முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாங்குநேரி கொலை சம்பவத்தில் 7 நபர்கள் கைது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கொலை சம்பவத்தில் 7 நபர்கள் கைது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்றிரவு இருவர் படு கொலை செய்யப்பட்ட  சம்பவம் குறித்து நேற்றிரவே தென்மண்டல ஐஜி மற்றும் திருநெல்வேலி சரக டிஐ ஜி நேரில் சென்று விசாரணை நடத்தினர்

தற்போது தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் முன்னிலையில் பல்வேறு ஆலோசனை  நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது 

இந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. நாங்குநேரி அருகே ஒரு கும்பல் ஒன்பது நபர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததோடு, ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலை 'நாளொரு கொலையும், பொழுதொரு வன்முறையுமாக' தமிழ்நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் சீரழித்து  விட்டது ஆட்சி முடிவில் திமுக அரசு. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெட்டலாம், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்ற சூழ்நிலை உருவானதற்கு காரணம் தமிழ்நாடு அரசின் உழல் இல்ல்லாத தலைமை இல்லை என்பதும் நிர்வாகமின்மை மற்றும் அலட்சியம் தான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை, குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து போனதற்கு காரணம் லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் ஊறிப்போன  கொள்கைகளினால் தான். குற்றம் நடைபெற்ற பின்னர், குற்றவாளிகளை பிடித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதை குற்றங்கள் நடைபெறாவண்ணம் அரசை நடத்துவது தான் நல்ல அரசுக்கு அழகு என்பதை முதலமைச்சர்  உணரவேயில்லை. 

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் 

 நடைபெற்ற  சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட நபர்கள், கூறும் விவரம் 

சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் கஞ்சா போதையிலோ, சாராய போதையிலோ இல்லை. அவர்கள் மிகத்தெளிவாக ஜாதிய உணர்வு மட்டுமே கொண்டிருந்துள்ளார்கள்.

 வெட்டுப்பட்டவர்கள் அனைவரும் 55 வயதுக்கு மேலே உள்ள ஓட முடியாத வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி

சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒரு பெரிய எண்ணிக்கையில் பலரை கொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடும், விரைவாக சம்பவத்தை முடித்துவிட்டு வேகமாக பறந்து சென்று விட வேண்டும் என்ற நோக்கத்தோடும் வந்துள்ளார்கள்.

முதலில் நாங்குநேரி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் பலரை தலையை வெட்டி சிதைத்து விட்டு பிறகு அங்கிருந்து பைக்குகளில் வேகமாக சென்று களக்காடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட கடம்போடுவாழ்வு என்ற கிராமத்திற்கு சென்று அங்கு சாலையில் நின்ற இரண்டு பேரை கொடூரமாக வெட்டி இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது நாடார் மற்றும் இரண்டு யாதவர் சமுதாயத்தினர், ஒரு படடியல் சமூக சாம்புவர், ஒரு ஆச்சாரி, ஒரு ஒடிஸ்லா மாநிலத்தை சேர்ந்த செங்கல்சூளையில் பணி செய்த தொழிலாளி.

தற்போது 2 பேர் சம்பவ இடத்தில் இறப்பு என்றாலும் வெட்டுப்பட்ட பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் உள்ளனர். சிலர் கடைசிக்கட்டத்தில் இருப்பதாகத் தகவல்.

கொலைகார கும்பலுக்கு திட்டமிட்ட ஒரு உள் நோக்கம் இருக்கின்றது. அதன் காரணம் எது என்பதும் , சட்டமன்றத் தேர்தல் வரப்போகும் இந்த காலத்தில் ஏன் இந்த கொடூர கொலைகள் செய்யப்பட்டன என்பதும் காவல்துறையின் புலன் விசாரணையில் தான் தெரியம்

சம்பவத்தில் ஈடுபட்ட 7 நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பொதுவாக நாங்குநேரி ஜீயர் மடத்தின் சொத்துக்கள் என்பது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள். அதன் விவசாயம் சார்ந்த வாழ்வியல், அதன் இப்போதைய சந்தை மதிப்பு பல கோடி . அது ஒரு தனி அரசாங்கம். அதை அனுபவிப்பதிலும், அதன் வில்லங்கங்களிலும், அதன் மூலமாக உருவாகும் சமூக அரசியல் பொருளாதார அதிகாரத்திலும் "வரும் மனப்போக்கே இது போன்று நடக்கும் கொடூரங்களின் ஆணி வேர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...