முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக மாணவர் அணி ராஜீவ்காந்தி பதவியைப் பறித்து பெண் நிர்வாகிக்கு வழங்கி நடவடிக்கை

திமுக மாணவர் அணி


ராஜீவ்காந்தி பதவியைப் பறித்த. காரணம் என்ன ?

திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் க.துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



ராஜிவ் காந்தி பதவி நீக்கம் குறித்து  திமுக பொதுச்செயலாளர் க.துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தியை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து. கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” எனவும் மற்றொரு அறிக்கையில், “திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ. வீரமணி என்பவர் திமுக மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், திமுகவின் முக்கிய பிரிவான மாணவரணியின் செயலாளர் மாற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்ட ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கிய தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என வழங்கியுள்ளது. பெண் விவாகரமும், கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு முட்டி மோதியதுமே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்கிறனர்.

விபரம் தெரிந்த பலர்,

நாம் தமிழர் கட்சியிலிருந்து  இரண்டு ஆண்டுகளுக்கு முன் தி.மு.க விற்கு வந்த ராஜீவ் காந்தி. தொடர்ந்து தி.மு.க-வுக்கு ஆதரவாக மேடைகளில் பேசி வந்தார். துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தினார். அதன்மூலம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குக்கு நெருக்கமானவராக மாறி பின்னர் தி.மு.க-வின் பேச்சாளர்களில் ஒருவராகவும் வந்தார்.

கடந்த ஆண்டு தி.மு.க-வின் மாணவர்  அணியின் செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது  தி.மு.க தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகு மாணவர் அணியின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்த நிலையில் இவர் குறித்து தொடர்ந்து தி.மு.க தலைமைக்குப் புகார் சென்றதன் தொடர்ச்சியாக கடந்த பத்து நாள்களுக்கு முன்பாக இவரது பதவிக்கு ஆபத்து என்கிற தகவல், தி.மு.க மேல்மட்டத் தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இந்த நிலையில், மாணவர் அணிச் செயலாளர் பதவியிலிருந்து ராஜீவ் காந்தி நீக்கப்பட்டு, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்து தி.மு.க வில் நெருக்கமானவர்களிடம் விசாரித்ததில்

`கட்சிக்கு வந்தபோது கொள்கைக்காகச் செயல்படும் கொள்கைவீரர் போல ராஜீவ் காந்தி இருந்தார். ஆனால் அடுத்த சிலமாதங்களிலேயே அவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜீவ்காந்தி , இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். அந்த மாவட்ட அமைச்சரும் இவரும் ஒரே ஜாதி என்பதால் அவரும் ஆரம்பத்தில் ராஜீவ் காந்திக்கு கேட்டதையெல்லாம் செய்து கொடுத்தார். ஒருகட்டத்தில் போக்குவரத்துத் துறையில் சத்தமில்லாமல் ராஜீவ் ஒரு ராஜ்யம் நடத்தும் அளவு செல்வாக்குடன் இருந்து வந்தார்.

தி.மு.க-விற்காக பல மேடைகளில் ஏறி களமாடினார். தலைமை கவனிக்கும் அளவுக்கு முக்கிய முகமாகவும் மாறினார். அதுவே அவருக்கு சிக்கலாகவும் மாறத் துவங்கியது.

போக்குவரத்துத் துறைக்கு புதிய அமைச்சர் வந்த பிறகு அவருடன் ராஜீவ் காந்தி இணைந்து போனார். இதற்குப் பின்னால் துணை முதல்வர் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகிய இருவருடன் ராஜீவ் காந்தி காட்டிய நெருக்கமே இவரை பிற அமைச்சர்கள் மத்தியில் இணையவும் வைத்தது.

இவர் மனைவியின் ஊர் கோயம்புத்துார் என்பதால், தற்போது குடும்பத்துடன் கோயமுத்தூர் குடிபெயர்ந்தார். அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடவும் ராஜீவ் காந்தி திட்டமிட்டார். கோயம்பத்தூர் மண்டலத்திற்கு பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அவருடனே இவர் ஒரு கட்டத்தில் மோதல் போக்கைக் கையாண்டார்.


தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது. 

மற்றொரு தகவல் கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலருக்கும் இரவு


நேரத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் வழியாக தேவையற்ற முறையில் மெசேஜ் செய்திருக்கிறார். அவர்கள் சொல்லிப் பார்த்தும், இவர் நிறுத்தவில்லை. அதையடுத்து அந்தப் பெண் நிர்வாகிகள், இந்த விவகாரம் குறித்து மேலிடத்துக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.


மற்றொருபுறம் செந்தில் பாலாஜியும் கோயம்பத்தூரில் தனி கவணம் செலுத்தி வருகிறார் ராஜீவ் காந்தி என, முதல்வர் காதில் விஷயத்தைப் போட்டுடைத்தார். சில அமைச்சர்கள், தேவையில்லாமல் பல டெண்டர் விவகாரங்களில் தலையிட்டு, தனக்கு வேண்டியவர்களுக்காக ராஜீவ் காந்தி மோதுகிறார் என தீ பற்றவைத்தனர்.

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது.ஈரோடு இரத்தினசாமி மகளான வீரமணி ஜெயக்குமார் தற்போது மணவர் அணியின் செயலாளராக நியமனம் .ஆனால் ராஜீவ்காந்தி குறித்து தொடர்ந்து தலைமைக்கு அழுத்தம் வரவே, அவருக்கான பொறுப்புகளை முழுமையாக பிடுங்க தலைமை திட்டமிட்டது. அப்படி செய்தால் அது பேசுபொருளாக மாறிவிடும் என்று கருதி, கொள்கை பரப்பு இணைச் செயலாளர் எனும் பதவிக்கு அவரை நியமித்துள்ளனர்" என்கின்றனர்.

மாணவர் அணிச் செயலாளர் பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் அந்தப் பதவியைப் பிடிங்கியது தி.மு.க தலைமை. புதிய பொறுப்பையும் தனக்கான பாணியிலேயே வரவேற்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ராஜீவ் காந்தி. "தி.மு.க-வின் முக்கிய முகமாக வரவேண்டியவர் இப்படி அவசரப்பட்டு தனது இருப்பை காலி செய்துகொண்டாரே" என வருத்தப்படுகிறார்கள் மூத்த சில நிர்வாகிகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...