முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்து மாநிலங்கள் உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு

ஐந்து மாநிலங்கள் 


உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு

மொத்தத் தொகுதிகள்  234 ல் ஒரே கட்டமாக நடக்கும் 

தேர்தல் வாக்குப்பதிவு நாள்  23.04.2026

பதிவான வாக்குகள் எண்ணிக்கை  04.05.2026 ஆம் தேதி,

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 30.03.2026 ஆம் தேதி, 

வேட்புமனு தாக்கல் முடிவு – 06.04.2026  ஆம் தேதி,   





தமிழ்நாட்டு திமுக அரசு உள்ளிட்ட 5 மாநில அரசுகள் தனது அதிகாரத்தை இன்று மாலை முதல் இழக்கவுள்ளது. இதனையடுத்து தேர்தல் முடியும் வரை காபந்து அரசு தான் செயல்பாட்டில் இருக்கும். தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அமையவுள்ள புதிய ஊழலற்ற அரசு அமைவதற்கு மக்கள் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டிய காலம் இது தான்,  புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் இனி வெளியிட முடியும். எனவே தற்போதுள்ள முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்கள் என அனைவரும் இன்று மாலை அதிகாரத்தை இழக்கவுள்ளனர். அந்த வகையில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி நாளாகவே இன்றைய தினம் பார்க்கப்படுகிறது.



காபந்து அரசாக மாறும் தமிழ்நாடு அரசு

கடந்த 7.5.2021 ஆம் தேதி அன்று பொறுப்பேற்ற திமுக அரசு பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் கடந்த 5 ஆண்டுகளாக பலவற்றை அறிவித்து சிலவற்றை செயல்படுத்தி வந்தது. இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசிடமுள்ள அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். இதனையடுத்து தற்போதுள்ள திமுக அரசு, காபந்து அரசாக மாறிவிடும். காபந்து அரசு அமலுக்கு வந்த பிறகு முதமைச்சர், அமைச்சர்கள் என யாரும் தலைமைச் செயலகத்திற்கு வந்து அரசு உயர் அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ள முடியாது.








தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு 

முக்கிய திட்டங்களை 


இனி அறிவிக்கவும் முடியாது. இது மட்டுமில்லாமல் யாரும் அரசு வாகனங்களைப் பயன்படுத்த முடியாது. முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை தங்களுக்கான வாகனங்களை தலைமைச் செயலகத்தில் விட்டுவிட வேண்டும். அதே நேரத்தில் ஏதாவது மிக முக்கியமான பிரச்சினை என்றால் மட்டுமே அரசு உயர் அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் ஆலோசனை நடத்தலாம். அப்படித்தான் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக அரசு காபந்து அரசாக மாறிய நிலையில், கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தது.








சாதனைப், புகைப்படங்கள் அகற்றப்படும்

எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டு அரசு அதிகாரிகளோடு கூட்டங்கள் நடைபெற்றது. எனவே அந்த முறையே தற்போதும் பின்பற்றப்படும், மேலும் தலைமைசெயலகத்தில் அரசின் சார்பாக வைக்கப்பட்டுள்ள சாதனைகளை கூறும் விளக்கப்படங்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு தேர்தல் தொடர்பான தகவல்கள் மட்டும் இடம் பெற்றிருக்கும் 5 மாநிலங்களில் பொதுத்தேர்தல் - வாக்குப்பதிவானது 

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் , மற்றும் கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல்  மாதம் 9 ஆம் தேதியும், ஒரே கட்டமாக 

தமிழ்நாடு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியும்

மேற்குவங்காளத்தில் (2 கட்டமாக) ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி  மற்றும் 

 ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி  எனவும் 

வாக்கு எண்ணிக்கை

மே மாதம் 04 ஆம் தேதி எனவும் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது, தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்தது. அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை கிட்டதட்ட உறுதி செய்துளளது 04.05.2026. ஆம் தேதி முடிவு வரும் இந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், கேரளம் என நான்கு மாநிலங்கள், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் தேதியை அறிவித்து இந்த 5 மாநிலங்களின் ஆட்சிகாலம் வருகிற மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. தேர்தல் சட்டங்களின் படி, ஆணையம் அந்தத் தேதிகளுக்கு முன்பாக தேர்தல்களை நடத்தவிருக்கிறது.

டெல்லி விஞ்ஞான் பவனில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதி தொடர்பாக, "மேற்கு வங்காளம், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளம் மாநிலங்களில் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்வார்கள். நீங்கள் வாழ்வில் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றை ஏற்கத் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் வாக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் எதிர்காலம்.லட்சக்கணக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் இணைந்து, சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், தெளிவான சின்னங்கள், தன்னார்வலர்களின் உதவி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்களிக்கும் அறைக்குள் போதுமான வெளிச்சமும், போதிய நிழலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நமது மதிப்பிற்குரிய மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவனிப்பும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய ஏற்பாடுகள் மூலம் அனைத்து வாக்காளர்களும் எளிதாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்ய ஆணையம் முழு அக்கறை செலுத்தி வருகிறது. ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ஆம் தேதி நடைபெறும். கேரளம் , அஸ்ஸாம்    மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4ஆம் தேதி நடைபெறும்." எனக் கூறியிருக்கிறார். அனைவருக்கும் அணுகக்கூடிய மற்றும் அமைதியான தேர்தல்கள் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் உறுதி செய்திருக்கிறது.           இந்த நிலையில் நடத்தை விதிமுறையாக              தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.

பிரச்சாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.

அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.

கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்

ரொக்கமாக பணம் கையில் எடுத்து செல்ல கட்டுப்பாடு. கடந்த தேர்தல் வரை 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்ல தடை

இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கபடும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...