தவெக அரசு அமைச்சரவை விரிவாக்கம்.. விஎஸ் பாபு, சத்யபாமா உள்ளிட்டோருக்கு காத்திருக்கும் வாய்ப்பு முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை இரண்டொரு நாளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திருப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா, சேலம் தொகுதி தமிழன் பார்த்திபன், இராணிப்பேட்டை தொகுதி தாஹிரா உள்ளிட்டோர் தவெக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்
கடந்த மே 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மே 10ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது விஜய்யுடன் மேலும் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மேலும் அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை.
வேளாண்மை, உயர்கல்வி, ஹந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழிலாளர் நலன், பால்வளத்துறை, மீன்வளத்துறை, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை, வனத்துறை உள்ளிட்ட 20 முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.
அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்டு வரும் காலதாமதம் காரணமாக அரசின் செயல்திறன் பாதிக்கப்படும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதனால் அமைச்சர்கள் இல்லாத துறைகள் சார்ந்த பணிகள் தொய்வடையும் சூழல் நிலவுகிறது.
மேலும், 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகளும் தாமதமாகியுள்ளன. அனைத்து துறைகளுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தலைமையில் ஆலோசனைக்குப் பிறகு துறை சார்ந்த அறிக்கைகள் வழங்கப்பட்ட பிறகே, பட்ஜெட்டை தயாரிக்க முடியும். இந்த நிலையில், நாளை மறுநாள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனத் தகவல்
அமைச்சரவை விரிவாக்கம் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவதை முன்னிட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா மே 21 வியாழக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் நடைபெறும் என தகவல். நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படக்கூடும் என கூறப்படும் நிலையில் நாளை மாநில பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் சென்னை வருகிறார் தவெக விரிவாக்க அமைச்சரவையில் திருப்பூர் வடக்குத் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக துணைப் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி, திமுக அமைச்சர் காந்தியை தோற்கடித்த தாஹிரா உள்ளிட்டோர் எனக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு வி.எம்.எஸ். மதார் பத்ருதீன் முஸ்தஃபா, அல்லது அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் முகமது பர்வேஸ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தகவல்
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபு, ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் மரிய வில்சன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சரத் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தமிழன் பார்த்திபன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லணை உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு அமைச்சர்களா அல்லது ஒருவரா என்று வினா எழும் நிலையில் மேலூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், கல்லூரி நடத்தும் அவர் உயர் கல்வி அமைச்சர் என தகவல் பரவும் விஸ்வநாதன் இரண்டாவது நபர் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத் துறையும் முதலாவது நபராக ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை தவெக பெற்றால் நாங்கள் கொடுத்த ஆதரவை மறுபாிசீலனை செய்வோம் எனக் கூறும் CPM மாநில செயலாளா் சண்முகம் மற்றும் சிபிஐ மற்றும் விசிக வினர், எதிர்த்து வெளியேறினால் ஒருபக்கம் சபாநாயகர் அதிமுக கொரடா யார் என தீர்ப்பு அறிவிப்பு வந்த பின் டாக்டர் சி விஜயபாஸ்கர் அதிக உறுப்பினர் 25 ஆதரவு என கொரடாவாகத் தேர்வானால், எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பதவி பறிபோகலாம், சிவி. சண்முகம் தரப்பு புதிய அமைசர்களாக, எஸ். பி. வேலுமணி, சி. வி. சண்முகம், டாக்டர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் ஆகியோருடன், அமமுக சார்பில் மன்னார்குடி காமராஜ் அமைச்சர் வாய்ப்பு கிடைக்கலாம். அதன் பின் அதிமுக எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு நீதிமன்றம் மூலமே தீர்வு தேடவேண்டிய நிலை. அரசியல் களம் புதிய நகர்வை நோக்கி நகர்கிறது.
கருத்துகள்