முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது மேடையில் வி.கே.சசிக்கலா நடராஜனை அவதூறாகப் பேசிய தளவாய் சுந்தரம் தொடர்பு எல்லைக்கு அப்பால்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் இரவிப்புதூர் அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில்


கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான தளவாய் சுந்தரம் பேசுகையில், " ஜெயலலிதா இறப்பதற்குக் காரணமே சசிகலாதான். இதை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய சூழலில் இன்று இருக்கிறேன். ஏனென்றால், ஊழல் வழக்குக்குக் காரணம். தானும் தன் குடும்பத்திற்கும் பல லட்சம் கோடிக்குச் சொத்தைச் சேர்த்துவிட்டு, ஜெயலவிதாவினுடைய பாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன செய்தார்கள் தெரியுமா உங்களுக்கு? ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு பாஸ்போர்ட் கிடையாது. யாருமே எதிர்த்துப் பேச முடியாத அளவுக்கு ஜெயலலிதாவிடம் மிக நெருக்கமாக இருந்தார்கள்.

ஆனால் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம் இன்று நாட்டு மக்கள் மத்தியிலே வெட்ட வெளிச்சமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த அம்மா வீட்டில் பணி செய்துகொண்டிருந்த சசிகலா இன்று கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் எவ்வளவு பணம் இருக்கும் என்று பாருங்கள். மக்களுடைய வரிப்பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார் என்பது வெட்ட வெளிச்சமாக வெளியே வந்துகொண்டிருக்கிறது" எனப் பேசியிருந்தார், இந்த நிலையில் தளவாய் சுந்தரம் மேடையில் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத்தொடர்ந்து தளவாய் சுந்தரத்திடம் சசிகலா ஆதரவாளர் ஒருவர் போனில் அழைத்து பேசியதாகக் கூறப்படும் உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி மீண்டும் சமுக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த ஆடியோவில் பேசும் நபர், "தமிழ்நாட்டில் சின்னம்மாவைப் பற்றி யார் பேசினாலும் நான் கேட்பேன். அண்ணன் என நினைத்துத்தான் நான் உன்னிடம் கேட்கிறேன். நீ அந்த வார்த்தையைப் பேசப் போய் தான் நான் கேட்கிறேன். இனிமேல் நீ சின்னம்மாவைப் பற்றியோ, அந்தக் குடும்பத்தைப் பற்றியோ பேசினால் நடக்கிறதே வேற, சொல்லிப்புட்டேன்.


சின்னம்மா இல்லைன்ன, அந்தக் குடும்பம் இல்லைன்ன நீ யாரு? உன்ன உருவாக்குனது சின்னம்மா குடும்பம். இதுதான் உனக்கு ஃபஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங். இனிமேல் நீ பேசக்கூடாது. இப்போது பேசியதற்கு எப்போது மறுப்புத் தெரிவிப்பாய் என்பதை சொல்லுண்ணே.

நாங்க கௌரவத்துக்காக வாழக்கூடியவங்க. என்கிட்ட என்ன வசதி வாய்ப்பு இல்ல சொல்லு. நான் எந்த ரூபத்திலயும் போவேன். இனிமேல் இந்த வார்த்தை வந்தால் எந்த மேடையும் நீங்க ஏறமாட்டீங்க" என எதிர்முனையில் பேசியவர் ஆவேசமாக அதில் கூறுகிறார் 

அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரத்திடம் எதிர்முனையில் பேசியது யார் எனத் தெரியவில்லை. அதே சமயம் அந்த நபரிடம் பயம் கலந்த எச்சரிக்கையுடன் பதிலளித்துப் பேசியவர் தளவாய் சுந்தரம் என்று தெரிகிறது.

அந்தப் பதிலில், "நான் மட்டுமா பேசினேன், முனுசாமி போன்ற பலரும் பேசியிருக்கிறார்கள். நான் இனி பேசமாட்டேன் எனச் சொல்லிவிட்டேனே. என்னிடம் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? இனி என் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் செய், நான் கவலைப்படவில்லை.

நான் மறுப்பு தெரிவித்தால் எந்தப் பத்திரிகையிலும் போடமாட்டார்கள். நூத்துக்கு நூறு சதவிகிதம் பேசமாட்டேன். இனி எதாவது வந்தால் நானே முந்திக்கொண்டு உனக்கு போனைப் போட்டு பேசுகிறேன். நீ என்ன அண்ணனா பார்க்கிறாய், நான் உன்னை தம்பியா பார்க்கிறேன். ன நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் பம்முகிறார் 

இனிமேல் இதுமாதிரி வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் பேசிக்க" என முடித்தார்.

எதிர்முனையில் பேசியது யார், அவரிடம் பவ்யமாகப் பேசியது ஏன், அந்த ஆடியோவை வெளியிட்டது யார், பதிலளித்தது தளவாய் சுந்தரம் தானா என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம் என்று தளவாய் சுந்தரத்திடம் பல பத்திரிகையாளர்கள்  தொலைபேசியில் தொடர்புகொண்டால் சுவிட் ஆஃப் என வருகிறது. ஆனால் இது தளவாய் சுந்தரம் குரல் என்பதை கேட்ட பலருக்கு தெரியும். 

அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசினால், 'அது பற்றி எதுவுமே தெரியவில்லை' எனப் பதில் வருகிறது. உண்மையில் என்ன நடந்தது எனத் தளவாய் சுந்தரம் வெளிப்படையாகப் பேசினால்தான் தெரியவரும். இப்படித் தான் கடந்த பத்து ஆண்டுகளாக உண்மையை மறைத்து வதந்தி பரப்பி வருகிறது ஒரு கூட்டம் அதை உண்மை தெரியாத ஜனங்கள் நம்புவதால் இவர் கொடடமடிக்க சிலர் குளிர் காய்கிறார்கள் காரணம் பகை நூல்


மயிலாப்பூரிலிருந்து மன்னார்குடி வரை நீளுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...