சிவகங்கை ரூபாய்.1 லட்சம் லஞ்சம் உதவி செயற் பொறியாளர் கைது நெடுஞ்சாலைத்துறை அலுவலர் கைது
ரூபாய் .1 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கையில் அரசு ஒப்பந்ததார் கந்தசாமி. இவர் பெரியகிளுவச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை செய்து முடித்த வகையில் அவருக்கு ரூபாய் .19 லட்சம் நிலுவைத் தொகை அரசிடம் வரவேண்டியது இருந்தது. சிவகங்கை நெடுஞ்சாலைத் துறையில் உதவிக் கோட்ட செயற்பொறியாளர் சையது இப்ராஹிம் என்பவரை அணுகி நிலுவை தொகையை உடன் விடுவித்துத் தருமாறு கோரினார். பணத்தை விடுவிக்க, தமக்கு லஞ்சமாக ரூபாய் .1.20 லட்சம் தரவேண்டும் என்று அவர் நிர்பந்தித்துள்ளார். இதை ஏற்காத கந்தசாமி, மீண்டும்
செயற்பொறியாளர் சையது இப்ராஹிமை அணுகி உள்ளார். அப்போது லஞ்சமாக ரூபாய் .1 லட்சம் கொடுத்தால் போதும் என்று பேரம் முடிவானது. இருப்பினும் பணத்தை தர விரும்பாத அவர் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அது குறித்து புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி, பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் .1 லட்சத்தை சையது இப்ராஹிமிடம், அரசு சாட்சி முன்னிலையில் கந்தசாமி கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜான்பிரிட்டோ தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்தனர். அவர் வைத்திருந்த லஞ்சம் ரூபாய் .1 லட்சத்தையும் பறிமுதல் செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்று பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்








கருத்துகள்