முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலாச்சாரம் கலந்த வட்டார வாழ்வியல் பேசும் தாய் (க்) கிழவி திரை விமர்சனம்

சிவகுமார் முருகேசன் எனும் இளைய புதிய இயக்குனர் தந்த முதிய சிந்தனைகள் தான் தாய் கிழவி (அப்பத்தா -ஆயா)  தற்கால முதியோர் இல்லத்தில் மூழ்கடித்த பலரின் சோகம், சுயநலம் கலந்த கூட்டுக்குடும்பச் சிதைவுகள் கடக்க முடியாத இக்காலத்தில்     2K வுக்கு பின் பிறந்த தென்மாவட்ட பிள்ளைகளான மக்களுக்குத் தெரியாத நிகழ்வுகள் அதிகம்.


இனித் திரைப்பட விமர்சனம் :- 

'அதிகாலையில் மூதாட்டி பவுனுத்தாயி கண் விழித்து, வட்டிப் பணத்தை வசூலிக்க வெளி வருகையில்  கிராமமே அலறுகிறது. தாயை மறந்து சொத்தை மட்டுமே பிரிக்கப் பார்க்கும் மூன்று மகன்களும், மாமியாரை யாரோ என நினைக்கும் மூன்று மருமகள்களும், நகைக்காக மாமியாரை விரோதியாகவே, பார்க்கும் மருமகனும், வில்லன்களாகவே  விரோதிகளாகவே கதாபாத்திரத்தில் ஜொலிக்க வைத்து, வாழாவெட்டியான மகள் மட்டும் தனது மகனுடன் தாய்க்குத் துணையாக இருக்கிறாள். பவுனுத்தாயி பக்கவாதத்தில் விழுந்து நினைவிழக்க, ஊரே அதை விழாவாவாகக் கொண்டாடுகிறது. 

ஒரு சிலரைத் தவிர எல்லோருமே பவுனுத்தாயின் மரணத்திற்குக் காத்திருக்க, கோல்டு குமாரின் வருகையால் காட்சி தலைகீழாக மாறுகிறது. நகைக் கடைக்காரரான கோல்டு குமாரிடமிருந்து பவுனுத்தாயி வாங்கிய 160 பவுன் எங்கிருக்கிறது? என்ற கேள்விக்கான விடை,     இரண்டு காட்சியில் வரும் இளவரசுவின் பைத்தியக்காரன் பாத்திரம் தான் கதையில் திருப்பம்,  நினைவற்ற நிலையில் பவுனுத்தாயி கை அசைப்பதில் இருக்கிறது எனத் தேடி அலைகிற அத்தனை பேரும் பவுனுத்தாயின் உயிரைக் காப்பாற்றப் போராடுகின்றனர்.

அவர்கள் வெற்றியடைந்தார்களா?  160 பவுன் தங்கம் என்ன ஆனது?என்பதையெல்லாம் கலகலப்பாகச் சொல்கிறது திரைப்படம்.  வெற்றிலைக் கறைபடிந்த வெள்ளந்தி என்பதை விட வஞ்சகமில்லாத புன்னகையும், கூந்தலை அள்ளிமுடித்த அலட்சியக் கொண்டையுமாய் வலம் வரும் பல பாட்டியை சிறுவயது முதல் பார்த்தவர்கள் நாம் சிந்திக்கும்போது, முதலில் மனதுக்குள் வருவது அவர்கள் காதுகளில் அணிந்திருந்த அந்தக் கனத்த காதணி தான். 


‘தண்டட்டி, 
பாம்படம், முடிச்சு, குண்டலம்,   கொப்பு அல்லது பூடி, நகைகள் சங்க இலக்கியத்தில் ‘தண்டட்டி’ பற்றிய குறிப்புகளுண்டு பாண்டிய நாட்டில் 12 மாவட்டங்களில் பெண்கள் அணிந்ததாகக் குறிப்புகள் சொல்கின்றன. ஆண்கள் கூட இந்தக் காதணிகளை அணிந்ததாகவும் குறிப்புகள் இருக்கிறது.

பவுனுத்தாயின் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன்   என மூன்று மகன்களோடு எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும், மருமகனான வேட்டைக் குமாரும் ,மகளான டாக்டர் ரேச்சல் ரேபக்காவும் மனதில் உட்கார்ந்து விடுகின்றனர். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நோக்கி நகர்பவர் வேலூர் பிலிப்ஸ் மகளான நடிகை டாக்டர் ரேச்சல் ரெபெக்கா தற்போது தெரிகிறார். மருத்துவரான ரேச்சல், 'இப்படை வெல்லும்' திரைப்படம் மூலம்  அறிமுகமாகி 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் நீதிபதியாக சில நிமிடங்கள் நடித்திருந்தாலும் இதில் அழுத்தமான கதாபாத்திரமானார். தொடர்ந்து, மணிகண்டன் நடிப்பில் ஹிட் அடித்த குட் நைட் படத்தில் அக்காவாக நடித்து கவனம் ஈர்த்தார். கடைசி விவசாயி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை  வென்றார். தற்போது, தாய்கிழவி திரைப்படத்தில் ராதிகாவின் மகளாக நடித்து படம் முழுவதும் வந்து பலரையும் ஈர்த்துள்ளார். முக்கியமாக, இப்படத்தில் பதின்ம வயது மகனுக்கு அம்மாவாக நடித்ததுடன் உசிலம்பட்டி வட்டார வழக்கில் வசனம் உச்சரிப்புகளை அட்டகாசமான உடல்மொழிக்குக் கொண்டு வந்து பலரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.


தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்திற்கு முன்னேறிய டாக்டர் ரேச்சல் ரெபெக்கா எதிர்காலத்தில் விருதுகள் வாங்கும் நடிகையாகவே வலம் வருவார். நடிகர் ஒளிப்பதிவாளர் இளவரசு இரண்டே காட்சிகள் தான். படத்தின் போக்கை அப்படியே திருப்பிப் போட்டு விடுகிறார், வழக்கம் போலவே கலக்கியிருக்கிறார்.

கலகலப்பாக நகரும் படத்தில், ஆம்புலன்ஸில் உயிர் காப்பைத் துண்டிக்கும் காட்சியிலும், இத்தனை வயசுக்கு மேலே கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போற?என்ற கேலிக்கு, பென்னிகுயிக்காக வரும் நடிகர் முனீஸ்காந்த் பதில் சொல்கிற காட்சியிலும் கலங்கடித்து விடுகிறார்கள். குறிப்பாக, நடிகர் முனீஸ்காந்த் பேசுகையில், படத்தைப் பார்க்கிற கல்யாணமான அத்தனை பேரும் தாங்கள் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்து உடனே தங்கள் மனைவிகளை அணைத்துக் கொள்ளவே நினைத்திருப்பார்கள்.

திரையிலும் கதையிலும் இத்தனை பணத்தை வசூலிக்கும் பவுனுத்தாயி, ஞாயிறு அன்று எங்கே செல்கிறார்? என்ன செய்கிறார்?என்பதுதான் சுவாரஸ்யமே.

அருகிப் போன பெண்களின் விளையாட்டுக்களில் ஒன்றான பல்லாங்குழியை வைத்து பெண்களுக்கு மிகப் பெரிய பாடத்தை நடத்துகிறார் பவுனுத்தாயி.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையும், விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவும் வைகை உற்பத்தி ஆகும் வருஷநாட்டு மலையையும் ஒரு கருமாத்தூரைச் சுற்றிய கிராமத்தையும், அதன் வாழ்வியலையும் நேர்த்தியாகப் பதிவு செய்ய பெரும் உதவியாக இருந்திருக்கிறது. யக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு முதல் படமாம். ஆச்சர்யம்.

தலைப்பில் ஒற்றுப் பிழை சென்டிமென்ட் தொடர்கிறது. தாய் (க்) கிழவி அல்ல.தாய் கிழவி தான். ஊரையே அதிரடித்து வட்டி வசூல் செய்கிற, சுகர்,பிரஷர் ஒண்ணும் கிடையாது என்றபடி பழைய காலக் கும்பாவில் உள்ள கறிச் சோற்றைக் குழைத்தடிக்கிற, குழந்தையின் கையில் இருக்கிற காசைக் கூடப் பிடுங்குகிற, சொத்தைப் பிரிக்காததால் சண்டையிடும் மகன்களையும்,நகை தராததால் மகளுடன் வாழாத மருமகனையெல்லாம் இடது கையால் டீல் செய்கிற,மகளின் திருமணத்தை அறுத்து மறுமணம் கட்டுகிற,ஒரு வேளை தனித்து வாழ நேர்ந்தாலும் சொந்தக் காலில் வாழ வகை செய்கிற,மகாராணி பவுனுத்தாயாக ராதிகா,சிறிது தவறினாலும்,அதீத நடிப்பாகி விடக் கூடிய ஆபத்தை அலட்சியமாகக் கடந்திருக்கிறார்.அவரது நடிப்பிற்கும்,ஆச்சர்யமான ஒப்பனைக்கும் உசிலம்பட்டி பிறமலைக் கள்ளர் வாழ்வியல் வட்டார வழக்கில் ஒய்யாரமாக நடக்கிறார் தங்கம் 2கிலோ நானூறு கிராம் பவுன்களைச் சேர்த்த பவுனுத்தாய் எனும் உசிலை காது வளர்த்த பம்படக் கிழவி, நகர்புற அப்பத்தாவாக நடித்த ஊர்வசிக்கும், கிராமத்து அப்பத்தாவாக நடித்த ராதிகாவுக்கும் போட்டி வைக்கலாம். எல்லோருக்கும் வயதாகும் ஆனால் வாழ்வியல் மட்டுமே வரலாறு பேசும்.“’கடைசி விவசாயி’ மணிகண்டனின் உதவி இயக்குநர் சிவகுமார். பிறந்த மண் சார்ந்து ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை ஒரு கதாபாத்திரமாக ‘தாய் கிழவி’ படத்தில் முத்துக்குமாருக்கு கிடைத்திருக்கிறது. பேஷன் ஸ்டுடியோஸ், நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த தாய்(க்)கிழவி வெற்றியைத் தொடர்ந்து பல வட்டார வாழ்வியல் சார்ந்த படங்கள் வரும். அலலிநகரத்து இயக்குனர் பாரதிராஜா பதிவுசெய்யத் தவறிய கதைக்களமிது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...