசைகள் அரசியலில் பிரகாசிக்கும் நிலையில், அவரை அறிந்து உடன் பார்த்த பலர் பௌர்ணமி நிலவாய் பிரகாசிககாமல் போனது நிஜம் தான், காரணம் சில கிரகணங்கள் வந்து பௌர்ணமியைக் கூட மறைத்து விடும், ஆனால் அது விரைவில் விலகும் வெளிச்சம் வரும் விசில் சப்தம் தரும் என மக்கள் நம்பிக்கையாகப் பேசுவதே சின்னம்மா எனும் அவருக்கு எதிரிகளை வீழ்த்தக் கிடைத்த மகிழ்ச்சி.தான்                                  "பொன் பொருளைக் கண்டவுடன்…
வந்த வழி மறந்து விட்டு…
கண்மூடிப் போகிறவர் போகட்டுமே... காவலரே வேஷமிட்டால்…கள்வர்களும் வேற்றுருவில்…
கண்முன்னே தோணுவது சாத்தியமே…
காத்திருந்து கள்வர்க்கு…
கை விலங்கு பூட்டி விடும்…
கண்ணுக்கு தோணாத சத்தியமே…

போடும் பொய் திரையைக் கிழித்து விடும் காலம்…
புரியும் அப்போது மெய்யான கோலம்"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...