ராகுல் மற்றும் கார்கே கோஷ்டிப்பூசலால் கேரள முதல்வராகத் தேர்வான வி.டி. சதீசன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால் பெயரை ராகுல் முன்மொழிந்த நிலையில்,
ரமேஷ் சென்னிதாலா பெயரை மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்த நிலையில் இருவருக்குமான கோஷ்டி பூசல் தீர ஐந்து நாட்கள் கடந்தது, இந்த நிலையில் தற்போது கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டார், கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டதை மனதார வரவேற்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஜக்கிய ஜனநாயக முன்னணி எனும் கூட்டணி 102 தொகுதிகளிலும், கம்யூனிஸட் இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றியை பெற்ற நிலையில்
காங்கிரஸ் கட்சியினுள் கேரளம் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்ததனால், கேரளத்தின் முதல்வராகப் பதவியேற்கப் போவது யார் என்பதில் காங்கிரஸ் கட்சியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், கேரளம் மாநிலத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசனை காங்கிரஸ் கட்சித் தலைமை நேற்று மே மாதம் 14 ஆம் தேதி அறிவித்தது அதை சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ”கேரளத்தின் முதல்வராக வி.டி. சதீசனை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளது. அந்த முடிவை நான் மனதார வரவேற்கிறேன். இதற்காக அவரை நான் வாழ்த்துகிறேன். கேரள மக்கள் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஒரு பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளனர் என நான் நினைக்கிறேன். வி.டி. சதீசன் தலைமையிலான அரசால் கேரள மக்களின் விருப்பங்களையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும்” எனத் தெரிவித்தார்.கேரளத்தில் ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு ஆளுநர் அர்லேகர் இன்று அழைப்பு விடுத்தார். திங்களன்று மே மாதம் 18 ஆம் தேதி வி.டி. சதீசன் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முதல்வராகப் பதவியேற்கும் வி.டி. சதீசனுடன் 21 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்பதாகக் கூறப்படுகிறது. புதிய அரசுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் மே மாதம் 21 ஆம் தேதி அன்று நடைபெறும் எனவும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அன்று பதவியேற்பார்கள் எனவும் தகவல், கேரளத்தின் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.






கருத்துகள்