வங்காள தேசத்தில் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும்
பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்ததில் பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டதால் புதிய பிரதமர் யார் என்பதில் இழுபறி வந்தது. வங்க தேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. 18 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதையடுத்து முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நடந்தது.
வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில், ஒரு தொகுதியில் வேட்பாளரின் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்ததில் 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர். நாடு முழுவதுமுள்ள 42,779 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 8 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 9 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, வங்கதேச பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி தாரிக் ரஹ்மான் தலைமையிலான BNP கட்சி. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ள BNP கட்சி, மேலும் சுமார் 50 இடங்களில் முன்னிலையில் வந்தது.
ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி வெறும் 34 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடும் பின்னடைவு ஏற்பட்டது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில், வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும், பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி உள்ளேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். வங்கதேசத்தின் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது!
வங்க தேசம் என்ற நாடு முன்னால் பிரதமர் இந்திரா காந்தி உருவாக்கியது. பாகிஸ்தானிலிருந்து இரவோடு இரவாக இந்திய ராணுவத்தை இறக்கி புது நாடு உருவாக்கத் தெரிந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி.
1795-ஆம் ஆண்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி வங்காள ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வரும்போது உத்திரபிரதேசத்தில் உள்ள புனித காசி வாழ் அத்தனர்கள் ஆங்கிலேயனிடம் சென்று இச்சட்டத்தில் எங்களுக்கு மட்டும் தூக்குத் தண்டனை என்கிற தண்டனை கிடையாது என்று சட்டத்தை மாற்று என்று கோரிக்கை வைக்கவே நம்மை அடிமை கொண்ட ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இன்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்கிற அதே statementஐத்தான் சொன்னார்கள்.. அந்தனர்கள் இந்து மதத்தின் புனிதப் பிறப்பாளர்கள்.. அவர்கள் கடவுளுக்கும் மேலானவர்கள்.. இந்து மதத்தின் மற்ற ஜாதியினர் வணங்கக்கூடிய, வணங்கவேண்டிய புனிதர்கள்.. எனவே அந்தனர்களுக்கு மட்டும் தூக்குத் தண்டனை என்பதை நீக்க வேண்டும் என்று கேட்டனர்.. ஆங்கிலேயனும் அவ்வாறே செய்தான்.
அன்றிலிருந்து இன்றுவரை அப்படியேத்தான் இருக்கிறார்கள்.


கருத்துகள்