ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மேற்கு வங்காள முன்னால் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடந்து கால வெற்றிக்குப் பின்னால் அமைச்சர் கீர்த்தனா
கூட்டுக குழுவில் வழிகாட்டி ஆலோசனைப் பிரதிநிதி என 29 வயதில் அமைச்சர் என கீர்த்தனாவுக்கு சிறு வயதில் மறுபக்கம் உண்டு,
சிவகாசி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஆன பின் தொழில் அமைச்சர் கீர்த்தானா சம்பத் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதை நம்பவே முடியவில்லை. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு இளமையான ஒரு அமைச்சரவையை நீங்கள் பார்க்க முடியாது என்றே நான் சொல்வேன். எங்களுக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பை யாரும் வழங்கியிருக்க மாட்டார்கள். நாங்கள் எவ்வளவு சிறப்பாக அரசாங்கத்தை நடத்த முடியும் என்பதை இந்த உலகிற்குக் காட்டப் போகிறோம்." என்றார். கீர்த்தனா சம்பத் அவர் யார் எனப் பார்ப்போம்.
கீர்த்தனா தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, அரசியல் ஆலோசகராகவும் டிஜிட்டல் பிரச்சார உத்தியாளராகவும் பணியாற்றியவர். கீர்த்தனா 'Showtime Consulting' என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றிய போது, ஆந்திரப் பிரதேசம் தெலுங்கு தேசம் கட்சிக்காக பல்வேறு தேர்தல் பிரச்சார உத்திகளை வகுப்பதில் அந்த நிறுவனத்தில் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் அக்கட்சியின் செல்வாக்கை உயர்த்த தீவிரமாக உழைத்தார். சந்திரபாபு நாயுடு முதல்வராக உழைத்தவரை, அடையாளம் கண்டு தனது தவெகவில் இணைய அழைத்தார் விஜய். அப்போது அவர் ஆந்திரப்பரதேசத்தில் வெளியான சிவகாசி டப்பிங் தெலுங்குப் படம் பார்த்த ரசிகை மட்டுமே.
இதனிடையே அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த கீர்த்தனா, பின்னாளில் நேரடியாகக் களமிறங்க முடிவு செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு, தனது 29 வயதிலேயே வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரராகி
தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். அரசியல் களத்தில் வியூகங்களை வகுத்துக் கொடுத்த ஒருவர், இன்று அதே களத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்பது பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் கீர்த்தானா, " "எல்லாம் மாறப்போகிறது, அந்த மாற்றம் இதோ வந்துவிட்டது. தளபதி முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கே இருக்கிறார்... ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்து, வேட்பாளராக வாய்ப்பு பெற்று, இன்று அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருப்பது என்பது வேறு எந்த மாநிலத்திலாவது எளிதான காரியமா? இல்லை.
அவர் (விஜய்) திறமையை மட்டுமே பார்க்கிறார், ஆற்றலை பார்க்கிறார்; அந்த மாற்றங்கள் அனைத்தையும் கொண்டு வர நாங்கள் இங்கே இருக்கிறோம்.
இந்த அரசாங்கம் 35 முதல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும். மிக நீண்ட காலம் நீடிக்கப் போகும் அரசாங்கமாக நாங்கள் இருக்கப் போகிறோம் என்கிறார். அமைச்சர் கீர்த்தனா,
இதனிடையே அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா,
முன்னதாக தேர்தல் முடிவு வந்த அன்று ஹிந்தியில் பேசியதற்காக தேசிய அளவில் கீர்த்தனா பேசு பொருளானார். அதேபோல் தெலுங்கில் பேசியதற்காகவும் திகைப்புடன் பார்க்கப்பட்டார். எனினும் ஹிந்தியில் பேசியதற்காக அவர் மீது விமர்சனங்களும் எழுந்தன. இதுபற்றி கருத்துத் தெரிவித்த கீர்த்தனா, எனது கட்சியின் பிரதிநிதித்துவத்தை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரப்ப விரும்புகிறேன். விஜய்யை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு உதாரணம் மட்டும் தான்.. அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும்.. அனைவரும் அரசியலில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம்" என்றார் .
அமைச்சர் கீர்த்தனா, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சம்பத்தின் பயணம், அரசியல் ஆலோசனை எவ்வாறு தீவிர அரசியல் மற்றும் தலைமைத்துவத்தை நோக்கிய வலுவான பாதையாக மாற்றமானது. ஆச்சர்யமான உண்மை
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் படிப்பையும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் முதுகலைப் பட்டத்தையும் முடித்தவர் பிரமல் அறக்கட்டளையில் (NGO 2018-2020 பேட்ச்) காந்தி பெல்லோஷிப்பின் ஒரு பகுதியாகவும் இருந்தார், அங்கு அவர் ஒருங்கிணைப்பாளர் பணி வெளிப்பாடு மற்றும் நிர்வாகப் புரிதலைப் பெற்றார்.
