ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்கில் 100 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் சர்வதேச மாநாட்டு மையத்தில் மத்திய அரசின் மீன்வளத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட குளிர் நீர் மீன்வளம் குறித்த தேசிய மாநாட்டில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ₹100 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்கா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
குளிர் நீரில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் உற்பத்தியாளர்களின் வருமானத்தை வலுப்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், மதிப்பு கூட்டலை மேம்படுத்தவும், ஏற்றுமதி சந்தைகளில் நுழையவும் வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இதில் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்துவதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜம்மு - காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் திரு எஸ்.பி. சிங் பாகேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








கருத்துகள்