வெற்றி ராகுலுக்கா? கார்கேவுக்கா? சிதம்பர ரகசியம் என்ன? நீண்ட நெடிய ஆலோசனை;
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மனதை சரி செய்த ப.சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் கூடடணியின் பின்னணி இது
"நீண்ட இழுபறி , விமர்சனங்கள், தவெக வை காரணம் காட்டி பேரம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி - தி.மு.க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது மாலை நான்கு மணிக்கு திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர் உடனிருந்தார்கள் ப.சிதம்பரம் தவிர .
காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று தவெகவை முன் வைத்துப்போராடியது. நேற்றிரவு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வம் மகளின் திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற திமுக தலைவரான முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் ப.சிதம்பரம் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.
அதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலைத் தனித் தனியாகத் தொடர்பு கொண்டு முதலில் பேசியிருநத ப.சிதம்பரம். அதன் பிறகு தலைவரான மல்லிகார்ஜன கார்க்கேவிடம் பேசிய ப.சிதம்பரம், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியிலுள்ள சில சிக்கல்களைப் பற்றியும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலப் பின் விளைவுகள் குறித்தும் விளக்கியுள்ளார். இந்த முறை இனி நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ஆம் ஆண்டு மேலும் ஒரு நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் பதவியையும் பெற்றுக்கொள்ளலாம் என மல்லிகார்ஜுன கார்கேவின் மூலமே இராகுல் மனதை மாற வைத்துள்ளார் ப.சிதம்பரம்.
இறுதியாக திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் கனிமொழியும் சோனியா தரப்பைத் தொடர்பு கொண்டு, 28 தொகுதிகளைக் கொடுக்க திமுக தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று இராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம். நாடாளுமன்ற இராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை நிறுத்த வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்" என காங்கிரஸ் கட்சி தரப்புக்கு தகவலைக் கூறியுள்ளார் எம்பி யான கனிமொழி.
இன்று அதிகாலை ப.சிதம்பரம் தி.மு.க தரப்பைத் தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு இராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை சம்மதம் சொல்லிவிட்டதாகவும் திமுக தரப்பில் தகவலைக் கூறியுள்ளார்.
அதன் பிறகே இன்றுமாலை திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவெடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தையில் வருத்தத்திலிருந்த கிரிஷ் ஜோடங்கரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பது அனைவராலும் பார்க்கப்படும் நிலையில்,
தி.மு.க தர உள்ள ஒரு நாடாளுமன்ற இராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். பூர்வீகமாக கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு நபரான இந்தப் பெண், மத்தியப் பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம் வருபவரை நாடாளுமன்ற இராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை இராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அதன் மூலம் ராகுல் குளிச்சியாகவே சிலரும் இந்த பந்தயத்தில் குதித்துள்ளார்கள் அதில் பீட்டர் அல்போன்ஸ், கே. வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்தப் பந்தயத்தில் உள்ளார்கள். மீனாட்சி நடராஜன் 1999 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் இந்தியத் தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை மத்தியப் பிரதேச மாநில இளைஞர் காங்கிரஸின் தலைவராகவும்,
2008ஆம் ஆண்டில் இராகுல் இவரை அகில இந்திய காங்கிரஸ் குழுவின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீனாட்சி நடராஜன் 2009 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் மண்டசௌர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இராகுலால் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியிட்டு 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1971 ஆம் ஆண்டு முதல் வெற்றி பெற்று வந்த பாஜக வின் முக்கிய முகமான இலட்சுமிநாராயண் பாண்டேவைத் தோற்கடித்தார். "பிரதேசத் தேர்தல்கள்" என்ற முழக்கத்தை உருவாக்கியவர்
மீனாட்சி நடராஜன் பணியாளர், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான குழு மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
அவருக்கு மாற்றாக கிரிஷ்டோபர் திலக் பெயரும் பேசப்படுகிறது இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அமையலாம் ஆக இனி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் சிதம்பரம் ஆட்சியா? இல்லை மீனாட்சி ஆட்சியா? என்பதே பேசு பொருளாகும். தற்போது கட்சி பிளவுபடுவதைத் தடுத்து ப.சிதம்பரம் செய்த அரசியலுக்கு இராகுல் வைத்த செக் தான் இராஜ்யசபா வேட்பாளர் முடிவு எனலாம்.
செட்டிநாட்டுக் கலாச்சாரம் கொண்ட பகுதியில் வீட்டில் பெண்கள் கை ஓங்கியிருந்தால் மதுரை மீனாட்சி அரசியின் ஆட்சியா? எனவும், ஆண்கள் கை ஓங்கியிருப்பின் தில்லை சிதம்பரம் நடராஜர் ஆட்சியா? எனவும் பேசுவது காலகாலமாக உள்ள நடைமுறை, அதை தற்போது காங்கிரஸ் கட்சி தலைமை பின்பற்றியது, தான் அரசியலில் சிறந்தவராக கடந்த நாற்பத்தி ஐந்து வருடமாக காங்கிரஸ் கட்சியில் கோலோட்சிய ப.சிதம்பரம் கையை எடுத்து தற்போது அவர் கண்ணைக் குத்தியது காங்கிரஸ் கட்சி எனலாம், காரணம், கூட்டணி திமுகவில் வைக்கவில்லை எனில் கட்சியை இரண்டாவது முறையாக உடைக்கத் தயாரான போது இந்த இராஜதந்திரமான வேளை செய்து இறுதியாக ப.சிதம்பரம் மூலமே பேசவைத்த காங்கிரஸ் கட்சி இனி 28 தொகுதி வேட்பாளரையும் முடிவு செய்வதை எம்பி ஆனாலும், எம்எல்ஏ ஆனாலும் யார் என்பதை காங்கிரஸ் மேலிடமான ராகுல் டீம் தான் முடிவு செயயும். அந்த முடிவு விரைவில் தெரியும்.!

























கருத்துகள்