திரைப்படக் கவிஞர் வைரமுத்துவுக்கு 'ஞானபீடம்'
கவிஞர் வைரமுத்துவுக்கு `ஞானபீடம்' விருது அறிவிப்பு. அகிலன் (1975), ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவதாக ஞானபீடம் விருது பெறும்
தமிழ் இலக்கியவாதி பாடலாசிரியர் வைரமுத்து.
"இதுவரை தமிழ் பெற்ற இரண்டு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்று குறை இப்போது கழிந்தது. இந்த விருது அவரது வயதைக குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்" எற்கிறார்
வைரமுத்து நெகிழ்ச்சிக்கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
ஏழு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளைப் வென்றவர் கவிஞர் வைரமுத்து
திரைத் துறையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளவர்
தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதை காணிக்கை ஆக்குகிறேன்: என வைரமுத்து தகவல்
இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிப்பு
1975 ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002 ல் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது மூன்றாவது
முப்பால் கண்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அப்பாலும் பெரும்புகழ் கொண்ட வள்ளுவர்
தந்த அருந்தமிழ் மறைக்கு...முத்தமிழ் கவிஞர் வைரமுத்து எழுதி வெளியிடவுள்ள அரும்பத உரை தரும் பெரும்பொருள் அறிய பேராவல் கூடுகிறது..!
"நானும், எனது பேனாவும் தலைகுனியும் போது தமிழ் தலை நிமிர்ந்து நிற்கும்"-கவிஞர் வைரமுத்து.
'நான்', 'எனது' பேனா என்ற அகந்தையில் தமிழை தலை குனிய வைக்க ஒருவன் இனி பிறக்கக் கூட முடியாது, கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
கவிஞர் வைரமுத்துக்கு இலக்கியத்தில் உயர்ந்த விருதான ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பது, கவிதைகளின் அழகியல் மிடுக்கும் துடிப்பும் இன்று நகர்மயமாகி போன பல லட்சக்கணக்கான கிராமத்து இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது.
அவரின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் வரும் நாயகன் “பேயத் தேவன்”இலக்கியத்தின் ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல தெக்கத்தி மனித ஆத்மாக்களின் குவி மையமாகும்
நிலத்தோடு மண்ணோடு மரத்தோடு மக்களோடு இணைந்த உருவம் தான் பேய்த் தேவனின் உருவம்.
கள்ளிக்காட்டு இதிகாசத்தின் இந்த நாயகனின் வழியே தெற்கத்தி மாந்தர்களின் அசல் முகங்களை பிரதிபலித்த கவிஞர் இன்று இலக்கியத்தில் அடைந்திருக்கும் உச்சபட்ச அங்கீகாரம் தான் ஞானபீீடம், ஆனால் அது குறித்து கவிஞர் வண்ணநிலவன் கருத்து இது :
வைரமுத்து ஞானபீட விருதை சிபாரிசுகளைப் பிடித்துதான் வாங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாகித்ய அகாடமி விருது வாங்குவதற்காக, விருது வழங்கும் குழுவில் நான் இருக்கிறேன் என்ற தவறான தகவலில் என்னைப் பார்க்க, ஏராளமான பழங்களுடன், காவ்யா சண்முகசுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தார்.
நான் குழுவில் இல்லை என்றதும் பழத்தட்டைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார். அந்த ஆண்டு விருதுக் குழுவில் வல்லிக்கண்ணன் தான் இருந்தார். வண்ணநிலவனை வல்லிக்கண்ணன் என்று நினைத்துக் கொண்டு பழத்தட்டுடன் என்னைப் பார்க்க வந்தவர் தான் இந்த வைரமுத்து. என்கிறார்
-வண்ணநிலவன்வைரமுத்துவின் சிறுகதைத் தொகுதி ஒன்று வந்த போது அது பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டும் என்று அசோகமித்திரனைப் பெரும் டார்ச்சர் பண்ணியவர் இந்த வைரமுத்து. இப்போது அசோகமித்திரன் இல்லை. அதனால் சாட்சி சொல்ல முடியாது. உயிரோடு இருந்தாலும் அந்த பயந்த பிராமணன் சாட்சி சொல்வார் என்று சொல்வதற்கில்லை. ஆனால் வைரமுத்து அசோகமித்திரனிடம் மதிப்புரை கேட்டு மிகுந்த நெருக்கடி கொடுத்தார் என்பதை நான் நேரடியாக அறிவேன். அதற்காக வைரமுத்து தனக்குக் கொடுத்த பட்டு வேஷ்டியைக் காண்பித்து மிகுந்த கைப்புணர்வுடன் பேசினார். அசோகமித்திரனின் இயல்புக்கும் அவர் இருந்த இடத்துக்கும் வைரமுத்து போன்ற ஒருவரைப் பகைத்துக் கொள்ள முடியுமா? அதனால்தான் இதோ அதோ என்று தள்ளிப்போட்டு கடைசியில் வைரமுத்துவின் நெருக்கடி தாங்க முடியாமல் எழுதிக்கொடுத்தார். இது குறித்து அசோகமித்திரன் எவ்வளவோ வருத்தப்பட்டு என்னிடம் பேசியிருக்கிறார். இப்போது வண்ணநிலவன். தேர்வுக் குழுவில் வண்ணநிலவன் இல்லை என்று தெரிந்ததும் பழத்தட்டைத் தூக்கிக்கொண்டு போனதுதான் சிறுகதை போல் உள்ளது.
காரியம் நடக்க வேண்டுமென்றால், “என்ன வேண்டுமானாலும்” செய்வார்கள் போலிருக்கிறது!
இலக்கியம் இம்மாதிரி கழிசடை விஷயங்களுக்கு நேர் எதிரானது " என சாருநிவேதிதா கருத்து











கருத்துகள்