தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் , விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்த இந்தியதா தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவின்
முழு விவரம் ."கரூர் சம்பவத்துக்கு இரவே கிடைத்த உடற்கூறாய்வு சான்றிதழ்..ஏன் அது ஏன் விளாத்திகுளம் பெண்ணுக்கு கிடைக்கவில்லை" என நடிகை கௌதமி கூட கேட்கும் நிலையில்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் . நிர்வாகக் காரணங்களுக்காக ஒரே நாளில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் , விருதுநகர் ஆகிய 4 மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.தேர்தல் ஆணையத்தின் கடுமையான உத்தரவுகள். சிறப்பு
தேர்தல் ஆணையம் இடமாற்றத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், சில முக்கியக் கட்டுப்பாடுகளையும் விதி
த்துள்ளது. நியமிக்கப்பட்ட நான்கு காவல்துறை அலுவலர்களும் உடனடியாக அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான அறிக்கையை நாளை மார்ச் மாதம் 17 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது மாற்றப்பட்டுள்ள முந்தைய நான்கு காவல்துறைக் கண்காணிப்பாளர்களையும் தேர்தல் தொடர்பான எந்தவொரு பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக புகார்களுக்கு உள்ளாகும் உயர் அதிகாரிகள் உயர் அலுவலர்கள் அல்லது நீண்ட காலம் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் தேர்தல் நேரத்தில் மாற்றப்படுவது வழக்கமான நடைமுறை ஆகும். இந்த அதிரடி மாற்றம் காவல்துறை தரப்பு மக்கள் மட்டுமே எஜமானர்கள் என்ற உணர்வு வர வேண்டும்
கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றம் தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு:2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து நியாயமான உத்தரவு பிறப்பித்துள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்
கரூர் மாவட்டத்தின் எஸ்.பி: யாக டி.என்.ஹரிகிரண் பிரசாத், IPS (2016)
ஈரோடு மாவட்ட எஸ்.பி: யாக .டி.வி.கிரண் ஸ்ருதி,IPS (2018)
நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி:யாக சுஜித் குமார்,IPS (2013)
விருதுநகர் மாவட்ட எஸ்.பி: யாக டாக்டர் என். ஸ்ரீநாதா,IPS (2013) தற்போதுள்ள எஸ்பி ஜோஷ் தங்கையா, திமுகவின் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு சாதகமாக இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரை இடமாற்றம் செய்து புதிய எஸ்பியாக டி.என்.ஹரிகிரண் பிரசாத்தை தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்த நிலையில் இவர்களையும் மாற்ற வேண்டும் என புகார் சென்றது.
சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளாக தீரஜ்குமார் [உள்துறை கூடுதல் தலைமை செயலாளர்), அமுதா [வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர்), ககன்தீப் சிங் பேடி [ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர்), ஜெ.ராதாகிருஷ்ணன் [மின் வாரிய தலைவர்) ஆகியோரை தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடுத்தக்கூடாது; வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி, தேர்தல் ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மனு அளித்துள்ளார்.
இதேபோல் மேற்கு வங்காளத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலரை ECI மாற்றியது, துஷ்யந்த் நரியாலா புதிய தலைமைச் செயலாளராகவும், சங்கமித்ரா கோஷ் புதிய உள்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
மாநிலத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறைச் செயலாளர் ஜெகதீஷ் பிரசாத் மீனா ஆகியோர் தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.











கருத்துகள்