பின்னர்,அரசியல் ஆலோசனைக் குழுவில் நுழைந்தார் மற்றும் ஷோடைம் கன்சல்டிங்கில் பணியாற்றினார், டிஜிட்டல் தொடர்பு, பிரச்சார உத்தி, தேர்தல் மேலாண்மை மற்றும் அரசியல் செயல்பாடுகளில் அனுபவத்தைப் பெற்றார்.
பின்னர் ஆலோசகராக இருந்து தவெகவில் இணைந்து வேட்பாளராக மாறி
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர், விருதுநகர், சத்திரரெட்டியபட்டி, என்.சி.ஒ.காலணியில் இருந்து வரும் அமைச்சர் பல்கலைக்கழகப் படிப்பு, அரசியல் ஆலோசகராக இருந்த அனுபவம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாகப் பேசும் திறனுள்ள ஒரு புதிய தலைமுறை அரசியல்வாதி 68,709 வாக்குகளைப் பெற்று, இந்திய தேசிய காங்கிரசின் அசோகன் ஜி என்பவரை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். மேலும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர், ஆரம்ப காலத்தில் சிவகாசி ஒலிம்பிக் தியேட்டரில் சினிமா சுவரொட்டி ஒட்டிய ராஜேந்திரன் என்ற நபர் பின்னர் அமைதிப்படை அம்மாவாசை போல ராஜேந்திர பாலாஜி ஆகி பலரை ஏமாற்றி ஆவின் பால்கோவா ஊழல் செய்த நபரை மூன்றாமிடம் தள்ளி தோற்கடித்து சிவகாசியிலிருந்து முதல் பெண் எம்.எல்.ஏ. வாகி தற்போது அமைச்சர் என வியூக வகுப்பு வார் ரூம் அறைகளிலிருந்து முதல் முயற்சியிலேயே தேர்தலில் வெற்றி பெறுவது வரை.
அரசியல் ஆலோசகர்கள் அரசியல்வாதிகளாக மாறும் புதிய சகாப்தத்தை சிவகாசியில் இருந்து இந்தியா காண்கிறது.
தொழில்துறை அமைச்சராக செல்வி கீர்த்தனா சம்பத் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் சிவகாசி அச்சகத் தொழில் மற்றும் படடாசுத் தொழில் சார்ந்த பகுதி இங்கு வளர்ச்சிக்கு முன் மக்கள் விபத்து இல்லாமல் பணி செய்வதே அவசியம் மேலும் தீக்காய சிகிச்சை பிரிவு எண்ணிக்கை அதிகரிப்பும், தொழிலாளர் நலத்துறை பணிப் பாதுகாப்பு மிகவும் அவசியம் அவசரம்,
அமைச்சரின் அதிகார வரம்பிற்குள் வரும் தொழிற்துறையில் அமைச்சரின் நேரடி வழிகாட்டுதலிவா இயங்கும் தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs)
சிப்காட் (SIPCOT - State Industries Promotion Corporation of TN)
தொழிற்சாலைகள் அமைப்பதற்கான பிரம்மாண்டமான தொழில் பூங்காக்களை (Industrial Parks) உருவாக்குதல் மற்றும் அதற்கான நிலங்களை கையகப்படுத்தி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்.
டிட்கோ (TIDCO - Tamil Nadu Industrial Development Corporation)
அதிகாரம்: கூட்டுத்துறை (Joint Sector) மூலம் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துதல். (உதாரணமாக: வான்வெளிப் பூங்காக்கள், பிரம்மாண்ட சூரியசக்தி பூங்காக்கள், மற்றும் சென்னைக்கு அருகில் அமையவுள்ள பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டங்கள்).
டிஐஐசி (TIIC - Tamil Nadu Industrial Investment Corporation Ltd)
புதிய மற்றும் நடுத்தரத் தொழில்களைத் தொடங்குவதற்கான நீண்டகாலக் கடனுதவிகள் மற்றும் மானியங்களை வழங்கும் நிதிகள்,
முக்கிய பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்கள்
அமைச்சரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சில பெரிய உற்பத்திப் பிரிவுகள்:
TNPL (Tamil Nadu Newsprint and Papers Limited): காகித உற்பத்தி நிறுவனம்.
TANCEM (Tamil Nadu Cements Corporation): அரசு சிமெண்ட் உற்பத்தி நிறுவனம்.
