முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் வாக்களித்த என்ஆர்ஐ 3 பேர் கைது

தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் வாக்களித்த என்ஆர்ஐ 3 பேர் கைது

கனடா நாட்டு குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி, மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்; குடியுரிமை பெற்ற நாடுகளுக்குச் செல்ல விமான நிலையம் சென்றபோது விரல்களில் இருந்த மையால் பிடிபட்டனர்தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெளிநாட்டினர் வாக்களித்திருப்பது தொடர்பாக நேற்றிரவு வரை 25 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக தொடர்ந்து வெளிநாட்டினர் கைதாகி வருகின்றனர். தேர்தல் முடிந்த நிலையில் அவர்கள் தமிழகத்திலிருந்து தங்கள் நாடுகளுக்கு செல்ல முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர்களின் விரலில் இருந்த ஓட்டு போட்டதற்காக அடையாளத்திற்கு வைக்கப்பட்ட மை அவர்களைக் காட்டி கொடுத்திருக்கிறது.

கையில் மை உடன், வெளிநாட்டு பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களை பிடித்து விசாரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு . அதையடுத்து சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி என சர்வதேச விமான நிலையங்களில்,  ஈடி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில் நேற்று முன்தினம் வரை 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்று மேலும் 2 பேர் கைதாகியிருக்கின்றனர். ஒருவேளை இந்த எண்ணிக்கை அதிகரித்தால் தேர்தல் வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் சேர்த்து வந்த பெரிய சிக்கல் ஏற்படும்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், இலங்கை போர் அகதிகள் மற்றும் லண்டன், பாரீஸ், ஜெனீவா, கானடா என வசிக்கும் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு குடியுரிமை பெற்றவர்கள். ஆனால், இவர்களிடம் இன்னும் இந்திய முகவரியில் உள்ள ஆதார் அட்டைகள் வாக்காளர் அடையாள அட்டை இருந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்தி இவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்திருக்கிறார்கள்.

இவர்கள் அணைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வந்தவர்கள். தகுந்த முறையில் விசாரணை தேவை.

இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS): போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act, 1950): தகுதியற்ற நபர் வாக்களித்தல் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் (Foreigners Act): விசா விதிமுறைகளை மீறுதல் மற்றும் குடியுரிமையை மறைத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் சமயத்தில் தமிழ்நாடு வந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் வெளிநாட்டினரின் பட்டியலை எடுத்து, அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்து உளவுத்துறையும் காவல்துறையும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். முறையான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடந்தும், இவ்வளவு பேர் எப்படி வாக்களித்தனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஒருவேளை இப்படி சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவருக்கும், தோல்வியடைந்தவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும்போது, அங்கு இத்தனை சட்டவிரோத வாக்குகள் பதிவாகியிருப்பது தேர்தல் முடிவையே கேள்விக்குறியாக்கும்.

தோல்வியடைந்த வேட்பாளர் நீதிமன்றத்தில் 'தேர்தல் வழக்கு' தொடரலாம். நீதிமன்றம் அந்தத் தொகுதியின் முடிவை ரத்து செய்யவோ அல்லது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவோ உத்தரவிட வாய்ப்புள்ளது. எனவே இது சீமான் கட்சிக்குத் தான் சிக்கலாக அமையும் என்று சொல்லப்படுகிறது.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் யாரும் வாக்களிக்க முடியாது, SIR 2026 ன் படி சீர்திருத்தங்கள் செய்த பட்டியல் பிறகு எப்படி வெளிநாட்டினர் வாக்களித்திருக்க முடியும், உள்நாட்டு நபர்கள் வெளிநாட்டில் பாஸ்போர்ட் மூலம் வேலைக்கு சென்றவர்கள் சிட்டிசன் என்ற முறையில் சொந்த ஊர் வந்து வாக்களிப்நது எப்படி குற்றமாகும், இதில் இலங்கை அகதிகள் தான் அயல்நாடுகளில் இருந்து சீமானை ஆதரித்து  இந்திய சிட்டிசன் இல்லாத பலர் கருப்புப் பணத்தைத் திரட்டி  அமலாக்கத்துறை அறியாமல் வந்து நாதக வின் தலைவரிடம் கொடுத்துச் செல்வதை  சிபிஐ அறியும், ஆனால் அவர்களைக் கைது செய்ததா PMLA சட்டப்படி ED எதுவும் நடவடிக்கை எடுத்ததா தெரியவில்லை,  ஆனால் அயல் நாடு வாழும் இந்தியக் குடியுரிமை பெற்ற வாக்காளர் வாக்களிக்க என்ன தடை என்பது பலருக்கு தெரியவில்லை. இதில் சிலர் தவெக மீது அவதூறு பரப்பி வருவதை காண முடிகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...