நீதி அவமதிப்பு வழக்கு மன்னிப்புக் கேட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் இறுதியாக நிபந்தனை விதித்த நீதிபதி தீபம் ஏற்றப்படுமா
ஐந்து நபர்கள் தீபம் ஏற்ற மாவட்ட ஆட்சியர் அனுமதிப்பாரா? திருப்பரங்குன்றம் தீப நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகைத் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு எனத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
விசாரணையின் போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தார். அதில், "நான் உங்களுக்கு 15 நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி, ஐந்து நபர்கள் மட்டும் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுமா? என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள்" என்று கூறினார். மேலும், மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதியளிக்கும் பட்சத்தில், தற்போது நிலுவையிலுள்ள இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பொது மன்னிப்புக் கோரினார். சூழல் கருதியே முடிவு எடுக்கப்பட்டதாகவும் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் தெரிவித்தார். அடுத்த கார்த்திகைத் தீபம் வருவதற்கு முன் உரிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். கோவில் சொத்து என்பது நிர்வாகம் செய்வதாலேயே அது இந்து சமய அறநிலையத்துறையின் சொத்து அல்ல என நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.
"நீதிமன்றம் சொல்லும் ஐந்து நபர்களை மலை உச்சிககுச் சென்று தீபம் ஏற்றி பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்; அவ்வாறு அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன்' எனக் கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நாளை மறுதினம் மாவட்ட ஆட்சியர் ஆஜராகத் தேவையில்லை எனவும் மதுரை மாநகரக் காவல்துறை ஆணையர் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார். போதிய சட்ட ஞானம் இல்லாத அரசு தரப்பு மாவட்ட ஆட்சியருக்கு சட்டத்தின் வழி நடத்த இயலாத நிலைமை தான் ஆட்சியர் கேட்ட மன்னிப்பு.









கருத்துகள்