சர்க்கரைத் துறை (Department of Sugar): கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளின் மேலாண்மை.
TNSALT: தமிழ்நாடு உப்பு நிறுவனம்.
முக்கிய அதிகாரங்கள் (Powers of the Minister)
ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் (MoUs): பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தங்களை மாநில அரசின் சார்பில் அங்கீகரித்து ஒப்பந்தம் கையெழுத்திடும் அதிகாரம். மற்றும் செயல்படுத்தும் திறன்,
தொழில்துறை நில ஒதுக்கீடு: சிப்காட் வளாகங்களில் எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு நிலங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி முடிவு எடுக்கவும், புதிய தொழிற்சாலைகளுக்கு அரசு வழங்கும் மின்சார மானியம், நில முத்திரைத்தாள் கட்டண விலக்கு மற்றும் மூலதன மானியங்களை (Subsidies) அனுமதிக்கும் அதிகாரம்.
சர்வதேசப் பிரதிநிதித்துவம்: தமிழ்நாட்டிற்கு அயல் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சருடன் சேர்ந்தோ அல்லது தார்மீக ரீதியாகத் தனித்தோ வெளிநாடுகளுக்குச் சென்று உலகளாவிய வணிகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தூதரக அதிகாரம். மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைசகத்தின் ஆதரவை பெறுதல் உள்ளிட்ட பலவும் அடங்கும், இதில் சாமானியன் நடத்தும் சிறு குறு தொழிலும் அடங்கும். அரசியல் ஆலோசகர்களாக, அவர்கள் ஏற்கனவே கதை உருவாக்கம், பிராண்டிங், தொகுதி புரிதல், நிகழ்ச்சி நிரல் அமைத்தல், வாக்காளர் நடத்தை பகுப்பாய்வு மற்றும் பிரச்சாரத்தை செயல்படுத்துதல் போன்ற மிகவும் பொருத்தமான திறன்களை உருவாக்குகின்றனர். தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் தலைவர்களாக மாறுவதற்குத் தேவையான அதே திறன்கள் இவை தான். இது ஆரம்பம் தான். வரவிருக்கும் ஆண்டுகளில், இன்னும் பல அரசியல் ஆலோசகர்கள் அரசியலுக்கு வருவதையும், தேர்தல்களில் வெற்றி பெறுவதையும், களத்தில் அளவிடக்கூடிய தாக்கத்தை உருவாக்குவதையும் தமிழ்நாடு மூலமே இந்தியா காணும்.
அதுதான் அரசியல் ஆலோசனையின் எதிர்காலம். பிகாரில் பிரசாந்த் கிஷோருக்கு கிடைக்காத வெற்றி கீர்த்தனா சம்பத் பெற்றது சிறப்பு.
வேலை வாய்ப்புகள், தொழில்துறை நுண்ணறிவு மற்றும் பலவற்றிற்கு, இங்கே அனுபவம் கலந்த அரசியல் அறிவு தேவை. அடுத்த தலைமுறை அரசியல் இது.
சிவகாசி படத்தில் விஜய் ரசிகையான கீர்த்தனா சிவகாசியில் வென்று அமைச்சர் என மத்தாப்பாகச் ஜொலிக்கும் அமைச்சர் கீர்த்தனாவுக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வாழ்த்துக்கள் 💐 இனி
தமிழ்நாடு அமைச்சர்களாக இருந்த தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. 2006-2010 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் . 76.40 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையால் 2012-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, 2016-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நிதியமைச்சரான தங்கம் தென்னரசை வழக்கில் விடுவித்தது. சிறப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட இந்த விடுதலையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை முறைகள் குறித்தும் நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பிய நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த மறுவிசாரணை உத்தரவை எதிர்த்து தங்கம் தென்னரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது தற்போது அமைச்சர் இந்த வழக்கில் தடையை அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் மூலம் உடைத்து அவரை சவால் செய்வதே அவசியம் அடுத்து
.2016-2021 காலகட்டத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த இராஜேந்திர பாலாஜி, ஆவின் மற்றும் பிற அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூபாய் .3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் அளித்த வழக்கில் அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு ஆளுநர் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளார் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஊழல் மற்றும் மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதிலும் கவனம் வைத்தால் கடந்த கால ஊழலுக்கு தீர்வு கிடைக்கும் இது மக்கள் அறம் சார்ந்து அமைச்சரிடம் வைக்கும் கோரிக்கை

.jpg)



.jpg)

.jpg)


























கருத்துகள்