அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடந்த மீனாக்ஷ் பஞ்சநாதம் நினைவு அறக்கட்டளைத் துவக்க விழா|
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மீனாக்ஷ் பஞ்சநாதம் நினைவு அறக்கட்டளையின் துவக்க விழா நடைபெற்றது, அழகப்பா அரசு கலைக் கல்லூரி, புவியமைப்பியல் துறையில் நடைபெற்ற விழாவில் இந்த அறக்கட்டளையின் சார்பில் கல்விக்கு நிதி உதவியானது நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்குத் தரப்படும் , அதில் முதலாவதாக, அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் புவியமைப்பியல் துறையில் இளம் அறிவியல் பட்டப்படிப்பு முடித்து, அழகப்பா அரசு கலைக் கல்லூரியிலேயே தொடரும் புவியமைப்பியல் துறையில் முதுகலை அறிவியல் முதலாமாண்டில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியருள், இளநிலையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவருக்கும், ஒரு மாணவியருக்கும் பரிசுத் தொகை ரூபாய் பதினைந்தாயிரம் வழங்கப்படும் எனவும் .
இரண்டாவதாக, முதுகலை அறிவியல் பட்டப்படிப்பை இரண்டாண்டுகள் அழகப்பா அரசு கலைக் கல்லூரியிலேயே தொடர்ந்து நான்கு பருவங்களிலும் சேர்த்து முதல் மதிப்பெண் பெறும் மாணவர் மற்றும் மாணவியருக்கு ஊக்கத்தொகை ரூபாய் பதினைந்தாயிரம் வழங்கப்படும் என ஆஸ்திரேலியாவில் உள்ள நீர் திட்டமிடல் மற்றும் சே வைகள் துறையின் மேலாளரும், இந்த அறக்கட்டளையை தனது தாயாரின் பெயரில் நிறுவியவருமான டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முனைவர் நாச்சியப்பன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி, வரவேற்புரையாற்றுகையில், அறக்கட்டளை அமைத்து உதவித்தொகை வழங்குவது மாணவர்களின் நலனுக்கு மிகவும் சிறந்தது எனவும் இந்த உதவித் தொகை மாணவர்களின் உயர் கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
அறக்கட்டளையின் நோக்கம் குறித்து ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், இந்த அறக்கட்டளையின் மற்றொரு உறுப்பினருமான முனைவர் உமாபதி, அறக்கட்டளை உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
காரைக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், இந்தத்துறையின் முன்னாள் மாணவருமான எஸ்.மாங்குடி பேசுகையில் மாணவர்கள் சிறந்தவர்களாகவும் பொறுப்புமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களை மாணவர்கள், அவர்கள் வாழ்க்கையின் எந்த உயரத்தை எட்டினாலும் மதித்து நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார், முன்னாள் கரக்பூர், பேராசிரியரும், இத்துறையின் முன்னாள் மாணவருமான முனைவர் மாணிக்கவாசகம், இக்கல்லூரியின், புவியமைப்பியல் துறையில் பயின்ற ஒரு முன்னாள் மாணவர், அறக்கட்டளை தொடங்கி வருங்கால மாணவர்களுக்கு உதவ நினைப்பது இதுவே முதல்முறை என்று குறிப்பிட்டார்.
இத்துறையின் முன்னாள் பேராசிரியரும், எத்தியோப்பியாவின் அட்டமா அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், புவியமைப்பியல் துறையின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவருமான முனைவர் லாரன்ஸ், அறக்கட்டளையின் அவசியம் மற்றும் எதிர் காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்
இந்த நிகழ்ச்சியில் நன்றி உரையாற்றிய புவியமைப்பியல் துறைத் தலைவர் முனைவர். டாக்டர் உதயகணேஷ் பேசும் போது, இத்துறையின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் முன்னாள் மாணவர்களின் செயல்பாடுகளை விவரித்து நன்றி தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாணவனும் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாக உயர் வதன் மூலம் தாங்கள் படித்த கல்லூரியில் இத்துறையை சமுதாயத்தில் சிறந்த ஒன்றாக முன்னிறுத்த உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார் இதன் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.















கருத்துகள்