மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கறிஞர் அங்கி அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரான விவகாரம்: இந்திய பார் கவுன்சில் மேற்கு வங்க மாநில பார்கவுன்சிலுக்கு அவசர உத்தரவு”
Bar Council of India இந்தியாவில் வழக்கறிஞர் தொழிலை ஒழுங்குபடுத்தும் உச்ச தொழில்முறை அமைப்பாகும். Advocates Act, 1961 சட்டத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, வழக்கறிஞர்களின் பதிவு, தொழில்முறை ஒழுக்கம், உடை விதிமுறைகள், தொழில் தொடரும் தகுதி போன்றவற்றை கண்காணிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
அண்மையில், Mamata Banerjee அவர்கள் Calcutta High Court வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான கருப்பு அங்கி மற்றும் வெள்ளை பேண்ட் அணிந்து தோன்றிய சம்பவம் தேசிய அளவில் சட்ட விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதையடுத்து இந்திய பார் கவுன்சில், State Bar Council of West Bengal செயலாளருக்கு அவசர உத்தரவு அனுப்பி, மம்தா பானர்ஜியின் வழக்கறிஞர் பதிவு மற்றும் practice status தொடர்பான முழு விவரங்களையும் கோரியுள்ளது.
சட்ட ரீதியாக ஏன் இது முக்கியம்?
Advocates Act, 1961 படி, மாநில பார் கவுன்சிலில் முறையாக பதிவு செய்யப்பட்டு, பெயர் State Roll-ல் இடம்பெற்றுள்ள நபரே “Advocate” ஆக நீதிமன்றத்தில் ஆஜராகும் உரிமை பெறுகிறார்.
மேலும், இந்திய பார் கவுன்சில் விதிகள் (BCI Rules – Part VI, Chapter IV) படி, நீதிமன்றத்தில் ஆஜராகும் போது அணியப்படும்:
கருப்பு கோட், Advocate gown, White bands, Prescribed dress code
இவை பதிவு செய்யப்பட்ட மற்றும் practice செய்ய தகுதி பெற்ற வழக்கறிஞர்களுக்கே உரியது.
ஒருவர் அரசியல் அல்லது அரசியலமைப்பு பதவியில் இருந்த காலத்தில் வழக்கறிஞர் தொழிலை நிறுத்தியிருந்தால், மீண்டும் practice தொடருவதற்கு தேவையான அறிவிப்பு அல்லது பதிவுகள் இருக்க வேண்டியது சட்ட ரீதியாக முக்கியமானது.
இந்திய பார் கவுன்சில் கேள்வி எழுப்பிய முக்கிய அம்சங்கள்:
இந்திய பார் கவுன்சில் கீழ்கண்ட 9 முக்கிய விவரங்களை கோரியுள்ளது:
Enrollment Number உள்ளதா?
Enrollment date என்ன?
தற்போது State Roll-ல் பெயர் உள்ளதா?
Practice suspension / cessation அறிவித்தாரா?
அதற்கான ஆவணங்கள் உள்ளனவா?
மீண்டும் practice தொடங்க விண்ணப்பித்தாரா?
அது ஏற்கப்பட்டதா?
Certificate of Practice செல்லுபடியாக உள்ளதா?
வேறு disciplinary அல்லது administrative records உள்ளனவா?
இந்த விவகாரத்தில் இந்திய பார் கவுன்சில் எந்த முடிவையும் முன்கூட்டியே கூறவில்லை. மாறாக, “அதிகாரப்பூர்வ பதிவுகளின் அடிப்படையில் உண்மை நிலை மட்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது இயற்கை நீதி (Natural Justice) மற்றும் ஆவண ஆதார அடிப்படையிலான நிர்வாக சட்டக் கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறது.
இந்த விவகாரம் ஒரு தனிநபர் குறித்து மட்டுமல்ல; “வழக்கறிஞர் உடை அணியும் உரிமை யாருக்கு?”, “State Roll-ல் பெயர் இருப்பது மட்டும் போதுமா?”, “Public office வகித்தவர் மீண்டும் practice தொடங்க என்ன நடைமுறை?” போன்ற முக்கிய சட்டக் கேள்விகளையும் எழுப்புகிறது.
இந்த விசாரணையின் முடிவு, எதிர்காலத்தில் அரசியல் பதவியில் இருந்தவர்கள் மீண்டும் வழக்கறிஞர் தொழிலுக்கு திரும்பும் நடைமுறைகளில் முக்கிய முன்னுதாரணமாக அமையக்கூடும்.





கருத்துகள்